My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

துளசியின் மருத்துவக் குணங்கள்!

துளசியின் மருத்துவக் குணங்கள்! Tulsi https://pachaiboomi.net/564654-3/

ந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் துளசிச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. மூலிகை அரசி எனப்படும் இந்தத் துளசிச் செடியில், பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு, துளசியானது மிகச் சிறந்த மருந்தாகும். மேலும் துளசி, வாஸ்து நன்மைகளைக் கொண்டுள்ள மூலிகை என்று இன்றளவும் நம்பப்படுகிறது. எனவே, இந்திய மக்களின் வாழ்வியலில், துளசிக்கு முக்கிய இடம் உண்டு.

துளசியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், அழகுப் பொருள்கள் தயாரிப்பு, தோல் பராமரிப்பு மற்றும் வாசனைத் திரவியத் தயாரிப்பில் பயன்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க துளசியில், வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுகளும் உள்ளன. மேலும், புரதமும், நார்ச்சத்தும் உள்ளன. துளசியிலை, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும், நோய் வருவதைத் தடுப்பதற்கும் பயன்படுகிறது.

துளசி, மன அழுத்தத்துக்கு எதிரான குணங்களைக் கொண்ட மூலிகையாகும். எனவே, மன அழுத்தம் அல்லது கவலையை உணரும் போது, துளசித் தேநீரைப் பருகினால், புத்துணர்ச்சிப் பிறக்கும். துளசியில், ஒவ்வாமை எதிர்ப்புப் பண்புகள், பாக்டீரிய எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. துளசி, சிறந்த வலி நீக்கியாகவும் உள்ளது. கல்லீரலைக் காக்கத் துளசி உதவுகிறது. செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

செரிமான உறுப்புகளை மேம்படுத்துவதன் மூலம், உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தையும், உடலின் கொழுப்பு எரியும் செயலையும் வேகப்படுத்துகிறது. சிறந்த நச்சு எதிர்ப்புப் பொருளான துளசி, சிறுநீரகக் கற்களால் அவதிப்படும் மக்களுக்கு அருமருந்து ஆகும். சிறுநீரகக் கற்களுக்குக் காரணமான யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகிறது. துளசித் தேநீர், இரண்டாம் வகை நீரிழிவைக் கட்டுப்படுத்துகிறது.

துளசியில் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. அவை, வாயிலுள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராடி, பற்களில் குழி விழுவதைத் தடுக்கின்றன. துளசியில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள், தாதுகள் மற்றும் வைட்டமின்கள், வயது முதிர்வு அறிகுறிகளைத் தடுக்க உதவுகின்றன. துளசி, தலையில் ஏற்படும் அரிப்பைக் குறைப்பதோடு, முடி உதிர்வதையும் கட்டுப்படுத்துகிறது. துளசியை மையாக அரைத்துப் பூசினால், தோலிலுள்ள கறை மற்றும் முகப்பரு அகன்று விடும். முகச்சுருக்கம் நீங்கும்.

துளசியில் உள்ள துத்தநாகமும், வைட்டமின் சி-யும், தொற்று நோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன. துளசியிலைகள் அல்லது துளசித் தேநீரைத் தினமும் எடுத்து வந்தால், நோயெதிர்ப்பு ஆற்றல் கூடும். துளசியில், வைட்டமின்கள், தாதுகள், பைட்டோ நியூட்ரியன்கள், புரதம், கார்போ ஹைட்ரேட் ஆகியன உள்ளன. மேலும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு போன்ற தாதுகளின் சிறந்த மூலமாகும்.

எனவே, துளசியைத் தேநீர் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். நெய் அல்லது தேனில் கலந்து உண்ணலாம். துளசிச் சாறாகப் பருகலாம். துளசியை ஊற வைத்து, துளசி நீராகப் பருகலாம்.


துளசியின் மருத்துவக் குணங்கள்! GURUSAMY https://pachaiboomi.net/564654-3/

முனைவர் கே.குருசாமி,

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

முனைவர் க.ஞா.கவிதாஸ்ரீ, முனைவர் எம்.ஆனந்த், முனைவர் ஜி.அமுதசெல்வி, உணவுப் பதனப் பொறியியல் துறை, வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் – 641 003.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • தேனின் மருத்துவக் குணங்கள்!

  • நீரிழிவு நோய்க்கான எளிய சித்த மருத்துவம்!

  • வெங்காயம் தரும் நன்மைகள்!

  • தும்பையின் மருத்துவப் பயன்கள்!

  • இரத்தப் போக்கைக் குணப்படுத்தும் வில்வம்!

  • மஞ்சளின் சிறப்புகள்!

  • முடக்கத்தான் கீரையின் பயன்கள்!

  • குப்பைமேனியின் மருத்துவக் குணங்கள்!

  • அறுகம்புல் மருத்துவக் குணங்கள்!