My page - topic 1, topic 2, topic 3

டிராக்டர் செயல் திறனை மேம்படுத்தும் முறைகள்!

டிராக்டர் செயல் திறனை மேம்படுத்தும் முறைகள்!

ம் நாட்டில் ஆண்டுதோறும் பத்து இலட்சம் டிராக்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் டிராக்டர்கள் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலான உலக நாடுகளில் டிராக்டர் உற்பத்திக் குறைந்துள்ள போதிலும், இந்தியாவில் சுமார் 4.3 மில்லியன் டிராக்டர்கள் புழக்கத்தில் உள்ளன. விவசாயிகள் அதிகளவில் டிராக்டரைப் பயன்படுத்திய போதிலும், முறையாகப் பயன்படுத்தாததால், பராமரிப்புச் செலவு கூடுகிறது.

டிராக்டரைச் சரியான முறையில் இயக்குவது, நிறுத்துவது மற்றும் பிரேக் பெடல், கிளட்ச் பெடல், லாக், கை பிரேக், கால் ஆக்சிலரேட்டர், கை ஆக்சிலரேட்டர், லீவர் ஆகியவற்றைத் தகுந்த முறையில் பயன்படுத்துவது மற்றும் செயல் திறனை மேம்படுத்தும் முறைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

டிராக்டர் எஞ்ஜின்

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

எஞ்ஜின் என்பது, டிராக்டரின் இதயமாகும். இது, இயந்திரத்தை இயக்கத் தேவையான சக்தியை வழங்குகிறது. எரிபொருளை இயந்திர ஆற்றலாக மாற்றி, சக்கரங்கள் மற்றும் துணை அமைப்புகளை இயக்குகிறது. எண்ணெய் நிலைகளைச் சோதித்து, சரியான குளிர்ச்சியை உறுதி செய்வது போன்ற பராமரிப்பு முறைகள், எஞ்ஜினின் நீடித்த செயல் திறனுக்கும், திறமைக்கும் அவசியம்.

பிரேக் பெடல்

இடப்பக்கமும் வலப்பக்கமும் உள்ள இரண்டு பெடலும் தடங்கலின்றி இயங்க, அவற்றைத் தனித்தனியே சரி செய்து 4.5-5.5 செ.மீ. என்னும் தடையற்ற இயக்கத்தில் வைக்க வேண்டும். வயலில் வேலை செய்யும் போது டிராக்டர் பெடலை விடுவித்து வைத்திருக்க வேண்டும். சாலையில் செல்லும் போது பெடலை எப்போதும் இணைத்து வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

பெடல்

கிளட்சின் இயக்கம் அதிகமாகக் கிடைப்பதற்கு, கிளட்ச் பெடலின் தடையற்ற இயக்கம் 2.0-2.6 செ.மீ. அளவில் வைக்கப்பட வேண்டும். கிளட்ச் பெடலின் இயக்கம் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால், கிளட்ச் வழுக்கும் வாய்ப்பு அதிகமாகும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

லாக்

இது, வயலில் பின் சக்கரம் தனியே வழுக்கிச் சுழல்வதைக் கட்டுப்படுத்தப் பயன்படும் சாதனமாகும். இறுகலற்ற மண்ணில் அல்லது சேற்றில் ஒரு சக்கரம் சுழலத் தொடங்கும் போது, லாக்கை இணைத்து, இரண்டு பின் சக்கரங்களின் இயக்கத்தையும் டிராக்டருக்குத் தருவதால், ஒரு சக்கரம் தொடர்ந்து வழுக்கிச் சுழல்வதைச் சரி செய்யலாம். இதனால், டயரின் பயன்படு காலம் கூடும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கை பிரேக்

டிராக்டரைச் சாய்வான பகுதியில் நிறுத்தி வைப்பதற்கு, இதைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். இதனால், டிராக்டர் தானாக இயங்குவதைத் தடுக்கலாம்.

கால்மிதி ஆக்சிலரேட்டர்

சாலையில் ஓட்டும் போது கால்மிதி ஆக்சிலரேட்டரைப் பயன்படுத்த வேண்டும். வயல் வேலையின் போது, கால்மிதி ஆக்சிலரேட்டரைப் பயன்படுத்தினால், வேகம் ஒரே சீராக இருக்காது. வேகம் திடீரெனக் கூடும் அல்லது குறையும்.

கைப்பிடி ஆக்சிலரேட்டர்

வயலில் ஓட்டும் போது டிராக்டரின் வேகத்தைத் (ஆர்.பி.எம்.) தொடர்ந்து பராமரிக்க, கைப்பிடி ஆக்சிலரேட்டரைப் பயன்படுத்த வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

லீவர்

ஷாப்ட்டுக்கு நேரடி இயக்கம் தர இது பயன்படுகிறது. டிராக்டரைப் பயன்படுத்தாத போது, இதை விடுவித்த நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். லீவரை இணைக்கக் கூடாது.

பிரேக் ஸ்விட்ச் மற்றும் பிரேக் விளக்கு

சிவப்பு விளக்கு, டிராக்டரின் பின்புறம் இருக்கும் இரு மட்கார்டுகளில் மாட்டப்பட்டிருக்கும். இது, பிரேக் பெடலால் இயக்கப்படும். பிரேக் பெடலை அழுத்தும் போதும், விடுவிக்கும் போதும், பிரேக் ஸ்விட்சின் பின் இயங்கும். பிரேக் ஸ்விட்ச் வலது புட்போர்டுக்குக் கீழே இருக்கும். பின்னால் வரும் வாகன ஓட்டிகளை, பிரேக் விளக்குகள் எச்சரிக்கும்.

