My page - topic 1, topic 2, topic 3

நவரை என்னும் கார்த்திகைப் பட்டத்திற்கு ஏற்ற நெல் இரகங்கள்!

நவரை

மிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நவரைப் பட்டம் என்பது, நவம்பர் – சனவரி, அதாவது, கார்த்திகை – தை காலத்தில் தொடங்கி, ஏப்ரல்- மே, அதாவது, சித்திரை – வைகாசி காலத்தில் முடிவடையும். 120 நாட்களைக் கொண்ட குறுகிய கால நெல் வகைகள் இந்தப் பருவத்தில் பயிரிடப்படும். இதைக் கார்த்திகைப் பட்டம் என்றும் அழைக்கின்றனர். கார்த்திகை மற்றும் நவரைப் பட்டத்திற்கு ஏற்ற நெல் இரகங்களை இங்கே பார்க்கலாம்.

ஏடிடீ 36

இந்த நெல் இரகம், 1980-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது, 110 நாட்களில் விளையும். எக்டருக்குச் சராசரியாக 4,000 கிலோ விளைச்சலைத் தரும். நீண்டு வளரும் தன்மைமிக்க இந்த இரகம், குலை நோய் மற்றும் புகையானுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.

ஏடிடீ 37

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இந்த நெல் இரகம், 1987-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது, 115 நாட்களில் விளையும். எக்டருக்குச் சராசரியாக 6,200 கிலோ விளைச்சலைத் தரும். அரிசி குண்டு வடிவில் இருக்கும். இதை, இட்லி அரிசி என்று கூறுவார்கள். தண்டுத் துளைப்பான் மற்றும் குலை நோய்க்கு மிதமான எதிர்ப்புத் தன்மை கொண்டது.

ஏடிடீ 42

இந்த நெல் இரகம், 1994-ஆம் ஆண்டு, ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்டது. இது, 110-116 நாட்களில் விளைந்து, எக்டருக்கு 5,500 கிலோ மகசூலைத் தரக்கூடியது.

ஏடிடீ 43

இந்த நெல் இரகம், 1999-ஆம் ஆண்டு, ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்டது. இது, ஐ.ஆர்.50 மற்றும் வெள்ளைப் பொன்னி நெல் இரகத்தைக் கலப்புச் செய்து உருவாக்கப்பட்டது. இது, 110 நாட்களில் விளையும். எக்டருக்கு 5,900 கிலோ மகசூலைத் தரும். நடுத்தரச் சன்ன நெல். அதிகளவில் தூர் கட்டும். பச்சைத் தத்துப்பூச்சித் தாக்குதலைத் தாங்கி வளரும்.

ஏடிடீ 45

இந்த நெல் இரகம், 2001-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது, ஐ.ஆர்.50 மற்றும் ஏ.டி.டீ.37 இரகத்தைக் கலந்து உருவாக்கப்பட்டது. இது, 110 நாட்களில் விளையும். எக்டருக்குச் சராசரியாக 6,100 கிலோ மகசூலைத் தரும். நெல், நடுத்தரச் சன்ன வடிவில் இருக்கும். ஆனைக்கொம்பன் தாக்குதலை முழுமையாக எதிர்த்தும், புகையானை மிதமாக எதிர்த்தும் வளரும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஏடிடீ 53

இந்த நெல் இரகம், ஏ.டி.டீ.43 மற்றும் ஜே.ஜி.எல்.384 நெல் இரகத்தைக் கலந்து, 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் வயது 105-110 நாட்கள். குறுவை, கோடை, நவரை ஆகிய பருவங்களில் பயிரிட ஏற்றது. எக்டருக்குச் சராசரியாக 6,334 கிலோ மகசூலைத் தரக்கூடியது. தமிழ்நாட்டின் அனைத்துப் பருவ மண்டலங்களுக்கும் ஏற்றது. நடுத்தர உயரம், நிமிர்ந்த பயிர் அமைப்பு, முற்றிலும் வெளிவரும் நெருக்கமான கதிர்கள் மற்றும் உயர் விளைச்சல் திறன் மிக்கது. அரிசி, நடுத்தரச் சன்ன வடிவில் இருக்கும். அதிக அரவைத் திறனும் முழு அரிசி காணும் திறனும் மிக்கது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஏடிடி 55

