My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


ஏழு கோடி விவசாயிகளுக்கு Kisan Pehchan Patra அடையாள அட்டை!

Kisan Pehchan Patra

ந்தியாவில் இதுவரை 7 கோடி விவசாயிகளுக்கு, அவரவர் நில விவரங்களுடன் கூடிய மின்னணு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கிஷான் பெச்சான் பத்ரா (Kisan Pehchan Patra) எனப்படும் இந்த அட்டைகளில், விவசாயிகளின் நில அளவு, பயிர் முறை, சமூக மற்றும் பொருளாதார விவரங்களும் இடம் பெறும்.

நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் இந்த எண்ணிக்கை 9 கோடியாக உயரும் என்று, மத்திய வேளாண் அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் அடுத்த நிதியாண்டில், மேலும் 3 கோடி விவசாயிகள், இந்தத் திட்டத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

விளம்பரம்:


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2,817 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் நோக்கம், நாட்டில் வேளாண்மையை டிஜிட்டல் முறையில் வலிமையாகக் கட்டமைப்பது ஆகும்.

Kisan Pehchan Patra அட்டையின் நன்மைகள்

  • மத்திய அரசின் வேளாண் நலத் திட்டங்களில் முன்னுரிமை.
  • பயிர்க் கடன்களை விரைவாகப் பெறும் வசதி.
  • பிரதான் மந்திரி பயிர்க் காப்பீடு (PMFBY) திட்டத்தின் பயன்களை அடைதல்.
  • பிரதான் மந்திரி கிசான் (PM-Kisan) திட்டத்தில் நேரடி நிதிப் பரிமாற்றம்.
  • பயிர் விதைப்பு முறைகளைத் துல்லியமாகக் கண்காணிக்க வசதி.
  • உரம், விதை, பாசன உதவி போன்றவற்றை அரசால் சரியாக வழங்க இயலும்.
  • இதுவரை தமிழ்நாடு உள்பட 14 மாநிலங்களில், விவசாயிகளுக்கு கிஷான் பத்ரா அடையாள அட்டைகளை வழங்கும் பணி முன்னேற்றம் கண்டுள்ளது.

இதுவரை அட்டை பெற்றவர்கள் எண்ணிக்கை மாநில வாரியாக…

  • உத்தரப் பிரதேசம் – 1.4 கோடி
  • மராட்டியம் – 1.1 கோடி
  • மத்தியப் பிரதேசம் – 87 இலட்சம்
  • இராஜஸ்தான் – 78 இலட்சம்
  • குஜராத் – 56 இலட்சம்
  • ஆந்திரப் பிரதேசம் – 45 இலட்சம்
  • கர்நாடகம் – 45 இலட்சம்
  • தமிழ்நாடு – 31 இலட்சம்
  • தெலுங்கானா – 31 இலட்சம்
  • சத்தீஸ்கர் – 25 இலட்சம்
  • கேரளம் – 23 இலட்சம்
  • ஒடிசா – 9 இலட்சம்
  • அசாம் – 7 இலட்சம்
  • பீகார் – 5 இலட்சம்

மேலும், ஹரியானா, இமாச்சலம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் இத்திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கிஷான் பெச்சான் பத்ரா அடையாள அட்டை மூலம், விவசாயிகளுக்கு, நில உரிமையுடன் கூடிய நிரந்தர டிஜிட்டல் அடையாளம் உருவாகும். நலத்திட்டங்களைப் பெறுவதில், போலி விவரங்களைக் கொண்டு நடக்கும் மோசடிகள் ஒழியும்.

நில உரிமையற்ற விவசாயிகள், மாநிலக் கொள்கைகளின் அடிப்படையில் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். காரணம், இந்தியாவில் மொத்த சாகுபடி பரப்பளவில், 30-40 சதவீதம் உரிமையற்ற விவசாயிகளால் தான் பயிரிடப்படுகிறது.

இதர அரசு திட்டங்கள்…

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


படிக்கலாம்: