My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


ஆமணக்குப் பயிரில் அதிக மகசூலைப் பெற ‘ஆமணக்கு கோல்டு’!

மணக்கு, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் 3.44 சதத்தை மட்டுமே வகித்தாலும், எண்ணெய்ச் சந்தையில் முதன்மையான இடத்தை வகிக்கிறது. உலகளவில், ஆமணக்கு உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் வணிகத்தில் இந்தியா முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.

ஆமணக்கு எண்ணெய் மற்றும் இதர பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம், ரூ.4,000 கோடி வரை அந்நியச் செலாவணி கிடைப்பதால், விவசாயப் பொருளாதாரத்தில், ஆமணக்கு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தொழில் துறையில் அதிகளவில் பயன்படுவதால், உலகளவில் ஆமணக்கு எண்ணெய்த் தேவை அதிகரித்து வருகிறது.

விளம்பரம்:


இந்தியாவில் 1970-ஆம் ஆண்டிலிருந்து ஆமணக்கு சாகுபடிப் பரப்பளவு மற்றும் உற்பத்தித் திறன் நான்கு மடங்காக அதிகரித்து வந்துள்ள போதிலும், தமிழ்நாட்டில் மானாவாரி சாகுபடியில் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. முன்பு, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் ஆமணக்கு, ஊடுபயிராகப் பயிரிடப்பட்டது. ஆனால், இப்போது தனிப்பயிராக அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

ஆமணக்கில், ஏத்தாப்பூர் 1, ஏத்தாப்பூர் 2 என, இரண்டு வீரிய ஒட்டு இரகங்களை, சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், 2009 மற்றும் 2016-ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்த வீரிய ஒட்டு இரகங்கள், மானாவாரி சாகுபடியில், ஏக்கருக்கு 800 கிலோ மகசூலும், இறவையில் 1,200 கிலோ மகசூலும் தரவல்லவை.

ஆமணக்குப் பயிர், ஓரிலைத் தாவரமாகும். ஆமணக்குக் காய்க் குலைகளின் மேல் பகுதியில், பெண் பூக்களும் இருப்பதால், இது ஓரிலைத் தாவரமாகும். சுற்றுச்சூழலில் நிலவும் தட்ப வெப்ப நிலையைப் பொறுத்து, ஆண் பெண் பூக்களின் விகிதம் அமையும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

அதிக வெப்பம், உலர்ந்த காற்று, நீர்ப் பற்றாக்குறை ஆகிய காரணங்களால், பெண் பூக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. இதனால், குலைகளில் காய்களின் எண்ணிக்கை மற்றும் விதைப்பிடிப்புத் திறன் குறைந்து, மகசூலைப் பாதிக்கச் செய்கிறது.

அதிக வெப்பச் சூழலால், செடியில் பெண் பூக்களை உருவாக்கும் பூஸ்டர்கள் குறைவதே, இதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. இந்தக் குறைகளைச் சரி செய்து மகசூலைக் கூட்டுவதற்கான ஆராய்ச்சிகள், ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தப்பட்டன.

இதன் விளைவாக, ஆமணக்குப் பயிரில் அதிக மகசூலைப் பெறுவதற்கான பூஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இது, ஆமணக்கு கோல்டு என்னும் பெயரில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஆமணக்கு கோல்டை பயன்படுத்தும் போது, காய்க் குலைகளில் 95 சதத்துக்கு மேல், பெண் பூக்கள் உருவாகும். இதனால், காய்களின் எண்ணிக்கையும், விதைப் பிடிப்புத் திறனும் அதிகரித்து, மானாவாரியில் ஏக்கருக்கு 1,000 கிலோவும், இறவையில் 1,500 கிலோவும் கிடைக்கும்.

விதைத்த, 25 மற்றும் 60 நாளில், இந்த ஆமணக்கு கோல்டை, ஒரு லிட்டர் நீருக்கு 0.5 மி.லி. வீதமும், ஒட்டும் திரவம் 1 மி.லி. வீதமும் கலந்து, காலை அல்லது மாலை வேளையில், இலைகளில் தெளிக்க வேண்டும்.

பயன்கள்

+ காய்க் குலைகளில் 95 சதத்துக்கு மேல், பெண் பூக்கள் இருக்கும்.

+ விதைப்பிடிப்புத் திறனும் 90 சதத்துக்கு மேல் இருக்கும்.


முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


மேலும் படிக்கலாம்:

  • மண்ணுக்கு உணவளித்தல் நன்றி மறவாமை!

  • தழைச்சத்தைத் தரும் பாசிகள்!

  • திசு வளர்ப்பு முறையில் நோயற்ற கரும்பு நாற்று உற்பத்தி!

  • உடல் நலம் காக்கும் சிறுதானியங்கள்!

  • தக்காளியைத் தாக்கும் பூச்சிகளும் நோய்களும்!

  • பயிர்கள் வளர உதவும் பொட்டாஷ் பாக்டீரிய திரவ உரம்!

  • உருளைக் கிழங்கு சாகுபடி முறைகள்!

  • அமோக விளைச்சல்: பாசன நீரின் தரம் மிகமிக முக்கியம்!

  • பசுந்தாள் உரப் பயிர்களில் விதை உற்பத்தி!