இந்த நெல் இரகம், ஏ.டி.டீ.43 மற்றும் ஐ.ஆர்.பி.பி.60 இரகத்தைக் கலந்து, 2021-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் வயது 115 நாட்கள். கார், குறுவை மற்றும் கோடையில் பயிரிட ஏற்றது. எக்டருக்குச் சராசரியாக 5,930 கிலோ மகசூல் கிடைக்கும். அரிசி, நடுத்தரமாக வெள்ளை நிறத்தில் இருக்கும். குலை நோய், இலையுறை அழுகல் மற்றும் இலைச் சுருட்டுப் புழுக்களின் தாக்குதலை மிதமாகத் தாங்கி வளரும்.

ஏடிடீ 57

இந்த நெல் இரகம், ஏ.டி.டீ.45 மற்றும் ஏ.சி.கே.03 நெல் இரகத்தைக் கலப்பினம் செய்து 2022-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் வயது 103-122 நாட்கள். கார், குறுவை, சொர்ணவாரி, நவரை, கோடை ஆகிய பருவங்களுக்கு ஏற்றது. அரிசி, மத்திய சன்ன வடிவில், சிறந்த சமையல் பண்புடன் இருக்கும். குலை நோயை முழுமையாகத் தாங்கியும், இலையுறைக் கருகல், பழுப்புப்புள்ளி, துங்ரோ, குருத்துப்பூச்சி, இலை மடக்குப்புழு மற்றும் புகையான் தாக்குதலை மிதமாகத் தாங்கியும் வளரும்.

ஏடிடீ 59

இந்த நெல் இரகம், தமிழ்நாட்டில் புதிய மற்றும் குறுகிய காலப் பயிராகும். குறுவை சாகுபடிக்கு ஏற்றது. எக்டருக்கு 4,000 கிலோ மகசூலைத் தரும். நெல், குண்டு  வடிவில் இருக்கும். ஏ.டி.டீ.37 மற்றும் ஏ.எஸ்.டி.16 போன்ற பழைய வகைகளை விட 15-20 சதம் கூடுதலாக மகசூலைத் தரும். நவரைப் பருவத்திலும் சாகுபடி செய்யலாம். உப்பு, வறட்சி மற்றும் பூச்சித் தாக்குதல்களைத் தாங்கி வளரும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கோ 47

இந்த நெல் இரகம், 1999-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஐ.ஆர்.50. மற்றும் கோ.43 நெல் இரகக் கலப்பில் உருவாக்கப்பட்டது. இதன் வயது 110-115 நாட்கள். எக்டருக்குச் சராசரியாக 5,830 கிலோ மகசூலைத் தரக்கூடியது. நெல், நடுத்தரச் சன்ன வடிவில் இருக்கும். குலை நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.

கோ 51

இந்த நெல் இரகம், 2013-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது, ஏ.டி.டீ.43, ஆர்.ஆர். 272- 17- 45- 17- 45 நெல் வகைகளைக் கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டது. இதன் வயது 105-110 நாட்கள். எக்டருக்கு 6,623 கிலோ விளைச்சலைத் தரக்கூடியது. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பயிரிட ஏற்றது. குட்டையாக வளரும் இந்த இரகம், குலை நோய், புகையான், பச்சைத் தத்துப்பூச்சி ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் மிக்கது. அரிசி, வெள்ளையாக இருக்கும். 69 சத அரிசி மற்றும் 63 சத முழு அரிசி கிடைக்கும். மித வெப்ப நிலையிலேயே உணவாகி மிருதுவாக இருக்கும்.

கோ 54

இந்த நெல் இரகம், சி.பி.04110 மற்றும் சி.பி.05501 நெல் இரகத்தைக் கலப்பினம் செய்து 2021-இல் வெளியிடப்பட்டது. இதன் வயது 110-115 நாட்கள். சொர்ணவாரி, கார், குறுவை, நவரை ஆகிய பருவங்களுக்கு ஏற்றது. எக்டருக்கு 6,350 கிலோ மகசூலைத் தரக்கூடியது. அரிசி, மத்திய சன்ன வடிவில் இருக்கும். புகையான், குலை நோய், இலையுறைக் கருகல், பழுப்புப்புள்ளி நோய் ஆகியவற்றை மிதமாக எதிர்க்கும் திறன் உடையது.

