My page - topic 1, topic 2, topic 3

மழைக் காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு!

கால்நடை

செய்தி வெளியான இதழ்: 2018 மே.

சுற்றுப்புறத் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, கால்நடைகளைப் பராமரித்தல் மிக அவசியம். குறிப்பாக, மழைக் காலத்தில் சில முன்னெச்சரிக்கை வேலைகளைச் செய்தால், பெரும் பொருளாதார இழப்பைத் தவிர்க்கலாம்.

மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள்
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தொற்று நோய்ப் பரவல்: நச்சுயிரிகள், நுண்ணுயிரிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் மூலம் பாதிப்பு ஏற்படும். தீவனத்தில் பூசணத் தொற்று ஏற்படுவதால், செரிமானக் குறைவு மற்றும் கழிச்சல் ஏற்படலாம்.

குடற் புழுக்களால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு இரத்தச் சோகை ஏற்படலாம். தொழுவம் மற்றும் சுற்றுப்புறத்தில் கழிவுநீர் தேங்கி, கொசுக்கள் பெருகுவதால், நுண்ணுயிரிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் மூலம் நோய்த் தொற்று ஏற்படலாம்.

வெளிப்புற ஒட்டுண்ணிகள் மூலம், கால்நடைகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும். சினை மாடுகள், கன்றுகள், ஆட்டுக் குட்டிகள், மழைக் காலத்தில், கூடுதலாகப் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.

இடி, மின்னல், மின்சாரத்தால் எதிர்பாரா விபத்துகள் நிகழலாம். மழைக்கால நோய்த் தொற்று மற்றும் தீவனக் குறையால் உற்பத்தித் திறன் குறையும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
கால்நடைகள் பராமரிப்பு மற்றும் நோய்த் தடுப்பு

கொட்டகைப் பராமரிப்பு: கால்நடைகளை மழையில் நனைய விடாமல் தொழுவத்தில் கட்ட வேண்டும். மேற்கூரை, பக்கச்சுவர் வழியாக, மழைநீர் பண்ணைக்குள் வருவதைத் தடுக்க வேண்டும். சிறந்த சுகாதார முறையைப் பின்பற்றுதல் அவசியம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பண்ணையைச் சுற்றி மழைநீர்த் தேங்கக் கூடாது. கொசுக்களைப் பெருகவிடக் கூடாது. கால்நடைக் கழிவுகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். தரை, ஈரமில்லாமல் இருக்க வேண்டும். பண்ணையைச் சுற்றிச் சுண்ணாம்புத் தூளைத் தூவலாம். தொழுவம் காற்றோட்டமாக இருக்க வேண்டும். இதனால், தரையின் ஈரம் எளிதில் உலரும்.

தொற்று நோய்த் தடுப்பு

கறவை மாடுகளுக்குச் சப்பை நோய், தொண்டை அடைப்பான் போன்ற தொற்று நோய்கள் வராமல் தடுக்க, மழைக்காலம் வருமுன், கால்நடை மருத்துவரை அணுகி, தடுப்பூசிகளைப் போட வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஆடுகளைத் தாக்கும் துள்ளுமாரிக்கு எதிரான தடுப்பூசியை, மழைக்காலம் வருமுன், ஆடுகளுக்குப் போட வேண்டும். நாட்டுக் கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்த் தடுப்பூசியை, கோழிகளுக்குப் போட வேண்டும்.

குடற் புழுக்களால் கால்நடைகள் பாதிப்படைவதைத் தடுக்க, கட்டாயம் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். ஒட்டுண்ணிகள் மூலம் பரவும் நோய்களை தடுக்க, கால்நடைகளுக்கு ஒட்டுண்ணி நீக்கம் செய்ய வேண்டும்.

