My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


கோடை சாகுபடிக்கு ஏற்ற ஏ.டி.எல்.1 கேழ்வரகு!

கேழ்வரகு

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர்.

கோடைப் பருவத்தில் நீர் வசதியுள்ள இடங்களில், குறைந்த வயது மற்றும் குறைந்த நீரில் விளையும் பயிர்களான, சிறு தானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களை சாகுபடி செய்யலாம். அந்த வகையில், சித்திரைப் பட்டத்தில், இறவையில், குறைந்த வயது மற்றும் உயர் மகசூலைத் தரும், ஏ.டி.எல்.1 கேழ்வரகு இரகத்தைப் பயிரிடலாம்.

ஏ.டி.எல்.1 கேழ்வரகின் சிறப்புகள்
விளம்பரம்:


இந்த இரகம், 105-110 நாட்களில் அறுவடைக்கு வரும். இறவையில், எக்டருக்கு 3,128 கிலோ தானிய மகசூலைத் தரும். மானாவாரியில், எக்டருக்கு 2,879 கிலோ தானிய மகசூலைத் தரும்.

இது, எக்டருக்கு 2,656 கிலோ தானிய மகசூலைத் தரும் கோ.15 இரகம், எக்டருக்கு 2,588 கிலோ தானிய மகசூலைத் தரும் பையூர் 2 இரகம் மற்றும் எக்டருக்கு 2,569 கிலோ தானிய மகசூலைத் தரும் ஜி.பி.யூ.28 இரகத்தை விட, 13.3, 16.2 மற்றும் 17.1 சத அளவில் கூடுதல் மகசூலைத் தரும்.

ஏ.டி.எல்.1 கேழ்வரகு மூலம், எக்டருக்கு 4,990 கிலோ தீவனத் தட்டை கிடைக்கும். இது, கோ.15, பையூர் 2 மற்றும் ஜி.பி.யூ.28 இரகத்தை விட, 13.7, 17.6, 20.5 சத அளவில் கூடுதல் தட்டையைத் தரும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஏ.டி.எல்.1 கேழ்வரகுக் கதிரில், 8-9 விரல்கள் இருக்கும். மேலும், 5-6 தூர்கள் இருக்கும். கதிரில் இருந்து எளிதில் தானியத்தைப் பிரிக்க முடியும். பயிர் சாயாமல் இருக்கும்.

இதில், 11.9 சதம் புரதம் இருக்கும். சிவப்பு நிறம், தோற்றம், மணம், நயம் மற்றும் சுவையால், இந்தத் தானியம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த இரகம், குலை நோயை மிதமாகத் தாங்கி வளரும். பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்தும் அளவில், இந்த இரகத்தில் பூச்சித் தாக்குதல் ஏதும் இருக்காது.


இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


படிக்கலாம்:

  • ஜப்பானிய காடைகள்!

  • வறட்சிக்கு ஏற்ற வளமான நெல்லி!

  • கரிசல் நிலம்!

  • கத்தரி விதை உற்பத்தி!

  • பால் கறவையை முடக்கும் மடிவீக்க நோய்!

  • நெற்பயிரைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்கள்!

  • வறட்சியில் கை கொடுக்கும் சூபாபுல் தீவன மரம்!

  • மாடு வளர்க்க மலைப்பாக இருக்கிறதா?

  • நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை!