My page - topic 1, topic 2, topic 3

விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்! 

விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்! 

த்தியாவசியப் பொருள்களான உணவுப் பயிர்கள், பழங்கள், காய்கறிகள், கால்நடைகள், விதைகள், சணல் ஆகியவற்றை, சிவில் சப்ளை அமைச்சகம் 24.04.1983-இல், அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் 1955-இன் கீழ் அறிவித்தது. அதன்படி அத்தியாவசியப் பொருள்கள் உற்பத்தி, விநியோகம், விநியோகத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மற்றும் விற்பனையாளர்களுக்கு விதை உரிமம் வழங்குதல் அதிகாரம் மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்பட்டது.

அதன்பின் விதை வணிக உரிமத்தைக் கட்டாயமாக்கும், விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983-இல் வெளியிடப்பட்டது. ஆகையால், விதை விற்பனை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்றவற்றை மேற்கொள்வோர், விதைகள் கட்டுப்பாட்டு ஆணை, 1983-இன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க வணிகம் செய்ய வேண்டும். இது, 30.12.1983 முதல் நடைமுறைக்கு வந்தது.

விதைகள் ஏற்றுமதி இறக்குமதி மீதான கட்டுப்பாடு

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

விதைகள் கட்டுப்பாட்டு ஆணை, 1983-இன்படி‚விதை விற்பனையாளர்கள் மற்றும் விதை ஏற்றுமதி இறக்குமதி செய்வோரைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள், விதைகள் கட்டுப்பாட்டு ஆணையில் தரப்பட்டுள்ளன. இதன்படி பிரிவு 17-இன் கீழ் எந்தவொரு நபரும் விதைப்புக்கோ, நடவுக்கோ, ஏற்றுமதி அல்லது இறக்குமதிக்கோ விதைகளைப் பயன்படுத்தும் போது, கீழ்க்கண்ட பரிந்துரைகளின்படி செயல்பட வேண்டும்.

  • விதைகள், பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச முளைப்புத் திறன் மற்றும் தூய்மையை, பிரிவு 6 A-இன் கீழ் கொண்டிருத்தல் வேண்டும்.
  • விதைகள் வைக்கப்பட்ட கொள்கலனில் பரிந்துரைக்கப்பட்ட அட்டைகள் மற்றும் குறிப்புகளை, பிரிவு 6 B-இன் கீழ் கொண்டிருத்தல் வேண்டும்.

விதை விற்பனை உரிமம் பெற விண்ணப்பித்தல்

தமிழ்நாட்டில், விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983-இன் கீழ், விதை ஆய்வு இணை இயக்குநர், உரிமம் வழங்கும் அதிகார வரம்பைக் கொண்ட அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விதை விற்பனை உரிமம் வழங்குதல்

விதை விற்பனை, விதை ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொழிலை மேற்கொள்வோர், விதை விற்பனை உரிமத்தைப் பெற்ற பிறகே வணிகத்தைத் தொடர முடியும். இதற்கு, உரிமம் வழங்கும் அதிகாரியிடம், படிவம் A-யைப் பூர்த்தி செய்து, உரிமக் கட்டணமான 1,000 ரூபாயை அரசு சலான் மூலம் செலுத்தி, விதை உரிமம் கோரிச் சமர்ப்பிக்க வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உரிமம் வழங்கும் அதிகாரி, சரியானது என்று கருதினால், படிவம் B-யின்படி உரிமம் வழங்குவார். உரிமம் வழங்குதல் மறுக்கப்பட்டால், அதற்கான காரணங்களைத் தெளிவாகப் பதிவிட வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

விதை விற்பனை உரிமம் பெறத் தேவையான ஆவணங்கள்

  • படிவம் A-இல் விண்ணப்பம்.
  • உரிமக் கட்டணமான 1,000 ரூபாயைச் செலுத்தியதற்கான அரசு சலான்.
  • நடப்பு ஆண்டுக்கான சொத்து வரி இரசீதின் நகல்.
  • வாடகை ஒப்பந்த நகல்.
  • வாடகைக் கட்டடத்தின் உரிமையாளரால் செலுத்தப்பட்ட நடப்பாண்டு  சொத்து வரி இரசீதின் நகல்.
  • கூட்டாண்மை நிறுவனமாக இருந்தால், கூட்டாண்மைப் பத்திரத்தின் நகல்.
  • நிறுவனமாக இருந்தால் சங்கக் கட்டுரைகளின் குறிப்பாணையின் நகல்.
  • விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை.

உரிமம் செல்லுபடிக் காலம்

இந்த உத்தரவின் கீழுள்ள ஒவ்வொரு உரிமமும், முன்பு இடை நிறுத்தப்பட்டாலோ அல்லது ரத்து செய்யப்பட்டலோ தவிர, வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.