இறந்த கால்நடைகள் மற்றும் கோழிகளை, சுண்ணாம்புக் கலவை இடப்பட்ட குழிகளில் புதைக்க வேண்டும். இவற்றை, குளம், குட்டை மற்றும் திறந்த வெளியில் போட்டுவிடக் கூடாது. ஏனெனில், இதனால் தொற்று நோய்கள் பரவும். நோய் அறிகுறிகள் தெரிந்தால், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

தீவன மேலாண்மை

கால்நடைத் தீவனம் கட்டாயம் பூசணத் தொற்று இல்லாமல் இருக்க வேண்டும். இதற்கு, கலப்புத் தீவனம் மற்றும் தீவன மூலப் பொருள்களை ஈரமற்ற, காற்றோட்டமான இடத்தில் சேமிக்க வேண்டும்.

வைக்கோல், சோளத்தட்டை, காய்ந்த கடலைக்கொடி போன்றவற்றை, மழையில் நனையாமல் சேமிக்க வேண்டும். மழையில் நனைந்த உலர் தீவனத்தைக் கால்நடைகளுக்குத் தரவே கூடாது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கால்நடைகளுக்குச் சுத்தமான குடிநீரைத் தர வேண்டும். மழைநீரை, கழிவுநீர் கலந்த நீரைத் தரவே கூடாது. தொழிற்சாலைக் கழிவுநீர் மற்றும் சாக்கடை கலந்த நீரில் நைட்ரேட் போன்ற நச்சுகள் இருக்கலாம். இதனால், இந்நீரை அருந்தும் கால்நடைகள் இறக்க நேரிடலாம்.

கழிவுநீரில் விளையும் பசுந்தீவனத்திலும் நச்சுத் தன்மை இருக்கலாம் என்பதால், இத்தகைய தீவனத்தைக் கால்நடைகளுக்குத் தரக்கூடாது. தீவனத் தொட்டி மற்றும் குடிநீர்த் தொட்டியில், பாசி பிடிக்க விடாமல், அவ்வப்போது சுண்ணாம்பைத் தடவி, சுத்தமாக வைக்க வேண்டும்.

கால்நடைகளுக்குச் சத்துகள் குறைந்தால், உற்பத்தித் திறன் குறையும். இதைத் தவிர்க்க, தாதுப்புக் கலவை மற்றும் தாதுப்புக் கட்டி மூலம், சத்துக் குறையைச் சரி செய்ய வேண்டும்.

பொது மேலாண்மை

தொழுவத்தில் மாடுகளை நெருக்கமாகக் கட்டி வைக்கக் கூடாது. இதனால், இடி, மின்னல் ஏற்படும் போது, பயத்தில் ஒன்றுக்கொன்று முட்டி மோதி, காயம்பட வாய்ப்புண்டு. குறிப்பாக, சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படலாம். எனவே, கவனமாக இருக்க வேண்டும்.

மழை பெய்யும் போது, திறந்த வெளியில் மற்றும் ஒற்றை மரத்தில் கால்நடைகளைக் கட்டி வைக்கக் கூடாது. ஏனெனில், இடி, மின்னலால் எதிர்பாரா விபத்துகள் ஏற்படலாம். தொழுவம், மின்கசிவு இல்லாமல் இருக்க வேண்டும். மின் கம்பங்களில் மாடுகளைக் கண்டிப்பாகக் கட்டக் கூடாது.


மழைக் காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு!

மருத்துவர் வ.குமரவேல், முனைவர் சு.செந்தூர்குமரன், வேளாண்மை அறிவியல் நிலையம், குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • கால்நடைகளின் தாதுப்புகள் தேவையைச் சரி செய்யும் தாதுப்புக் கட்டி!

  • கறவை மாடுகளின் இனப்பெருக்கத் திறனை மேம்படுத்தும் முறைகள்!

  • கன்று வீச்சு நோய்!

  • கால்நடைகளில் உண்ணிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

  • செயற்கை முறைக் கருவூட்டல்!

  • புறா வளர்ப்பு!

  • இலாபம் தரும் ஜப்பானிய காடை வளர்ப்பு!

  • நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிக்கல்கள்!

  • ஒருங்கிணைந்த பன்றிப் பண்ணையம்!