My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தீவன உற்பத்தியில் எல் நினோவின் தாக்கத்தைக் குறைக்கும் உத்திகள்!

தீவன உற்பத்தியில் எல் நினோவின் தாக்கத்தைக் குறைக்கும் உத்திகள்!

எல் நினோ என்பது, பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில், கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விடக் கூடுவதுடன் தொடர்புள்ள இயற்கையான காலநிலை நிகழ்வாகும். இது, உலகின் பல பகுதிகளில், மழைப்பொழிவு, வெப்பநிலை மற்றும் வறட்சிப் போக்கை மாற்றக்கூடும். இந்தியாவில் இதன் தாக்கம், ஆண்டுதோறும் ஒரே மாதிரியாக இருக்காது. இருப்பினும், பருவமழைக் குறைவு அல்லது வெப்பநிலை உயர்வு ஏற்படும் ஆண்டுகளில், தீவன உற்பத்தி பாதிக்கப்படும்.

தீவன உற்பத்தியில் ஏற்படும் முக்கியத் தாக்கங்கள்

மழைப்பொழிவுக் குறைவு: மழை பெய்தல் குறைவதால், மானாவாரி நிலங்களில் பயிரிடப்படும், சோளம், கம்பு, மக்காச்சோளம் மற்றும் தீவனப் புற்களின் வளர்ச்சிக் குறையும். விதைகள் முளைப்பு, தழை வளர்ச்சி மற்றும் மொத்த அறுவடை அளவு குறைவதால், கால்நடைகளுக்குக் கிடைக்கும் பசுந்தீவனத்தின் அளவும் குறையும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வறட்சி மற்றும் மண் ஈரப்பதக் குறைவு: நீண்டகால மழையின்மை, மண்ணின் ஈரத்தைக் குறைத்து, தீவனப் பயிர்களின் வேர் வளர்ச்சி மற்றும் சத்து உறிஞ்சுதலைப் பாதிக்கிறது. இதனால், பயிர்கள் விரைவில் வாடுதல், வளர்ச்சியில் தாமதம் மற்றும் விளைச்சல் இழப்பு ஏற்படும்.

அதிக வெப்பநிலை: வெப்ப அழுத்தம், தாவரங்களில் நீராவிப்போக்கை அதிகரிக்கிறது. மண்ணில் போதிய நீர் இல்லாத போது ஒளிச்சேர்க்கை குறைந்து, புல் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்களின் வளர்ச்சிப் பாதிக்கப்படும். சில பயிர்களில் தண்டு வளர்ச்சி அதிகரித்தாலும், இலை விகிதம் மற்றும் தீவனத் தரம் குறையும்.

தீவனத்தின் சத்துத் தரம்: வறட்சி காரணமாக, தீவனப் பயிர்கள் முன்கூட்டியே முதிர்ச்சி அடையும். இதனால், நார்ச்சத்து அதிகரித்து, செரிமானத் திறன் மற்றும் புரதச்சத்துக் குறையும். குறிப்பாக, இளம் தீவனம் மற்றும் சத்துமிக்க பசுந்தீவனத்தின் கிடைப்புத் தன்மை குறைவது, கால்நடைச் சத்துகளில் சிக்கலை ஏற்படுத்தும்.

பாசனம் மற்றும் உற்பத்திச் செலவு: நீர் நிலைகளில் நீரிருப்புக் குறைந்தால், பாசன வசதி பாதிக்கப்படும். பம்ப்செட் இயக்கம், நீரை எடுத்துச் செல்லுதல் மற்றும் மாற்றுத் தீவனம் வாங்குதல் போன்ற செலவுகள் அதிகரிக்கும். சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகப் பொருளாதார அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும்.

கால்நடை உற்பத்தி மீதான மறைமுக விளைவுகள்: தீவனப் பற்றாக்குறை மற்றும் தரக்குறைவு காரணமாக, பால் உற்பத்தி, உடல் எடை அதிகரிப்பு, இனப்பெருக்கத் திறன் மற்றும் நோயெதிர்ப்புத் திறன் பாதிக்கப்படும். தீவனச் செலவு உயர்வதால், கால்நடை வளர்ப்பின் இலாபமும் குறையக்கூடும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தாக்கத்தைக் குறைக்கும் மேலாண்மை உத்திகள்

வறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்: கம்பு, சோளம் போன்ற உள்ளூர்ச் சூழலுக்கு ஏற்ற, வறட்சியைத் தாங்கும் பயிர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மழை மற்றும் மண் வகைக்கு ஏற்ப, சரியான இரகத்தையும், விதைப்பு நேரத்தையும் தேர்வு செய்வது அவசியம்.