விதை விற்பனையாளர்களின் பங்கு

  • ஒவ்வொரு விதை விற்பனையாளரும் தனது வணிக விதை விவரத்தைக் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும்.
  • பல்வேறு விதைகளின் தொடக்க மற்றும் இறுதி விற்பனை நிலவரம் தினசரி அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும்.
  • வெவ்வேறு விதைகளின் விலைகள் அல்லது விலைகளைக் குறிக்கும் பட்டியல் வைக்கப்பட வேண்டும்.

விதை விற்பனையாளர்கள் ஒப்பந்தம்

ஒவ்வொரு விதை விற்பனையாளரும் விதைகளை வாங்குபவருக்கு ரொக்கம் அல்லது கடன் குறிப்பாணையைக் கொடுக்க வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உரிமம் வழங்கும் அதிகாரிகள் நியமனம்

மாநில அரசு, அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிப்பு மூலம், உரிமம் வழங்கும் அதிகாரிகளை நியமிக்கலாம். உரிமம் வழங்கும் அதிகாரிகள், தங்கள் அதிகார வரம்பை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் செயல்படுத்த வேண்டும்.

விதை ஆய்வாளர்கள் நியமனம்

மாநில அரசு, அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிப்பு மூலம், தங்களுக்குத் தேவையான ஆய்வாளர்களை நியமிக்கலாம். ஒவ்வொரு ஆய்வாளரும் தனது அதிகார வரம்பை, தன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் செயல்படுத்த வேண்டும்.

ஆய்வு மற்றும் தண்டனை

  • குற்றம் ஏதேனும் இருப்பின், ஆய்வு செய்யும் நோக்குடன் ஆய்வாளர் இருக்க வேண்டும்.
  • எந்தவொரு விதை விற்பனையாளரும் தன் வசம் உள்ள விதைகள் கொள்முதல், சேமிப்பு மற்றும் விற்பனை பற்றிய எந்தத் தகவலையும் கொடுக்க வேண்டும்.
  • விதைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள அல்லது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வளாகத்திலும் நுழைந்து சோதனை செய்யலாம்.
  • இந்த உத்தரவின் விதிகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்த, விற்பனை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட விதைகளின் மாதிரிகளை அனுப்ப வேண்டும்.
  • மாதிரி கோரப்பட்ட விதையின் தரமானது, அவர் நம்புவதற்குக் காரணமுள்ளதாக இருப்பின், எந்த விதையையும் பறிமுதல் செய்யவும் அல்லது தடுத்து வைக்கவும் ஆய்வாளருக்கு அதிகாரம் உண்டு.
  • விதை தொடர்பான கணக்குப் புத்தகங்கள் அல்லது ஆவணங்களைப் பறிமுதல் செய்யவும் அவருக்கு அதிகாரம் உண்டு.
  • விதை ஆய்வாளரால் கணக்குகள் அல்லது ஆவணங்கள் கைப்பற்றப்படின், அவற்றைக் கொடுத்தவருக்கு ஆய்வாளர் ரசீது கொடுக்க வேண்டும்.
  • கைப்பற்றாத கணக்குப் புத்தகங்கள் அல்லது ஆவணங்களை நகல் எடுத்த பிறகு, அவற்றைக் கொடுத்தவரிடம் திரும்பத் தர வேண்டும்.
  • ஆவணங்களைத் தேடுதல் மற்றும் கைப்பற்றுதல், துணைப்பிரிவு 1-இன் பத்தி D-இன் விதிமுறைக்கு உட்பட்டது.
  • இந்த விதி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 100-வது பிரிவு 1973 (2) இன் 1974க்குப் பொருந்தும்.
  • இந்தப் பிரிவின் கீழ் ஒரு ஆய்வாளர் விதைகளைக் கைப்பற்றினால், அவர் அந்த விவரங்களை உடனே ஒரு மாஜிஸ்திரேட்டிடம் தெரிவிக்க வேண்டும்.
  • குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 (1974-இன்2) பிரிவு 457 மற்றும் 458. முடிந்தவரை அத்தகைய விதையின் பாதுகாப்பு மற்றும் அகற்றலுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விதை ஆய்வாளர் கேட்கும் விவரங்களை, விதை விற்பனையளார் கொடுக்க வேண்டும்.

பகுப்பாய்வுக்கான கால வரம்பு

பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்ட விதை மாதிரிகளை ஆய்வகத்தில் ஆய்வு செய்து, அதற்கான அறிக்கையை 60 நாட்களுக்குள், சம்பந்தப்பட்டோர்க்கு ஆய்வாளர் அனுப்ப வேண்டும். 

