My page - topic 1, topic 2, topic 3

நெல் சாகுபடியில் நுண்ணுயிர் உரங்களின் பயன்பாடு!

நெல் சாகுபடியில் நுண்ணுயிர் உரங்களின் பயன்பாடு!

மிழகத்தில் நெல் சாகுபடியில் இரசாயன உரங்கள் அதிகளவில் இடப்படுகின்றன. இதனால், மண்வளம் குறைவதோடு, சுற்றுச்சூழல் கேடுகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையைத் தவிர்க்க, இரசாயன உரங்களைக் குறைத்து இயற்கையோடு ஒன்றிய அங்கக வேளாண்மையின் முக்கியப் பகுதியான நுண்ணுயிர் உரங்களை, நெற்பயிரின் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களில் பயன்படுத்த வேண்டும்.

திரவ உயிர் உரங்கள் வேர்களின் வளர்ச்சிக்குத் தேவையான நுண்ணுயிர்களை வழங்குவதன் மூலம் பயிர்களின் வளமான வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இதனால், இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, மண்வளத்தைப் பாதுகாத்து, பயிர்ச்சூழலை மேம்படுத்த முடியும் என்பது தெளிவாகிறது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

நெற்பயிரில் இரசாயன உரங்களைக் குறைத்து, உயிர் உரங்களைப் பயன்படுத்தி, விளைச்சல் மீதான தாக்கத்தை ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு, நெல் விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மண்ணின் நலம், பாதுகாப்பு மற்றும் அதிக விளைச்சலின் மேம்பாட்டுக்கான தீர்வாக இந்த நுண்ணுயிர் உரங்கள் செயல்படுகின்றன.

இதில் அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன. மில் மெலின்டா ஆராய்ச்சிக் குழுமத்தின் ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், வாண்டையார் இருப்புக் கிராமத்தில், T1: முழுமையான கட்டுப்பாடு (Absolute Control), T2: 100% NPK, T3: 75% NPK + பாஸ்போ பாக்டீரியா + பொட்டாஷ் பாக்டீரியா, T4: 50%NPK + பாஸ்போ பாக்டீரியா + பொட்டாஷ் பாக்டீரியா ஆகிய நான்கு பரிசோதனைக் களங்களை அமைத்து உள்ளோம்.

நெற்பயிரில் உயிர் உரங்களைப் பயன்படுத்தும் முறைகள்

விதை நேர்த்தி (Seed Treatment): ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை 125மி.லி. பாஸ்போபாக்டீரியா மற்றும் பொட்டாஷ் பாக்டீரியாவில் கலந்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி, நேரடி விதைப்பு (Direct Sowing) செய்ய வேண்டும்.(T3: மற்றும் T4: மட்டும்)

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

நாற்று நேர்த்தி (Root Dibbling): ஒரு எக்டருக்குத் தேவையான நாற்றுகளைச் சிறு சிறு முடிச்சுகளாகக் கட்டிக் கொண்டு, 125 மி.லி. பாஸ்போ பாக்டீரீயா மற்றும் பொட்டாஷ் பாக்டீரியாவை, தலா 40 லிட்டர் நீரில் கலந்து, அரை மணி நேரம் நாற்றுகளின் வேர்களை நனைத்து நட வேண்டும். இது வேர்களின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, பயிரின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மண்ணில் இடுதல் (Soil Application): வயலில் நடுவதற்கு முன், 200 மி.லி. பாஸ்போ பாக்டீரியா மற்றும் பொட்டாஷ் பாக்டீரியாவை, 25 கிலோ மணல் அல்லது தொழுவுரத்தில் கலந்து, சீராக மண்ணில் தூவ வேண்டும். (T3: மற்றும் T4: மட்டும்) ஒவ்வொரு முறையும் இரசாயன உரங்களை மண்ணில் இட்ட, 7 முதல் 10 நாட்களுக்குப் பிறகு உயிர் உரங்களை மண்ணில் இட வேண்டும்.