கோ 55

இந்த நெல் இரகம், ஏ.டி.டீ.43 மற்றும் ஜி.வி.24 நெல் இரகத்தைக் கலப்பினம் செய்து  2022-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் வயது 110-115 நாட்கள். கார், குறுவை, சொர்ணவாரி, நவரை ஆகிய பருவங்களுக்கு ஏற்றது. எக்டருக்கு 6,057 கிலோ மகசூலைத் தரும். குறுகிய கால இரகங்களைப் பயிரிடும் அனைத்துப் பகுதிகளுக்கும் ஏற்றது. அரிசி, மிகச் சன்னமாக இருக்கும். புகையான், குலை நோய், இலையுறை அழுகல், பழுப்புப்புள்ளி, துங்ரோ வைரஸ் ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.

ஏஎஸ்டி 16

இந்த நெல் இரகம், 1986-இல், அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்டது. அதிகளவில் வைக்கோலைத் தரும். நெல், குறுகிய குண்டு வடிவில் இருக்கும். இதன் வயது 110-115 நாட்கள். எக்டருக்கு 5,600 கிலோ விளைச்சலைத் தரவல்லது. குண்டு இரக அரிசி இட்லி செய்வதற்கு ஏற்றது. இந்த இரகம், குலை நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. தூர்க்கட்டு மிதமாக இருக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஏஎஸ்டி 18

இந்த நெல் இரகம், 1991-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. குறுகிய கால பயிரான இது, 105-110 நாட்களில் அறுவடைக்கு வரும். எக்டருக்கு 7,300 கிலோ மகசூல் கிடைக்கும். இது குலை நோய்க்கு எதிர்ப்புத் திறன் உடையது.

ஏஎஸ்டி 20

இந்த நெல் இரகம், 1997-ஆம் ஆண்டு அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையம் மூலம் வெளியிடப்பட்டது. இதன் வயது 110 நாட்கள். எக்டருக்குச் சராசரியாக 6,000 கிலோ மகசூலைக் கொடுக்கவல்லது. நெல், நடுத்தர சன்ன வடிவில் இருக்கும். நீண்டு வளரும்.

ஏஎஸ்டி 21

இந்த நெல் இரகம், ஏ.எஸ்.டி.16 மற்றும் மஞ்சள் சரடை இரகத்தைக் கலப்பினம் செய்து 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் வயது 120 நாட்கள். மே-ஜூன் மாதங்களில் பயிரிட உகந்தது. எக்டருக்கு 6,330 கிலோ மகசூலைத் தரக்கூடியது. சாயாத தன்மை மிக்கது. அரிசி, சிறியதாக, தடித்து இருக்கும். தண்டுத் துளைப்பான், இலை மடக்குப்புழு, ஆனைக் கொம்பன், பாக்டீரிய இலைக்கருகல் நோய், இலையுறைக் கருகல் நோய் ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது.

எம்டியு 5

இந்த நெல் இரகம், 1996-ஆம் ஆண்டு, மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்டது. இது, 95-100 நாட்களில் விளையும். எக்டருக்கு 4,900 கிலோ மகசூலைத் தரும். நெல், நடுத்தரச் சன்ன வடிவில் இருக்கும். பயிர், நீண்டு வளரும் தன்மை மிக்கது.

எம்டியு 6

இந்த நெல் இரகம், 2015-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. எம்.டி.யு.5 மற்றும் எ.சி.எம். 96136 நெல் இரகத்தைக் கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டது. இதன் வயது 110-115 நாட்கள். எக்டருக்குச் சராசரியாக 6,118 கிலோ மகசூலைத் தரவல்லது. சிறந்த சமையல் பண்பும், சிறந்த சுவையும் கொண்டது. அவல் மற்றும் பொரி செய்ய ஏற்ற இரகம்.

