My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


இதயத்தை இதமாக்கும் உணவுகள்!

பேரிக்காய் கிடைக்கும் காலத்தில், தினம் ஒரு பேரிக்காயைச் சாப்பிட்டால், இதயப் படபடப்பு நீங்கும்.

கருந்துளசி இலையுடன் செம்பருத்திப் பூவைச் சேர்த்துக் கஷாயமாக்கி, பத்து நாட்கள் சாப்பிட்டால், இதயக் குத்தல் வலி குணமாகும்.

விளம்பரம்:


மருதம் பட்டை, செம்பருத்திப் பூவைச் சேர்த்துக் கஷாயமாக்கி, 48 நாட்கள் சாப்பிட்டால், இதயம் இதமாக இயங்கும்.

துளசியிலைச் சாற்றையும் தேனையும், வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டால், இதயம் சார்ந்த நோய்கள் குணமாகும்.

தினமும் ஒரு ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிட்டால் இதயம் பலமாகும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

அத்திப் பழத்தைக் காய வைத்துப் பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி வீதம் உண்டு வந்தாலும் இதயம் பலமாகும்.

மாதுளம் பழச் சாறுடன் தேனைக் கலந்து குடித்து வந்தாலும், இதயம் வலுவாகும்.

வாசமுள்ள திருநீற்றுப் பச்சிலையை நுகர்ந்து வந்தால், இதய நடுக்கம் தீரும்.

இலந்தைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், நெஞ்சுவலி குணமாகும். சந்தனப் பொடியைக் கஷாயமாக்கிக் குடித்து வந்தாலும், நெஞ்சுவலி அகலும்.

இஞ்சித் துண்டுகளை தேனில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிடுவதும் நெஞ்சு வலிக்கான மருந்தாகும்.

தான்றிக்காய்ப் பொடியை 2 சிட்டிகைத் தேனில் கலந்து நாக்கில் தடவினால், மாரடைப்பு நீங்கும்.

துளசி விதை 100 கிராம், பன்னீர் 150 மில்லி, சர்க்கரை 25 கிராம் வீதம் எடுத்து, நன்றாகக் கலந்து, ஒரு நாளைக்கு இருவேளை சாப்பிட்டு வந்தாலும், இதயவலி அகன்று விடும்.


மரு.சு.சத்தியவாணி.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!