My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தென்னையில் ஊடுபயிர்கள்!

தென்னையில் ஊடுபயிர்கள்!

தென்னந்தோப்பில் இடுவதற்கான ஊடுபயிர்களைத் தேர்வு செய்யும் போது, அந்தந்தப் பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை, மண் மற்றும் அந்த விளைபொருளுக்கு ஏற்ற சந்தையைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தென்னை ஓலைகளின் சுற்றளவு, இடைவெளி, வயது, தோப்பில் கிடைக்கும் சூரிய ஒளி மற்றும் காற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

1-7 ஏழாண்டுத் தோப்பு

ஏழாண்டுகள் வரையான தென்னந்தோப்பில், அந்தந்தப் பகுதியின் பருவநிலை, மரத்தின் பரப்பளவு மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப, ஐந்தாண்டுகள் வரை, ஒரு பருவப் பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மரவள்ளி மற்றும் மஞ்சளைப் பயிர் செய்யலாம். வாழை, கரும்பு, நெல் போன்ற பயிர்கள் சாகுபடியைத் தவிர்க்க வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

7-20 ஆண்டுத் தோப்பு

இந்தக் காலக்கட்டத்தில், பசுந்தாள் உரம் மற்றும் நேப்பியர் புல், கினியாப்புல் போன்ற தீவனப் பயிர்களைப் பயிர் செய்யலாம்.

20 ஆண்டுகளுக்கு மேலான தோப்பு

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலான தோப்புகளில், வாழை, நிலக்கடலை, வெண்டை, மஞ்சள், மரவள்ளி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சிறுகிழங்கு, சேனைக்கிழங்கு, இஞ்சி மற்றும் அன்னாசியைப் பயிரிடலாம்.

ஊடுபயிர் செய்வதற்கு, தோப்புக்குள் விழும் சூரிய ஒளி 50 சதத்துக்கு மேல் இருக்க வேண்டும். கோகோ, பன்னியூர் 1, பன்னியூர் 2, பன்னியூர் 5 அல்லது கரிமுண்டா வகை மிளகு, ஜாதிக்காய், வனிலா ஆகிய பல்லாண்டுப் பயிர்கள், தென்னந் தோப்பில் ஊடுபயிர்களாக இடப்படுகின்றன.

இவற்றில், கோகோ, ஜாதிக்காய், வனிலா ஆகியன, பொள்ளாச்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு ஏற்றவை. மேற்கூறிய பயிரமைப்புகளில் ஒவ்வொரு பயிருக்கும், சரியான உரம் மற்றும் பாசனத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தென்னந்தோப்பில் ஊடுபயிர் செய்யத் தேர்ந்தெடுக்கும் பயிர், தென்னை மரத்தின் வயது, நடவு இடைவெளி ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும். இதனால், தென்னை மரங்களின் வளர்ச்சி மற்றும் காய்ப்புத் திறனில் எந்தக் குறையும் இல்லாமல், தொடர்ச்சியாக இலாபம் கிடைக்கும்.

பல அடுக்குப் பயிர்கள் சாகுபடி

சூரிய ஒளி முழுமையாகக் கிடைக்கும் வகையில், தென்னையின் உச்சி ஓலைகள் அடுக்கடுக்காக, வட்டமாக அமைந்துள்ளன. ஆகவே, சூரியவொளி அடிப்படையில், தென்னை ஓலைப்பரப்பை, முதல் அடுக்கு அல்லது முதல் மாடி என அழைக்கலாம்.