டிபிஎஸ் 5

இந்த நெல் இரகம், 2014-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஏ.எஸ்.டி.16 மற்றும் ஏ.டி.டீ. 37 நெல் இரகக் கலப்பில் உருவாக்கப்பட்டது. இதன் வயது 120 நாட்கள். எக்டருக்கு 6,300 கிலோ மகசூலைத் தரவல்லது. சாயாத தன்மை கொண்டது. நெல், சிறியதாகவும் தடித்தும் இருக்கும். தண்டுத் துளைப்பான், இலைச்சுருட்டுப்புழு மற்றும் புகையான் பூச்சிக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.

டிஆர்ஒய் 5

இந்த நெல் இரகம், டி.ஆர்.ஒய்.2 இரகத்தைச் சடுதி மாற்ற முறையில் உருவாக்கி 2022-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் வயது 105-112 நாட்கள். குறுவை மற்றும் நவரைப் பருவத்தில் பயிரிட ஏற்றது. எக்டருக்குச் சராசரியாக 5,118 கிலோ மகசூல் கிடைக்கும். களர் மற்றும் உவர் நிலத்துக்கு ஏற்றது. அரிசி, நல்ல சமையல் பண்புடன், நீண்ட சன்ன வடிவில், வெள்ளையாக இருக்கும். குலை நோய், இலைப்புள்ளி நோய், புகையான், வெண்முதுகுத் தத்துப்பூச்சி, பச்சைத் தத்துப்பூச்சி ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் உடையது.

ஐஆர் 20

இந்த நெல் இரகம், 1969-இல் வெளியிடப்பட்டது. பன்னாட்டு நெல்-262 மற்றும் திருக்குப்பம்-6 இரகத்தின் கலப்பில் உருவாக்கப்பட்டது. இது, 135 நாட்களில் விளையும். எக்டருக்கு 6,146 கிலோ மகசூலைத் தரும். அரிசி, நடுத்தரமாகவும், மெல்லியதாகவும், (medium slender) வெள்ளை நிறத்தில் இருக்கும்.

ஐஆர் 36

இந்த இரகம், சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால், 1976-இல் வெளியிடப்பட்டது. இது, உலகம் முழுவதும் பரவலாகப் பயிரிடப்படும் குறுகிய கால, உயர் விளைச்சல் இரகமாகும். இதன் வயது 120 நாட்கள். குறைந்த உயரம் கொண்டது. பயிர் சாய்தல் குறைவாக இருக்கும். எக்டருக்கு 5,000 கிலோ நெல் மகசூல் கிடைக்கும். புகையான் பூச்சிக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. தண்டுத் துளைப்பான் மற்றும் பாக்டீரிய இலைக் கருகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.

ஐஆர் 64

இந்த நெல் இரகம், பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 1991-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஐ.ஆர்.5657-33-2-1 மற்றும் ஐ.ஆர்.2061-465-1-5-3 ஆகிய நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்டது. இதன் வயது 120 நாட்கள். எக்டருக்கு 6,146 கிலோ தானியம் கிடைக்கும். அரிசி, மெல்லியதாக வெள்ளை நிறத்தில் இருக்கும். சிறந்த சமையல் தரமிக்கது. நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, பின்தாளடி போன்ற பருவங்களுக்கு ஏற்றது. இது, தமிழ்நாட்டில் பெருமளவில் பயிரிடப்படும் பிரபலமான இரகமாகும்.


நவரை என்னும் கார்த்திகைப் பட்டத்திற்கு ஏற்ற நெல் இரகங்கள்!

முனைவர் அ.கோபிகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • பயிர்கள் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகளின் பங்கு!

  • பயறு வகைகளில் புதிய இரகங்களும் சிறப்புகளும்!

  • இயற்கை முறையில் நெல் சாகுபடி!

  • மானாவாரி மற்றும் தரிசுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்!

  • மண்புழு உரம்: எந்தெந்தப் பயிருக்கு எவ்வளவு தேவை?

  • தென்னங்கன்று உற்பத்தி!

  • சோயா மொச்சை சாகுபடி!

  • நல்ல வருமானத்தைத் தரும் நெல்வயல் மீன் வளர்ப்பு!

  • நேரடி நெல் சாகுபடியில் களை மேலாண்மை!