My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பயறு வகைகளில் மகசூலைப் பெருக்கும் பயறு ஒண்டர், டிஏபி கரைசல் தெளிப்பு!

பயறு வகைகளில் மகசூலைப் பெருக்கும் பயறு ஒண்டர், டிஏபி கரைசல் தெளிப்பு!

உளுந்து, பாசிப்பயறு மற்றும் துவரையை சாகுபடி செய்யும் விவசாயிகள், பயிர்களின் பூக்கும் பருவத்தில் உரிய சத்து மேலாண்மையைக் கடைப்பிடிப்பதன் மூலம், பயிர் வளர்ச்சிக்கும், காய்கள் பிடிப்புக்கும் மற்றும் மகசூல் மேம்படவும் உதவலாம்.

பூக்கும் பருவம் 

பயறுவகைப் பயிர்களில் பூக்கும் பருவம், மகசூலைத் தீர்மானிக்கும் முக்கியமான பருவமாகும். இக்காலத்தில் நிலவும் வறட்சி, அதிக வெப்பம், சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால், பூக்கள் உதிர்வதுடன், காய்கள் பிடிப்பதும் பாதிக்கப்படும். எனவே, பயிரின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப, பரிந்துரை அளவிலான சத்துகளை வழங்குவது அவசியமாகும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பயறு ஒண்டர் தெளிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் (TNAU) பயறு ஒண்டர் என்பது, பயறுவகைப் பயிர்களுக்கான சிறப்பு இலைவழிச் சத்தாகும். பயறு ஒண்டரை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் கலந்து, பயிர்கள் பூக்கும் உச்சப் பருவத்தில் தெளிக்க வேண்டும். இதனால், பூக்கள் உதிர்தல் குறைந்து, காய்ப்பிடிப்பு அதிகமாகி, மகசூல் மேம்படும். தயாரிப்பு லேபிளில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

2 சத டிஏபி (DAP) கரைசல் தெளிப்பு

பயறு ஒண்டருக்கு மாற்றாக, சில பயறுவகைப் பயிர்களில், பூக்கும் பருவத்தில் 2 சத டிஏபி கரைசலை இலைகளில் தெளிக்கலாம். ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் டிஏபி வீதம் கலந்து கரைசலைத் தயாரிக்க வேண்டும். இதன்படி, 15 லிட்டர் நீருக்கு 300 கிராம் டிஏபி உரமும், 200 லிட்டர் நீருக்கு 4 கிலோ டிஏபி உரமும் தேவைப்படும்.

இந்த உரத்தை முந்தைய நாள் நீரில் ஊற வைத்து, மறுநாள் நன்றாகக் கலக்கி, கரையாத துகள்களை வடிகட்டி விட்டுத் தெளிக்கலாம். பயிர் மற்றும் சாகுபடி முறைக்கு ஏற்ப, பூக்கும் பருவத்தில் முதல் தெளிப்பையும், 15 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது தெளிப்பையும் மேற்கொள்ளலாம். இதற்கு மாற்றாக, 2 சதவீத யூரியா கரைசலையும் பயன்படுத்தலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும், பூக்கள் உதிர்வைக் குறைப்பதற்கு, ஒரு லிட்டர் நீருக்கு 40 மி.கி. NAA அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 100 மி.கி. சாலிசிலிக் அமிலம் வீதம் கலந்து, பயிர்கள் பூக்கும் முன்பும், அடுத்து அதிலிருந்து 15 நாட்கள் கழித்தும் தெளிக்கலாம். இந்தப் பரிந்துரைகள், பயிரைப் பொறுத்து மாறக்கூடும் என்பதால், வேளாண்மைத் துறையின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும்.

தெளிக்கும் போது கவனிக்க வேண்டியவை

பயறு ஒண்டர் மற்றும் டிஏபி கரைசலைத் தனித்தனியாகத் தெளிப்பது நல்லது. இரண்டையும் ஒன்றாகக் கலப்பதற்கு முன், தயாரிப்பு லேபிளில், கலப்பதற்கான அனுமதி உள்ளதா என்பதையும், அவை ஒன்றுக்கொன்று பொருந்துமா என்பதையும், உறுதிப்படுத்த வேண்டும்.

டிஏபி அல்லது யூரியா கரைசலைப் பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். NAA மற்றும் சாலிசிலிக் அமிலம் போன்ற வளர்ச்சிக் காரணிகளைப் பயன்படுத்தும் போது, குறிப்பிட்ட பயிருக்கான வேளாண் துறைப் பரிந்துரைகளையும் பின்பற்ற வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

இலைவழித் தெளிப்பைக் காலை அல்லது மாலை நேரத்தில் மேற்கொள்வது நல்லது. கடுமையான வெய்யில் நிலவும் போதும், பயிர்கள் நீர்ப் பற்றாக்குறையால் வாடியிருக்கும் நிலையிலும், தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும், பரிந்துரை அளவை விட அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், இலைகள் பாதிக்கப்படும். பயிரின் வயது, மண்வளம், பாசன வசதி மற்றும் நிலவும் வானிலையைக் கருத்தில் கொண்டு, சத்து மேலாண்மையை மேற்கொள்வது அவசியம்.

சரியான பருவத்தில், சரியான அளவில், வேளாண் துறையின் பரிந்துரைப்படி, பயறு ஒண்டர், டிஏபி கரைசல் உள்ளிட்ட இடுபொருள்களைப் பயன்படுத்துவது, பயிரின் வளர்ச்சிக்கு, பூக்கள் மற்றும் காய்களின் வளர்ச்சிக்கு, மகசூல் மேம்பாட்டுக்கு உதவும்.


பயறு வகைகளில் மகசூலைப் பெருக்கும் பயறு ஒண்டர், டிஏபி கரைசல் தெளிப்பு! ARIPUTHIRAN e1769341128950 https://pachaiboomi.net/5896004-2/

கா.அரிபுத்திரன்,

வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • உயிரியல் நுண்ணறிவுடன் கூடிய அறிவுசார் வேளாண்மை!

  • நன்மை செய்யும் ஒட்டுண்ணிகள்!

  • நெல் தன் வரலாறு கூறுதல்!

  • தென்னையில் ஊடுபயிர்கள்!

  • குறைந்த செலவிலான கால்நடைத் தீவனம் அசோலா!

  • நம்பிக்கையும் அறிவியலும் சந்திக்கும் ஆடிப்பட்டம்!

  • பசுந்தீவன உற்பத்திக்கு உதவும் மழைத் துப்பாக்கிப் பாசனம்!

  • பயிர் வளர்ச்சி மற்றும் கூடுதல் மகசூலுக்கு உதவும் இலைவழி உரமிடல்!

  • தென்னை சாகுபடியில் உர மேலாண்மை!