பார்க்கிங் டெயில் லைட் ஸ்விட்ச்

பின்புற பார்க்கிங் விளக்கு, சிவப்பு நிறத்தில் இருக்கும். டேஷ் போர்டின் மீதுள்ள ஒரு பக்கம் அசைக்கும் விளக்கு ஸ்விட்சை இயக்கி இந்த விளக்கு எரிய வைக்கப்படும். இது, பார்க்கிங் ஸ்விட்ச் எனப்படுகிறது. இது, இயக்க நிலையில் இருக்கும் போது, முன்புறம் வலது மற்றும் இடப்பக்கம் ஆரஞ்சு நிறத்தில் உள்ள பார்க்கிங் விளக்குகளும், பின்புறம் வலது மற்றும் இடப்பக்கம் சிவப்பு நிறத்தில் உள்ள பார்க்கிங் விளக்குகளும் எரியத் தொடங்கும்.

இன்டிகேட்டர்

டிராக்டரின் மட்கார்டுகளில் முன்னும் பின்னும் ஆரஞ்சு நிறத்தில் திரும்பும் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். டேஷ்போர்டில் பொருத்தப்பட்டுள்ள இருபுறமும் அசையும் ஸ்விட்ச் மூலம், இந்த விளக்குகள் இயக்கப்படும். டேஷ்போர்டு மீதுள்ள பச்சை நிற இன்டிகேட்டரில் இருந்து, டிராக்டர் எந்தப் பக்கம் திரும்புகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். டிராக்டர் இடப்புறம் திரும்பும் போது, திரும்பும் சுவிட்சை இடப்புறம் நகர்த்த வேண்டும். அப்போது முன்னும் பின்னும் ஆரஞ்சு நிறத்தில் விளக்கு எரியும். இடப்பக்கம் திரும்பும் பச்சை அம்புக்குறியும் எரியும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஆபத்து ஸ்விட்ச்

இதுவும் அசையும் ஸ்விட்ச் தான். இதை இயக்கும் போது, முன்னும் பின்னும் மட்கார்டுகளில் பொருத்தப்பட்டுள்ள திரும்பும் விளக்குகள் பளிச் பளிச் என அணைந்து அணைந்து எரியத் தொடங்கும். சாலை நடுவில் வாகனம் பழுதாகி நின்று விட்டால், ஆபத்து ஸ்விட்சைப் பயன்படுத்த வேண்டும்.

டயர்களின் காற்றழுத்த விகிதம்

டிராக்டர் நிறுவனப் பரிந்துரைப்படி, டயர்களின் காற்றிருப்பைப் பராமரித்தால், டயர்கள் வெகுநாட்கள் உழைப்பதுடன், டிராக்டரின் இழுதிறனும் கூடும். தேய்மானம் குறையும். அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ காற்றழுத்தம் இருந்தால் டயர்களின் உழைப்புக் காலம் குறைந்து விடும்.

காற்றுக் குறைவாக இருந்தால் அளவுக்கு மேல் தொய்வு ஏற்பட்டு, டயரின் பக்கவாட்டுப் பகுதியும், கயிற்றுக் கட்டுமானமும் பலவீனமாகும். கயிறு விலகிப் பக்கவாட்டில் கீறல் விழும். அதைப் போல, அதிகக் காற்றை நிரப்பினாலும் டயரின் ட்ரெட் மிகுதியாகவும் வேகமாகவும் தேய்ந்து விடும்.

டிராக்டரை இயக்குமுன் கவனிக்க வேண்டியவை

டீசல் கலனில் போதியளவில் டீசல் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். எண்ணெய்க் கலனில் எண்ணெய் அளவைச் சரி பார்க்க வேண்டும். ரேடியேட்டரில் தேவையான அளவு நீர் உள்ளதா என்று பார்க்க வேண்டும். டயரில் போதியளவில் காற்று இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காற்று நுழைவுக் குழாயில் உள்ள வடிப்பானைச் சுத்தப்படுத்த வேண்டும். பேன் பெல்ட்டின் அழுத்தம் 15-20 மி.மீ. இருக்க வேண்டும். பிரதான கியர் லீவரை நியூட்ரலில் வைக்க வேண்டும்.

டிராக்டரை நிறுத்துமுன் செய்ய வேண்டியவை

ஆக்சிலரேட்டரைக் குறைக்க வேண்டும். பிரதான கியர் லீவரை நியூட்ரலுக்கு மாற்ற வேண்டும். பிரேக் பெடலைக் கொண்டு டிராக்டரின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். கட் ஆப் லீவரை இழுத்து எஞ்சினை நிறுத்திய பிறகு, அந்த லீவரை பழைய நிலையிலேயே வைக்க வேண்டும்.


PB_Kamaraj

முனைவர் ப.காமராஜ், பண்ணை இயந்திரவியல் இணைப் பேராசிரியர், இரா.மீனா, முதுகலை ஆராய்ச்சியாளர், பண்ணை இயந்திரங்கள் மற்றும் சக்தி பொறியியல் துறை, வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுளூர் – 621 712.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • வேளாண்மையில் டிரோன் கருவியின் பங்கு!

  • நெல் சாகுபடிக்கான விதைப்பு மற்றும் நடவுக் கருவிகள்!

  • தக்காளி விதைகளைப் பிரிக்கும் கருவி!

  • களைக் கருவிகள்!

  • கரும்பு சாகுபடிக்கு உதவும் கருவிகள்!

  • நிலக்கடலை சாகுபடியில் கருவிகள்!

  • பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு மிக முக்கியம் சூரிய விளக்குப் பொறி!

  • Mahindra JIVO 245 DI – விவசாயிகளுக்கான சக்திவாய்ந்த 4WD டிராக்டர்!

  • மக்காச்சோளச் சாகுபடியில் பண்ணைக் கருவிகள்!