My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தேனின் மருத்துவக் குணங்கள்!

தேனின் மருத்துவக் குணங்கள்! honey https://pachaiboomi.net/47956060-2/

தேன் (Honey) என்றால் இனிப்பு. இனிப்பு என்றால் மகிழ்ச்சி. மகிழ்ச்சியைத் தரும் இந்தத் தேன், நமக்கு நலந்தரும் மருந்தாகவும் விளங்குகிறது. தேனில் நமக்குத் தேவையான முக்கியச் சத்துகளும், மருத்துவக் குணங்களும் (Medicinal properties of Honey) உள்ளன.

தேனில், பி1, பி2, பி4, பி5, பி6, சி, இ ஆகிய வைட்டமின்களும், அயோடின், கால்சியம், கந்தகம், இரும்பு, சோடியம், மெக்னீசியம், தாமிரம், பொட்டாசியம்,  குளோரின், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், குளுக்கோஸ், லெவுகோஸ், லாக்டிக் அமிலம், டார்டாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், க்ளாரிக் அமிலம் போன்ற சத்துகளும் உள்ளன.

தேன் (Honey); குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், விளையாட்டு வீரர்கள், நோயாளிகள் என அனைவருக்கும் ஏற்ற இயற்கை உணவாகும். ஆயினும், தேனைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவது முற்றிலும் அறியாமை ஆகும். இவற்றைப் பலரும் நம்புவது விந்தையிலும் விந்தையாகும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

நம் இதயத்தைப் பலப்படுத்தும் தேன், இரத்தத்தில் சிவப்பணுக்கள் பெருக உதவுகிறது. நச்சுப் பொருள்களை நீக்கி, இரத்தத்தைச் சுத்தம் செய்யும் தேன், இதய தசைநார்களை வலுப்பெறச் செய்கிறது. இதயம் சீராக இயங்கவும், இரத்த ஓட்டம் சீராக நடக்கவும் துணை புரிகிறது.

கல்லீரலின் இயக்கத்தைத் தூண்டும் தேன், கிளைக்கோஜன் உருவாகவும், கல்லீரல் மூலம் நச்சுப் பொருள்கள் வெளியேறவும் உதவுகிறது. குடல் சார்ந்த நோய்கள் குணமாக உதவுகிறது.

பசியைத் தூண்டும் தேன், உடலிலுள்ள கழிவுப் பொருள்கள் வெளியேற உதவுகிறது. கெட்ட வாயுவை வெளியேற்றும் ஆற்றலும் தேனுக்கு உண்டு.

தேன் (Honey); உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது. தொற்று நோயை எதிர்க்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. காய்ச்சல் போன்ற நோய்க்குத் தேன் சிறந்த மருந்தாகிறது.

இழந்த சக்தியை நோயாளிகள் பெறுவதற்கு உதவும் தேன், காய்ச்சலுக்குக் காரணமான நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலையும் அளிக்கிறது.

தொண்டையில் சதை வளர்வதைத் தடுக்கும் தேன், இருமலையும் குணப்படுத்துகிறது. நரம்புத் தளர்ச்சியை நீக்கி, படுக்கையில் சிறுநீர்க் கழிப்பதைத் தடுக்கிறது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தேன் (Honey); கை, கால் நடுக்கத்தைப் போக்க உதவுவதுடன், எலும்புகளுக்கு, பற்களுக்கு, தசைகளுக்கு வலிமையைத் தருகிறது. நல்ல தூக்கத்தைத் தருகிறது. இரத்தச்சோகை குணமாக உதவுகிறது.

தேன்; சீழ்ப்பிடிக்கும் நிலையிலுள்ள புண்களை ஆற்ற உதவுகிறது. கட்டிகள், கொப்புளங்கள், வெந்த புண்கள், வெட்டுக் காயங்கள் மற்றும் தீக்காயங்களில் தேனைத் தடவி அவற்றைக் குணப்படுத்தலாம்.

மூளைப் பகுதியில் இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவும் தேன், நினைவாற்றல் கூடவும் உதவுகிறது. கீழ்வாதம், பக்கவாதம் மற்றும் இரத்த  மூலத்தைக் குணமாக்கும் ஆற்றலும் தேனுக்கு உண்டு.

பழங்களைப் பதப்படுத்தத் தேன் பயன்படுகிறது. ரொட்டி, கேக், மிட்டாய் மற்றும் மது வகைகள் தயாரிப்பிலும் தேன் பயன்படுகிறது. போதை, நஞ்சு, அபின் போன்ற நச்சு வகைகளை முறிக்கும் திறன் தேனுக்கு உண்டு.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

தேன், உடல் சூட்டைத் தணிக்கவல்லது. இளமையைத் தக்க வைத்து, முதுமையைத் தாமதப்படுத்தி, வாழும் காலத்தைக் கூட்டிடத் தேன் பயன்படுகிறது.

தேன், ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. இருமல், சளி, தொண்டைக்கட்டு, வாந்தி, விக்கல், தலைவலி ஆகியன குணமாக உதவுகிறது. தேனில் ஊறிய பேரீச்சம் பழம், ஆண்மைக் குறைவு நீங்க உதவுகிறது.  

பயிர்ப் பெருக்கம் செய்யும் வகையில், வெட்டுக் குச்சிகளைத் தேனில் தடவி நட்டால், விரைவில் வேர்ப் பிடிக்கும். தேனீக்கள், பயிர்களில் மகரந்தச் சேர்க்கை சிறப்பாக நடைபெற உதவுகின்றன.

எனவே, விவசாயிகள் அவரவர் நிலத்திலும், ஏனைய மக்கள் வாய்ப்பு இருந்தால் வீடுகளிலும் தேனீப் பெட்டிகளை வைத்து, தேனீக்களை வளர்த்து (Bee keeping), தேனை உற்பத்தி செய்து பயன் பெறலாம்.


தேனின் மருத்துவக் குணங்கள்! DR.ELANGOVAN N 1 https://pachaiboomi.net/47956060-2/

முனைவர் பா.இளங்கோவன்,

மேனாள் கூடுதல் இயக்குநர், வேளாண்மைத்துறை.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • நீரிழிவு நோய்க்கான எளிய சித்த மருத்துவம்!

  • வெங்காயம் தரும் நன்மைகள்!

  • தும்பையின் மருத்துவப் பயன்கள்!

  • இரத்தப் போக்கைக் குணப்படுத்தும் வில்வம்!

  • மஞ்சளின் சிறப்புகள்!

  • முடக்கத்தான் கீரையின் பயன்கள்!

  • குப்பைமேனியின் மருத்துவக் குணங்கள்!

  • அறுகம்புல் மருத்துவக் குணங்கள்!

  • தூதுவளை மற்றும் கற்றாழையின் நன்மைகள்!