தீவன வங்கியை அமைத்தல்: உபரித் தீவனம் கிடைக்கும் காலங்களில், புல் மற்றும் பிற தீவனங்களை, வைக்கோல் அல்லது உலர் தீவனமாகப் பாதுகாக்க வேண்டும். சோளம் போன்ற பயிர்களிலிருந்து தரமான சிலேஜ் தயாரித்துச் சேமிப்பது, வறட்சிக் காலத்தில் உதவும்.

நீர் மேலாண்மை: சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்புப் பாசனம், மழைநீர்ச் சேகரிப்பு மற்றும் பண்ணைக் குட்டைகள் போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம். மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க மூடாக்கு இடலாம். மேலும், தேவையற்ற நிலையில், நீர்  வீணாவதைத் தடுப்பதும் முக்கியம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

பல்வகைத் தீவன உற்பத்தி: ஒரு பயிரை மட்டுமே சார்ந்திராமல், புல் வகைகள், பயறு வகைத் தீவனங்கள் மற்றும் மரத்தழைத் தீவனங்களை இணைத்து வளர்க்க வேண்டும். நிலத்தின் தன்மைக்கு ஏற்ற, கலப்புப் பயிர்கள் மற்றும் பயிர்ச்சுழற்சி முறைகள், தீவனப் பற்றாக்குறையைக் குறைக்க உதவும்.

மேம்பட்ட தீவனப் பாதுகாப்பு: அறுவடைக்குப் பிறகு, தீவனத்தைச் சரியாக உலர்த்தி, மழை மற்றும் ஈரப்பதத்திலிருந்து பாதுகாத்துச் சேமிக்க வேண்டும். தரமான வைக்கோல், சிலேஜ் மற்றும் உலர் தீவன இருப்பை, முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

சமநிலையான கால்நடை உணவு: பசுந்தீவனம் குறையும் காலங்களில் கிடைக்கும் உலர் தீவனத்துடன், சமநிலையான அடர் தீவனம், தாதுப்புக் கலவை மற்றும் போதிய குடிநீரை வழங்க வேண்டும். தீவன மாற்றங்களைத் திடீரெனச் செய்யாமல், படிப்படியாக மேற்கொள்ள வேண்டும்.

வானிலை முன்னறிவிப்பு மற்றும் திட்டமிடல்: இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் வேளாண்மைத் துறையின் ஆலோசனைகளைப் பின்பற்றி, விதைப்பு, பாசனம், அறுவடை மற்றும் தீவனச் சேமிப்பைத் திட்டமிட வேண்டும். உள்ளூர்க் கால்நடை மற்றும் வேளாண்மை அலுவலர்களின் ஆலோசனையைப் பெறுவது பயனுள்ளதாகும்.

எல் நினோவுடன் தொடர்புடைய மழைப்பொழிவு மாற்றங்களும், வெப்பநிலை உயர்வும், சில ஆண்டுகளில், தீவன உற்பத்தி, அதன் தரம் மற்றும் கிடைப்புத் தன்மையைப் பாதிக்கக் கூடும். ஆனால், இதன் தாக்கம், இடம், பருவம் மற்றும் ஆண்டைப் பொறுத்து மாறுபடும்.

வறட்சியைத் தாங்கும் பயிர்கள், நீர்ச்சேமிப்பு, சிலேஜ் தயாரித்தல், தீவன வங்கி மற்றும் அறிவியல் சார்ந்த கால்நடைச் சத்து மேலாண்மை ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், தீவனப் பற்றாக்குறையைக் குறைத்து, கால்நடை உற்பத்தியைப் பாதுகாக்கலாம்.


தீவன உற்பத்தியில் எல் நினோவின் தாக்கத்தைக் குறைக்கும் உத்திகள்! T.ANANDHI https://pachaiboomi.net/479859096-2/

முனைவர் த.ஆனந்தி,

உதவிப் பேராசிரியை, முனைவர் செ.பிரவின், உதவிப் பேராசிரியர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை – 642 205.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • இந்திய செம்மறி ஆட்டினங்கள்!

  • குளிர்கால அயர்ச்சியில் இருந்து கறவை மாடுகளைப் பாதுகாத்தல்!

  • குறைந்த செலவிலான கால்நடைத் தீவனம் அசோலா!

  • காடை வளர்ப்பில் கோடைக்கால வெப்ப அழுத்த மேலாண்மை!

  • முயல் வளர்ப்பில் கோடைக்கால வெப்ப அழுத்த மேலாண்மை!

  • நிலையான மற்றும் கூடுதல் பால் உற்பத்திக்கான வழிமுறைகள்!

  • கறவை மாடுகளின் சூலகத்தில் உருவாகும் நீர்க்கட்டிகள்!

  • கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மைக்கான காரணிகள்!

  • எருமைகளில் சினைப்பருவ நிர்வாகம்!