உரப் பரிந்துரை (Fertilizer Recommendation)

பொதுவான உரப் பரிந்துரை – எக்டருக்கு: Urea 325.5 கிலோ (4 பிரிவுகளாக). SSP 312.5 கிலோ (அடியுரம்). MOP 83.5 கிலோ (4 பிரிவுகளாக). தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தை, கடைசி உழவின் போது, தூர்க்கட்டுப் பருவம், கதிர் உருவாகும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் பருவத்தில் என நான்கு முறை இட வேண்டும்.

கதிருள்ள தூர்கள்

கதிருள்ள தூர்களின் எண்ணிக்கையில் 100% NPK (T 2) களத்தில் அதிகளவாக 28 தூர்கள் இருந்தன. இதற்கு அடுத்து T 3 களத்தில் 25 தூர்களும், T 4 களத்தில் 21 தூர்களும் இருந்தன. T1 களத்தில் மிகவும் குறைவாக 9 தூர்கள் இருந்தன. இந்தத் தூர்களின் எண்ணிக்கை, பயிருக்குக் கிடைக்கும் சத்துகளைப் பொறுத்து மாறுபடும். இந்தச் சத்துகளை, இரசாயன உரங்களும் நுண்ணுயிர் உரங்களும் அளிக்கின்றன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மகசூல் (Yield)

(T1, T2, T3, T4) ஆகிய நான்கு பரிசோதனைக் களங்களில் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், T2, அதாவது, 100% NPK பயன்படுத்திய பரிசோதனைக் களத்தில், எக்டருக்கு 6759.23 கிலோ என்னும் அதிகபட்ச விளைச்சல் பதிவானது. அதற்குப் பிறகு, T3 T3 (75% NPK + PSB & KRB) மற்றும் T4 (50% NPK + PSB & KRB) ஆகிய களங்களில் முறையே, 6456.67 கிலோ மற்றும் 5706.57 கிலோ விளைச்சல் கிடைத்தது.

T3 களத்தில் 75 சத இரசாயன உரங்களும், T4 களத்தில் 50 சத இரசாயன உரங்களும் இட்டதில், சத்துகளை ஈடு செய்ய 95 சதம் 84 சதம் மகசூல் கிடைத்துள்ளது. இரசாயன உரங்களைக் குறைத்து நுண்ணுயிர் உரங்களை இடும்போது மகசூல் ஏறத்தாழ சமமாக உள்ளது. மேலும், இரசாயன உரங்களின் செலவு குறைவதோடு, மண்வளமும் காக்கப்படுகிறது.

விளைச்சலைக் குறைவின்றிப் பெற முடியும் என்பதைக் காட்டுகிறது. T1 களத்தில் 2986.47 கிலோ எனக் குறைவான விளைச்சல் தான் கிடைத்தது, இது, இரசாயன மற்றும் உயிர் உரங்களின் பங்களிப்பு இல்லாத போது விளைச்சல் குறைவதை உறுதிப்படுத்துகிறது. இந்த முடிவுகள், உயிர் உரங்களின் சரியான பயன்பாடு, இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, கூடுதல் செலவுகளைத் தவிர்க்க உதவுகின்றன.


த.சிவசங்கரிதேவி, ச.கமலி, மா.குமரகுரு, மு.தண்டபாணி, கா.சுப்ரமணியன், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • பயிர்ப் பாதுகாப்பில் உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள்!

  • ஊடுபயிர்களைத் தேர்வு செய்வது எப்படி?

  • வறட்சியிலும் வளம் கொழிக்கும் நாவல்!

  • நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்!

  • மீன் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

  • தக்காளியைத் தாக்கும் நோய்கள்!

  • மணத்தக்காளி சாகுபடி!

  • களர் உவர் நிலத்தை விளைநிலமாக மாற்றுவது எப்படி?

  • பால் உற்பத்தியில் பசுந்தீவனத்தின் அவசியம்!