My page - topic 1, topic 2, topic 3

கறவை மாடுகளின் இனப்பெருக்கத் திறனை மேம்படுத்தும் முறைகள்!

கறவை மாடு

செய்தி வெளியான இதழ்: டிசம்பர் 2025

பால் பண்ணைத் தொழிலில் நல்ல இலாபம் கிடைப்பதற்கு ஆதாரமாக விளங்குவது பால் உற்பத்தியாகும். இந்தப் பால் உற்பத்தி, தங்கு தடையின்றித் தொடர்ந்து கிடைக்க வேண்டுமானால், ஆண்டுக்கு ஒரு கன்று என்னும் கோட்பாட்டின் அடிப்படையில், கறவை மாடுகளின் இனப்பெருக்கத் திறனை மேம்படுத்த வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மாடுகளின் அடிப்படை இனப்பெருக்கப் பண்புகளை அறிந்து கொண்டால் தான், அவற்றில் ஏற்படும் சிக்கல்களைக் கையாள முடியும். நன்றாக வளர்க்கப்படும் கலப்பினக் கிடேரிக் கன்றுகள் 12 முதல் 18 மாதங்களில் பருவத்துக்கு வந்து விடும். சமச்சீர் தீவனம், குடற்புழு நீக்கம், நோய் மேலாண்மை ஆகியன, கிடேரிக் கன்றுகள் விரைவில் பருவம் அடைவதற்கான முக்கியக் காரணிகளாகும்.

பருவச் சுழற்சியில், கிடேரிகள் மற்றும் கறவை மாடுகள் 18-21 நாட்களுக்கு ஒருமுறை சினைப் பருவத்துக்கு வரும். சினைப்பருவ அறிகுறிகள் ஒருநாள் மட்டுமே இருக்கும். இந்த அறிகுறிகள் முடிந்து 10-12 மணி நேரத்தில் சூலகத்திலிருந்து கருமுட்டை வெளியேறும். மற்ற நாட்களில் கருமுட்டை வெளியேறாது. ஆகவே, சினைப்பருவ நாளில் கருவூட்டல் செய்தால் மட்டுமே மாடுகள் சினையுறும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சினைப்பருவ அறிகுறிகள்

  • மாடுகளின் பிறப்பு உறுப்பிலிருந்து முட்டையின் வெள்ளைக் கருவைப் போன்ற திரவம் வெளிப்படும். இதை, மொடை, வழு, மாசி எனப் பல பெயர்களில் அழைப்பர்.
  • சினைப்பருவ மாடு, பிற மாடுகள் மீது தாவும், தன் மீது மற்ற மாடுகள் தாவுவதை விரும்பும்.
  • கருவூட்டலின் போது கவனிக்க வேண்டியவை
  • சினையூசியை, வெய்யில் குறைந்த காலை அல்லது மாலை வேளையில் போடுவது நல்லது.
  • சினையூசியைப் போடுமுன், அரை மணி நேரம் மாட்டை நிழலில் அமைதியாக இருக்க வைக்க வேண்டும்.
  • சினையூசியைப் போடுவதற்கு 5 நிமிடத்துக்கு முன், பால்மடி மற்றும் காம்புகளைப் பிசைந்து விடலாம்.
  • சினையூசியைப் போடும் போது, மாட்டை அடிக்கவோ மிரட்டவோ கூடாது. ஏனெனில், பயத்தினால் சுரக்கும் ஒருவித ஹார்மோனால், உள்ளே செலுத்தப்படும் விந்தணுக்களின் ஓட்டம் தடைபட வாய்ப்புண்டு.
  • சினையூசியைப் போட்டதும் விந்தணுக்கள் வெளியேறாமல் இருக்க, மாட்டைப் படுக்க விடாமல், நிறுத்தியே வைக்கும் வழக்கம் நம்மிடம் உள்ளது. இது, முற்றிலும் தவறான மற்றும் மாடுகளுக்கு துயரத்தை அளிக்கும் செயலாகும்.
  • சினையூசியைப் போட்ட பிறகு, மாட்டை அரை மணி நேரம் நிழலில் அமைதியாக இருக்க வைத்து, வீட்டுக்கு ஓட்டிச் செல்ல வேண்டும்.
  • இத்தகைய நுணுக்கமான மற்றும் எளிய முறைகளைப் பின்பற்றினால், சினைப்பிடிப்பு வாய்ப்பு அதிகமாகும்.
  • ஒரு சினைப் பருவத்தில் கருவூட்டல் செய்த பிறகு, அடுத்த 18-21 நாட்களில் சினைப் பருவ அறிகுறி ஏதும் தெரிகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அப்படி ஏதும் தெரியாத நிலையில், 60 நாட்களில், கால்நடை மருத்துவர் மூலம் சினையை உறுதி செய்தல் அவசியம்.