உரிம இடை நீக்கம் அல்லது ரத்து செய்தல்

உரிமம் வழங்கும் அதிகாரி, உரிமம் வைத்திருப்பவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கிய பிறகு, பின்வரும் காரணங்களுக்காக, உரிமத்தை இடை நீக்கம் செய்யலாம் அல்லது உரிமத்தை ரத்து செய்யலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
  • உரிமம் தவறாகச் சித்திரித்துப் பெறப்பட்டிருந்தால் உரிமத்தை ரத்து செய்யலாம்.
  • இந்த ஆணையின் விதிகள் அல்லது உரிமத்தின் நிபந்தனைகள் மீறப்பட்டிருந்தால் உரிமத்தை ரத்து செய்யலாம்.

மேல் முறையீடு

  • இந்த ஆணையின் கீழ் உரிமம் இடை நீக்கம் அல்லது ரத்து செய்யப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு எதிரான மேல் முறையீட்டை மேற்கொள்ளலாம்.
  • அதற்காக மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி விசாரணையை மேற்கொள்வார்.
  • அதிகாரியின் கருத்தே இறுதியானது.
  • உரிமம் வழங்க அல்லது திருத்தம் செய்ய அல்லது புதுப்பிக்க மறுத்த உத்தரவால் பாதிக்கப்பட்டோர், விதை விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதிக்கான உரிமத் தேதியிலிருந்து 60 நாட்களுக்குள், நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் முறையீடு செய்ய வேண்டும்.

உரிமத் திருத்தம்

விதை உரிமத்தைத் திருத்தம் செய்ய விரும்பும் விற்பனையாளர்கள், 10 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்தி, அதற்கான கோரிக்கை மனுவை இணைத்து அனுப்ப வேண்டும்.

பதிவேடுகள் பராமரிப்பு மற்றும் விற்பனை விவரங்கள் சமர்ப்பிப்பு

ஒவ்வொரு விற்பனையாளரும் அவருடன் தொடர்புடைய புத்தகங்கள், கணக்குகள் மற்றும் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 5-வது நாட்களுக்குள், உரிமம் வழங்கும் அதிகாரியிடம் படிவம் D-யில், வணிகம் தொடர்பான மாதாந்திர விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

உரிமத்தைப் புதுப்பித்தல்

உரிமம் காலாவதி ஆவதற்குள் புதுப்பிக்க வேண்டும். விதை விற்பனை உரிமத்தைப் புதுப்பிக்க, படிவம் C-யில் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் புதுப்பித்தல் கட்டணமான 500 ரூபாயை, அரசாங்க சலான் மூலம் செலுத்தி விட்டு, அந்த அசல் சலானைப் படிவத்துடன் இணைக்க வேண்டும்.

உரிமத்தைப் புதுப்பிக்கத் தேவையான ஆவணங்கள்

  • விதை விற்பனை உரிமத்தைப் புதுப்பிக்கத் தேவையான C- படிவம்.
  • உரிமம் புதுப்பித்தல் கட்டணமான 500 ரூபாயைச் செலுத்தியதற்கான அரசாங்க சலான்.
  • நடப்பு ஆண்டுக்கான சொத்து வரி இரசீது.  
  • வாடகைக் கட்டடமாக இருந்தால், வாடகை ஒப்பந்த நகல் மற்றும் கட்டட உரிமையாளரால் பெறப்பட்ட நடப்பாண்டு சொத்து வரி இரசீது நகல்.
  • கூட்டாண்மை நிறுவனமாக இருந்தால் கூட்டாண்மைப் பத்திர நகல்.
  • ஒரு நிறுவனமாக இருந்தால் சங்கக் கட்டுரைகளின் குறிப்பாணையின் நகல்.

இணையவழி விதை விற்பனை உரிமச் சமர்ப்பிப்பு முறைகள்

தமிழ்நாட்டில் இணைய வழியில் விதை விற்பனை உரிமத்திற்கு விண்ணப்பிக்க, விதை விற்பனையாளர்கள் விதைச் சான்றளிப்பு மற்றும் அங்கக விதைச் சான்றளிப்புத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான seedcertification.tn.gov.in -யை அணுக வேண்டும்.

விதை விற்பனையாளராகப் பதிவு செய்து, தேவையான இணையவழி விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, ஆதார் அட்டை மற்றும் வணிகப் பதிவு போன்ற ஆவணங்களைப் பதிவேற்றி, விதை உரிம விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பக் கட்டணமாக 1000 ரூபாயைச் செலுத்த வேண்டும்.

ஆகவே, விதை வணிகத்திற்கான விதை உரிமம் பெறுவது என்பது, கட்டாயம் கையாள வேண்டிய ஒன்றாகும். விதை விற்பனையில் ஈடுபடும் எவரும், விதைகள் கட்டுப்பாட்டு ஆணை, 1983 விதிமுறைகள் மற்றும் நிபந்தனைக்கு இணங்க வணிகம் செய்தால், பல்வேறு சட்டச் சிக்கல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.


விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்! 

முனைவர் து.திருச்செந்தூரச்செல்வி, முனைவர் ஜெ.ரேணுகாதேவி, முனைவர் வே.மனோன்மணி, முனைவர் ரெ.ஜெர்லின், விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்: