My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் ஊடுபயிர்கள்!

ஊடுபயிர்கள்

டுபயிர் சாகுபடி, துணை வருமானத்தைத் தருவதுடன், முக்கியப் பயிரைத் தாக்கும் பல்வேறு பூச்சிகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது. இவ்வகையில், பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் ஊடுபயிர்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

நிலக்கடலையில், தட்டைப்பயறை ஊடுபயிராக இட்டால், சிவப்புக் கம்பளிப் புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

நிலக்கடலையில், கம்பை ஊடுபயிராக இட்டால், சுருள்பூச்சி மற்றும் இலைப்பேனைக் கட்டுப்படுத்தலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

துவரை, பாசிப்பயறு சாகுபடியில், சோளத்தை ஊடுபயிராக இட்டால், காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

பருத்தியில், சூரியகாந்தியை ஊடுபயிராக இட்டால், பச்சைத் தத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

பருத்தியில், பாசிப்பயறு, உளுந்து, ஆமணக்கு, சோயாவை ஊடுபயிராக இட்டால், பருத்தியைத் தாக்கும் பூச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்தலாம்.

மக்காச்சோளத்தில், ஆமணக்கை ஊடுபயிராக இட்டால், புரொட்டீனியா புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

மக்காச்சோளத்தில், சோளத்தை ஊடுபயிராக இட்டால், குருத்து ஈ, தண்டுத் துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம்.

முட்டைக்கோசில், தக்காளியை ஊடுபயிராக இட்டால், வைரமுதுகு அந்துப்பூச்சி மற்றும் இலைப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

முட்டைக்கோசில், கொத்தமல்லியை ஊடுபயிராக இட்டால் அசுவினியைக் கட்டுப்படுத்தலாம்.

சோளத்தில், அவரையை ஊடுபயிராக இட்டால், சோளத்தண்டுப் புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

கரும்பில், தக்கைப்பூண்டை ஊடுபயிராக இட்டால், கரும்புத்தண்டுத் துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம்.

கத்தரியில், கொத்தமல்லியை ஊடுபயிராக இட்டால், தண்டுப்புழு மற்றும் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

பாகல் சாகுபடியில், மக்காச்சோளத்தை ஊடுபயிராக இட்டால், பழ ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.

வெண்டையில், கொத்தமல்லி மற்றும் சாமந்தியை ஊடுபயிராக இட்டால், தண்டுப்புழு மற்றும் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

வெள்ளரியில், மக்காச்சோளத்தை ஊடுபயிராக இட்டால், வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.

தட்டைப்பயறு சாகுபடியில், சோளத்தை ஊடுபயிராக இட்டால், அசுவினி மற்றும் இலைப்பேனைக் கட்டுப்படுத்தலாம்.


Pachai boomi DR GAYATHIRI

முனைவர் காயத்ரி சுப்பையா,

உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு – 603 203.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • ஆண்டு முழுவதும் பயன் தரும் தீவனப் பயிர்கள்!

  • மானாவாரிக்கு ஏற்ற புதிய வீரிய ஒட்டு மக்காச்சோளம்!

  • தர்ப்பூசணியில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

  • நெற்பயிரைத் தாக்கும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்!

  • குறைந்த நீரில் கை கொடுக்கும் சிறுதானியங்கள்!

  • மா சாகுபடி சிறக்க உதவும் உயிர் உரங்கள்!

  • பாரம்பரிய நெல் இரகங்களுக்கு ஏற்ற பட்டங்கள்!

  • மலர் சாகுபடியில் மனம் போல் காசு பார்க்கலாம்!

  • மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்!