தென்னை மரத்தின் தண்டைச் சார்ந்து 12 முதல் 15 அடி உயரம் வரை வளர்ந்து, ஓலைகளுக்கு ஊடே விழும் சிறியளவு சூரிய ஒளியைப் பயன்படுத்தி, நன்றாக வளர்ந்து காய்க்கும் திறனுள்ள குறுமிளகு, வெற்றிலை போன்ற அமைப்புள்ள செடிகளை, இரண்டாம் அடுக்குப் பயிர் என அழைக்கலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

நான்கு தென்னை மரங்களின் மத்திய இடைவெளியில் நேராக விழும் குறைந்தளவு சூரிய ஒளியையும், தென்னை ஓலை இணுக்குகள் ஊடே விழும் ஒளியையும் பயன்படுத்தி, 8 முதல் 12 அடி உயரம் வரை வளர்ந்து, நன்றாகக் காய்க்கும் கோகோ, பழச்செடிகள், இலவங்கம், கிராம்பு போன்றவற்றை, மூன்றாம் அடுக்குப் பயிர்கள் என அழைக்கலாம்.

தரையிலிருந்து மூன்றடி உயரம் மட்டும் வளர்ந்து, மூன்றடுக்குப் பயிர்களுக்கு இடையே சிதறி விழும், குறைந்த ஒளியை மட்டும் பயன்படுத்திச் செழிப்பாக வளர்ந்து, நல்ல பலனைத் தரும் அன்னாசிச் செடிகளை, நான்காம் அடுக்குப் பயிர் என அழைக்கலாம்.

இப்படி, செடிகளின் உயரம், இலைகளின் அமைப்பு, அவற்றின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் சூரிய ஒளி ஆகியவற்றின் அடிப்படையில் இடப்படும் ஊடுபயிர்கள், ஒன்றுக்கொன்று துணையாக நின்று வளர்கின்றன.

இத்தகைய தோப்புகளின் உள்பகுதி தட்பவெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம், மண்ணின் வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றில், விரும்பத் தகுந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. மண்ணில் உள்ள பயன்மிகு நுண்ணுயிரிகள் பெருகி வளர்கின்றன. கோகோ போன்ற செடிகளின் உதிர்ந்த இலைகள், தென்னைக்குச் சிறந்த உரமாகப் பயன்படுகின்றன. பல அடுக்குப் பயிர்கள் உள்ள தென்னந் தோப்பில், ஊடுபயிர்களின் விளைச்சலும், தேங்காய் விளைச்சலும் பெருமளவில் அதிகரிக்கின்றன.

பல பயிர்கள் அமைப்பு

தென்னை, வாழை, சிறுகிழங்கு, வெண்டை ஆகியன, கிழக்குப் பகுதியில் பயிரிட ஏற்றவை.

தென்னை, வாழை, மிளகு, கோகோ, ஜாதிக்காய், வெனிலா ஆகியன, மேற்குப் பகுதியில் பயிரிட ஏற்றவை.

ஊடுபயிர்களுக்கும், தென்னை மரங்களுக்கும் தேவையான சத்துகளைத் தனித்தனியாக, தகுந்த உரங்களைக் கொடுக்க வேண்டும். இதனால், மண்வளம் மாறாமல் இருக்கும்.

இப்படி, குறைந்த பரப்பிலிருந்து அதிக மகசூலைப் பெறுவதற்கான பயிர்களை, விஞ்ஞான அடிப்படையில் இணைத்து வளர்க்கும், இந்தப் பல்லடுக்குப் பயிர்கள் முறை, மிகச் சிறந்ததாக விளங்குகிறது.


இயக்குநர்,

மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • உயிரியல் நுண்ணறிவுடன் கூடிய அறிவுசார் வேளாண்மை!

  • நன்மை செய்யும் ஒட்டுண்ணிகள்!

  • நெல் தன் வரலாறு கூறுதல்!

  • குறைந்த செலவிலான கால்நடைத் தீவனம் அசோலா!

  • நம்பிக்கையும் அறிவியலும் சந்திக்கும் ஆடிப்பட்டம்!

  • பசுந்தீவன உற்பத்திக்கு உதவும் மழைத் துப்பாக்கிப் பாசனம்!

  • பயிர் வளர்ச்சி மற்றும் கூடுதல் மகசூலுக்கு உதவும் இலைவழி உரமிடல்!

  • தென்னை சாகுபடியில் உர மேலாண்மை!

  • ஆண்டு முழுவதும் பயன் தரும் தீவனப் பயிர்கள்!