திட்டத்தின் பெயர்
இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டம் – MGNREGA (100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ்)
முக்கிய நோக்கம்
• ஏழை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பாதுகாப்பான மாட்டுக் கொட்டகை அமைத்துக் கொடுத்தல்.
• கால்நடைகளை மழை, வெயில், குளிர் போன்றவற்றில் இருந்து காத்தல்.
• பால் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல்.
மானியம் விவரம்
• 4 மாடுகள் வரை உள்ளவர்களுக்கு ரூ.79,000 வரை மானியம்.
• 5 முதல் 10 மாடுகள் கொண்டவர்களுக்கு ரூ.2.10 லட்சம் வரை மானியம்.
• முழுக்க இலவசம் – பயனாளி பணம் செலவிட வேண்டாம்; உழைப்பு மட்டும் போதுமானது.
• இடத்தை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துக் கட்டிக் கொடுப்பார்கள்.
தகுதி – நிபந்தனைகள்
1. விண்ணப்பதாரர், 100 நாள் வேலைத் திட்ட உறுப்பினராக இருக்க வேண்டும்.
2. மாட்டுக் கொட்டகை அமைக்கும் நிலம் சொந்த இடமாக இருக்க வேண்டும்.
3. தனிப் பட்டாவாக இருத்தல் அவசியம்; கூட்டுப் பட்டா ஏற்றுக்கொள்ளப்படாது.
4. ஆட்டுக் கொட்டகை, கோழிப் பண்ணை போன்ற பிற அரசு மானியத் திட்டங்களை விண்ணப்பதாரர் பெற்றிருக்கக் கூடாது.
5. ஏற்கனவே மாடு வளர்ப்போரில், ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவோருக்கு முன்னுரிமை!
தேவையான ஆவணங்கள்
• 100 நாள் வேலைவாய்ப்புத் திட்ட அட்டை
• ஆதார் அட்டை
• குடும்ப அடையாள அட்டை
• வாக்காளர் அட்டை
• சிட்டா / பட்டா நகல்
விண்ணப்பிக்கும் முறை
1. அருகிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO Office) செல்ல வேண்டும்.
2. அதிகாரிகளிடம் திட்ட விவரம் கேட்டு, விண்ணப்பப் படிவம் பெற வேண்டும்.
3. பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
4. அதிகாரிகள் இடத்தைப் பார்வையிட்டு, சரிபார்த்த பிறகு மானியம் ஒதுக்கப்படும்.
5. அரசு ஏற்பாடுகளின் கீழ் மாட்டுக் கொட்டகை கட்டித் தரப்படும்.
இந்த திட்டம், கிராமப்புற ஏழை விவசாயிகளுக்கு, ஒரு நீண்டகால சொத்தை உருவாக்கி தருகிற ஒரு நல்லத் திட்டமாகும்.



