தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நன்னிலம் என்ற திட்டத்தின் மூலம், நிலமற்ற விவசாயிகள், சொந்தமாக நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்.
நன்னிலம் திட்டம்
ஆதி திராவிட நலத் துறையின் தாட்கோ நிறுவனம் மூலம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆதி திராவிட சமூகப் பெண்களுக்கு முன்னுரிமை; பெண்கள் இல்லாத குடும்பங்களில் ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 – 55 ஆண்டுகள்.
குடும்ப ஆண்டு வருமானம் ₹3 இலட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
அதிகபட்சக் கடன் 10 லட்சம் ரூபாய்; அதில் 5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.
நிலம் வாங்குபவர்களுக்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டண விலக்கு.
அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்க முடியும்.
கிணறு, பம்ப் செட், சொட்டு / சுழற்சி நீர்ப்பாசனம் போன்ற வசதிகளுக்கும் மானியம்.
மின் இணைப்பு பெற 75,000 ரூபாய் வரை அரசே செலுத்தும்.
நிலம் வாங்கிய பிறகு 20 ஆண்டுகள் வரை விற்பனை செய்யக் கூடாது; முடியாது.
விண்ணப்பிக்க வேண்டிய இடங்கள்
- தாலுகா அலுவலகம்
- மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
- தாட்கோ அலுவலகம் அல்லது தாட்கோவின் இணையதளம் tahdco.com
தகுதியானவர்கள், இத்திட்டத்தைப் பயன்படுத்தி சொந்தமாக நிலம் வாங்கிப் பயன்பெறலாம்.