My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

திரவநிலை உயிர் உரங்களும் அவற்றின் பயன்களும்!

திரவநிலை உயிர் உரங்களும் அவற்றின் பயன்களும்!

நவீன விவசாயத்தில் அதிக மகசூலைப் பெறுவதற்காக, இரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், மண்ணின் இயல்பான வளம் குறைவதோடு, சுற்றுச்சூழலும் மாசடைகிறது. இதற்குச் சிறந்த மாற்றாகவும், நிலையான விவசாயத்துக்கு அடித்தளமாகவும், உயிர் உரங்கள் (Biofertilizers) விளங்குகின்றன.

உயிர் உரங்கள் என்பவை, மண்ணில் உள்ள சத்துகளை, பயிர்கள் எளிதில் எடுத்துக் கொள்ளும் வகையில் மாற்றித் தரும், நன்மை செய்யும் நுண்ணுயிரிகளைக் கொண்ட உரங்களாகும். இவை, திட மற்றும் திரவ நிலைகளில் கிடைக்கின்றன.

ரைசோபியம் (Rhizobium)

இது, உளுந்து, பாசிப்பயறு, துவரை, நிலக்கடலை போன்ற, பயறுவகைப் பயிர்களின் வேர்களில் முடிச்சுகளை உருவாக்கி, காற்றிலுள்ள நைட்ரஜனை நிலை நிறுத்தி, பயிர்களுக்கு வழங்குகிறது. மேலும், மண்வளத்தை மேம்படுத்தி, பயிர்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

Advertisement: (+91) 90430 82900

அசோஸ்பைரில்லம் (Azospirillum)

இது, நெல், கரும்பு, சோளம், கம்பு மற்றும் காய்கறிப் பயிர்களின் வேர்ப்பகுதியில் இருந்து கொண்டு, வளி மண்டல நைட்ரஜனை நிலை நிறுத்துகிறது. பயிர்களின் வேர் வளர்ச்சியைத் தூண்டும், ஆக்சின், ஜிப்ரெலின் போன்ற வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்து, வறட்சியைத் தாங்கும் திறனை அதிகரிக்கிறது.

அசோட்டோபாக்டர் (Azotobacter)

இது, பருத்தி, எண்ணெய் வித்துகள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்குப் பயன்படுகிறது. மண்ணில் தனித்து வாழ்ந்து நைட்ரஜனை நிலை நிறுத்துவதோடு, விதைகளின் முளைப்புத் திறன் அதிகரிக்க உதவுகிறது. மேலும், மண்ணிலுள்ள நோய்க் கிருமிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.

பாஸ்போபாக்டீரியா (Phosphobacteria)

இது, மண்ணில் கரையாத நிலையில் உள்ள பாஸ்பரஸ் என்னும் மணிச்சத்தைக் கரைத்து, பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்கிறது. மேலும், கரிம அமிலங்களை உற்பத்தி செய்து, மண்வளத்தை மேம்படுத்துகிறது.

பொட்டாசைக் கரைக்கும் பாக்டீரியா (KMB)

இது, மண்ணில் கரையாத நிலையில் உள்ள பொட்டாசியம் என்னும் சாம்பல் சத்தைக் கரைத்துப் பயிர்களுக்கு வழங்குகிறது. மேலும், பயிர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியையும், வறட்சியைத் தாங்கும் திறனையும் அளிக்கிறது. விளைபொருள்களின் தரத்தையும் கூட்டுகிறது.

துத்தநாகத்தைக் கரைக்கும் பாக்டீரியா (ZSB)

இது, மண்ணில் கரையாத நிலையிலுள்ள துத்தநாகத்தைக் கரைத்துப் பயிர்களுக்கு வழங்குவதன் மூலம், துத்தநாகப் பற்றாக்குறையைப் போக்குகிறது.

வாம் (VAM – மைக்கோரைசா)

இது, நன்மை செய்யும் பூஞ்சை வகையாகும். பயிர்களின் வேர்களுடன் இணைந்து, நிலத்தின் ஆழத்திலுள்ள பாஸ்பரஸ், நுண் சத்துகள் மற்றும் நீரை உறிஞ்சிப் பயிர்களுக்கு வழங்குகிறது.

திரவ நிலை உயிர் உரங்களைப் பயன்படுத்தும் முறைகள்

அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம், பொட்டாஷ் மொபிலைசிங் பாக்டீரியா மற்றும் ஜிங்க் சால்பிலைசிங் பாக்டீரியா ஆகிய திரவ நிலை உயிர் உரங்களைப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

விதை நேர்த்தி செய்தல்: விதைப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு, ஒரு ஏக்கருக்கான விதைகளுக்கு 50 மி.லி. திரவ உயிர் உரம் வீதம் கலந்து, நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

நாற்றுகளின் வேர்களை நனைத்து நடுதல்: வயலில் சிறிய பாத்தியை அமைத்து நீரைத் தேக்கி, அதில் 150 மி.லி. திரவ உயிர் உரத்தைக் கலக்க வேண்டும். அந்த நீரில் ஒரு ஏக்கருக்குத் தேவையான நாற்றுகளின் வேர்களை, அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்து நடவு செய்ய வேண்டும்.

நடவு வயலில் நேரடியாக இடுதல்: ஏக்கருக்கு 200 மி.லி. திரவ உயிர் உரம் வீதம் எடுத்து, மட்கிய தொழுவுரத்தில் நன்கு கலந்து, வயலில் சீராகத் தூவ வேண்டும்.

நீர்வழி உரமிடுதல்: சொட்டுநீர்ப் பாசனம் போன்ற நுண்ணீர்ப் பாசன முறைகளில், 1 லிட்டர் நீருக்கு 1 மி.லி. திரவ உயிர் உரம் வீதம் கலந்து, பயிர்களுக்கு விட வேண்டும்.உயிர் உரங்களைச் சரியான அளவிலும் முறையிலும் பயன்படுத்தினால், இரசாயன உரச்செலவை 25-30 சதவீதம் குறைக்க முடியும். இவை, மண்ணில் உள்ள நுண்ணுயிர்களைப் பெருக்கி, மண்வளத்தைக் காப்பதுடன், நலந்தரும் உணவு உற்பத்திக்கும் வழி வகுக்கும். எனவே, விவசாயிகள் உயிர் உரங்களைத் தவறாமல் பயன்படுத்தி, வளமான விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும்.


திரவநிலை உயிர் உரங்களும் அவற்றின் பயன்களும்! ARIPUTHIRAN e1769341128950 https://pachaiboomi.net/5769859096-2/

கா.அரிபுத்திரன்,

வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.

Advertisement: (+91) 90430 82900

Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • பயிர்களைப் பாதுகாக்கும் இயற்கைக் காவலர்கள்!

  • சமச்சீர் உரமே மண்வளம் காத்து மகசூல் பெருக்கும்!

  • காவிரி ஆறு!

  • தமிழ்நாட்டின் முக்கியமான அணைகள்!

  • தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள்!

  • மண்வளம் காக்கும் ஆறு வழிமுறைகள்!

  • மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் பூச்சிகளும் நோய்களும்!

  • பயறு வகைகளில் மகசூலைப் பெருக்கும் பயறு ஒண்டர், டிஏபி கரைசல் தெளிப்பு!

  • நன்மை செய்யும் ஒட்டுண்ணிகள்!