இனப்பெருக்கத் திறன் பாதிப்பு

பண்ணையாளர்கள் முதலில் மாடுகளின் அடிப்படை இனப்பெருக்கப் பண்புகளை அறிந்து கொள்வது முக்கியம். சினைப் பருவத்தைச் சரியாகக் கவனித்துக் கருவூட்டல் செய்யாமல் விடுவதே, மாடுகள் சினையுறாமல் இருப்பதற்கான முக்கியக் காரணம். கிடேரிகள் பருவமெய்தாமல் இருப்பது, தாமதமாகப் பருவத்துக்கு வருவது, கருப்பை வளர்ச்சிக் குன்றியிருப்பது போன்ற பிரச்சனைகள் இனப்பெருக்கத் திறனை வெகுவாகப் பாதிக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இதைப் போல, கறவை மாடுகள் கன்றை ஈன்ற பிறகு பருவச் சுழற்சிக்கு வராதிருப்பது, பருவத்துக்கு வந்தாலும் சினைப் பிடிக்காமல் இருப்பது, கருப்பை புண் போன்ற சிக்கல்கள், மாடுகளின் இனப்பெருக்கத் திறனை வெகுவாகப் பாதிக்கச் செய்யும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கன்றை ஈன்ற கறவை மாடு, 45-60 நாட்களில் பருவச் சுழற்சிக்கு வந்து விடும். ஆனால், மூன்று மாதங்களுக்கு மேலாகியும் சினைப்பருவ அறிகுறியைக் காட்டவில்லை என்றால், சினைப் பருவமின்மை என்னும் பிரச்சனை உள்ளதென அறிய வேண்டும். இதைச் சரி செய்ய, தினமும் 30-50 கிராம் தாதுப்புக் கலவையைத் தீவனத்தில் சேர்த்து அளிக்க வேண்டும்.

இத்துடன், எளிய இயற்கை மருத்துவ முறையையும் பின்பற்றினால் மாடுகள் பருவத்துக்கு வரும் வாய்ப்பு அதிகமாகும். இதை 20 நாட்களுக்குத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

இயற்கை மருத்துவம்

  • முதல் நான்கு நாட்களுக்கு, தினமும் காலை, மாலையில் 100 கிராம் வீதம் முள்ளங்கியை உண்ணச் செய்ய வேண்டும்.
  • அடுத்த நான்கு நாட்களுக்கு, தினமும் இருவேளை 100 கிராம் வீதம் சோற்றுக் கற்றாழையைக் கொடுக்க வேண்டும்.
  • அடுத்த நான்கு நாட்களுக்கு, தினமும் இருவேளை 100 கிராம் வீதம் முருங்கைக் கீரையைக் கொடுக்க வேண்டும்.
  • அடுத்த நான்கு நாட்களுக்கு, தினமும் இருவேளை 100 கிராம் வீதம் பிரண்டையை அரைத்துக் கொடுக்க வேண்டும்.
  • இறுதி நான்கு நாட்களுக்கு, தினமும் இருவேளை 100 கிராம் வீதம் கறிவேப்பிலையைக் கொடுக்க வேண்டும்.

மலட்டுத் தன்மையைப் போக்கும் சிகிச்சையின் போது, கால்நடை மருத்துவரிடம் சரியான தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். சினைப்பருவம், கருவூட்டல் செய்த தேதி போன்ற விவரங்களைக் கையேட்டில் குறித்து வைக்க வேண்டும். இதனால், கால்நடை மருத்துவரிடம் தகவல்களைச் சரியாகச் சொல்லி, சிகிச்சையைச் சிறப்பாகச் செய்ய முடியும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இனப்பெருக்கப் பராமரிப்பு முறைகளைப் பின்பற்றி, நவீன உத்திகளைக் கையாள்வதன் மூலம், கறவை மாடுகளின் இனப்பெருக்கத் திறனை மேம்படுத்தி, பால் பண்ணைத் தொழிலை இலாபகரமாக நடத்திட முடியும்.


கறவை மாடுகளின் இனப்பெருக்கத் திறனை மேம்படுத்தும் முறைகள்!

மரு.ரா.ஸ்ரீரஞ்சனி, மரு.ம.செல்வராஜு, மரு.ச.ஜெயச்சந்திரன், மரு.க.இரமேஷ், மரு.ம.கண்ணன், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • கால்நடைகளின் தாதுப்புகள் தேவையைச் சரி செய்யும் தாதுப்புக் கட்டி!

  • கன்று வீச்சு நோய்!

  • கால்நடைகளில் உண்ணிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

  • செயற்கை முறைக் கருவூட்டல்!

  • புறா வளர்ப்பு!

  • இலாபம் தரும் ஜப்பானிய காடை வளர்ப்பு!

  • நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிக்கல்கள்!

  • ஒருங்கிணைந்த பன்றிப் பண்ணையம்!

  • கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை!