My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

நெற்பயிருக்குத் துணையாகும் மெத்திலோ பாக்டீரியம்!

நெற்பயிருக்குத் துணையாகும் மெத்திலோ பாக்டீரியம்!

நெல் சாகுபடியில், பருவமழை தாமதமாதல் அல்லது பொய்த்தல், பாசனப் பற்றாக்குறை போன்ற காரணங்களால், பயிர்களின் வளர்ச்சிப் பாதிக்கப்படும். குறிப்பாக, தூர்விடும் பருவம், கதிர் உருவாகும் பருவம் போன்ற முக்கிய வளர்ச்சி நிலைகளில், பாசனப் பற்றாக்குறை ஏற்படும் போது, மகசூல் இழப்பு ஏற்படும். இத்தகைய சூழலில் நெற்பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, வறட்சியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உதவுவதில், பி.பி.எப்.எம். பாக்டீரியா முக்கியத்துவம் பெறுகிறது.

பி.பி.எப்.எம். பாக்டீரியா

பி.பி.எப்.எம். பாக்டீரியா (Pink Pigmented Facultative Methylotrophs) என்பது, இளஞ்சிவப்பு நிறத்திலான மெத்தனாலைப் பயன்படுத்தி வளரக்கூடிய, நன்மை தரும் பாக்டீரியாக்கள் ஆகும். இவை இயற்கையாகவே தாவரங்களின் இலைப்பரப்பில் காணப்படுகின்றன. மேலும், நெற்பயிரின் இலைகளில் தெளிக்கும் போது, அங்கேயே தங்கி வளரக் கூடியவை.

தாவர வளர்ச்சியின் போது இலைகளில் இருந்து வெளியேறும் மெத்தனால் என்னும் கரிமப் பொருளை உணவாக் கொண்டு இந்த பாக்டீரியாக்கள் பெருகுகின்றன. மேலும், தாவர வளர்ச்சிக்கு உதவும் சைட்டோகைனின், ஆக்சின் போன்ற வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்யும் திறனும், சிலவகை பி.பி.எப்.எம். பாக்டீரியாக்களுக்கு உள்ளது. இதன் மூலம், நெற்பயிரின் வேர் வளர்ச்சி, இலை வளர்ச்சி, தளிர் உருவாக்கம் என, பயிரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இந்த பாக்டீரியாக்கள் உதவுகின்றன.

Advertisement: (+91) 90430 82900

நெற்பயிரில் செயல்படும் விதம்

பி.பி.எப்.எம். பாக்டீரியாக்களின் முக்கியப் பணி, பயிரின் இலைகளில் தங்கியிருந்து, அந்தப் பயிரின் இயற்கையான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது ஆகும்.

இலைப்பரப்பில் தங்குதல்: பி.பி.எப்.எம். பாக்டீரியக் கரைசலை இலைகளில் தெளிக்கும் போது, அந்தக் கரைசலில் உயிருடன் இருக்கும் பாக்டீரியாக்கள், இலைகளின் மேற்பரப்பில் படிந்து அங்கேயே தங்கி விடும். இதற்கு, பைலோஸ்பியர் குடியேற்றம் என்று பெயர்.

மெத்தனாலை உணவாகக் கொள்தல்: நெற்பயிரின் இலைகளில்  இருந்து வெளியேறும் மெத்தனாலைக் கரிம ஆதாரமாகக் கொண்டு, இந்த பாக்டீரியாக்கள் வளரும். இப்படி, இலைகளில் தொடர்ந்து இருந்து பெருகும்.

வளர்ச்சி ஊக்கிகள் உற்பத்தி: சிலவகை பி.பி.எப்.எம். பாக்டீரியாக்கள், சைட்டோகைனின், ஆக்சின் போன்ற தாவர வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்யும். சைட்டோகைனின் செல் பிரிவானது, இலை வளர்ச்சிக்கும், பச்சையம் நீடிக்கவும் உதவும். ஆக்சின், வேர் வளர்ச்சி, பக்க வேர்கள் உருவாக்கம் மற்றும் செல்களின் நீட்சிக்கு உதவும்.

வறட்சியைத் தாங்கும் விதம்

வறட்சிக் காலத்தில், பயிர்களில் எத்திலீன் என்னும் தாவர ஹார்மோனின் அளவு கூடும்.  இதனால், வேர் வளர்ச்சி உள்ளிட்ட இயல்பான வளர்ச்சிக்கான செயல்கள் பாதிக்கப்படும்.

இந்நிலையில், சிலவகை பி.பி.எப்.எம். பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும், ஏ.சி.சி. டீஅமினேஸ் நொதியானது, எத்திலீனை உருவாக்கும் முன்னோடிப் பொருளான, 1-அமினோ சைக்ளோ புரோப்பேன்-1 கார்பாக்சிலிக் அமிலத்தைச் சிதைத்து, எத்திலீன் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும். இதன் மூலம், வேர் வளர்ச்சிச் சிறப்பாக அமைந்து, வறட்சியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

சிலவகை பி.பி.எப்.எம். பாக்டீரியாக்கள், பாஸ்பரஸ் சத்தைக் கரைத்துக் கிடைக்கச் செய்தல், இரும்புச் சத்தைப் பெறுவதற்கான சைடரோஃபோரை உற்பத்தி செய்தல், தாவரங்களின் இயற்கையான பாதுகாப்புத் திறனை ஊக்குவித்தல் போன்ற பண்புகளைக் கொண்டிருக்கும்.

பயன்படுத்தும் முறைகள்

மண்ணில் இடுதல்: ஏக்கருக்கு 1 கிலோ பி.பி.எப்.எம். பாக்டீரியக் கலவை மற்றும் 50 கிலோ மட்கிய தொழுவுரம் வீதம் எடுத்து நன்கு கலந்து வயலில் சீராக இட வேண்டும். இதன் மூலம், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் நன்கு இயங்கி, பயிர் வளர்ச்சிக்கு உதவும்.

இலைவழித் தெளிப்பு: ஏக்கருக்கு 1 லிட்டர் பி.பி.எப்.எம். பாக்டீரியத் திரவம் வீதம் எடுத்து 200 லிட்டர் நீரில் கலந்து, நெற்பயிரின் இலைகளில் சீராகத் தெளிக்க வேண்டும். இதன் மூலம் பாக்டீரியாக்கள் இலைகளில் தங்கியிருந்து பயிர் வளர்ச்சிக்கு உதவும்.

முக்கியக் குறிப்புகள்

  • பி.பி.எப்.எம். பாக்டீரிய நுண்ணுயிர்க் கரைசலை, பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் கலந்து தெளிக்கக் கூடாது.
  • பூஞ்சைக்கொல்லி மருந்துகளுடன் கலந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  • உயிருள்ள நுண்ணுயிரிகளின் செயல் திறன் பாதிக்கப்படாமல் இருக்க, பரிந்துரை அளவு மற்றும் பயன்படுத்தும் முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
  • இரசாயன மருந்துகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தால், அவற்றின் இணக்கத் தன்மை மற்றும் இடைவெளி குறித்து, வேளாண் வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

பி.பி.எப்.எம். பாக்டீரியா என்பது, தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை நேரடியாக வழங்கும் வழக்கமான உரமல்ல. பயிர்களுடன் நட்புடன் இருந்து, வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்து, பயிரின் இயல்பான வளர்ச்சிக்கு உதவும் உயிரியல் ஊக்கியாகும்.

எனவே, நெல் சாகுபடியில் வழக்கமான உரங்கள், பாசனம், பயிர்ப் பாதுகாப்புப் பொருள்களுடன், பி.பி.எப்.எம். பாக்டீரியக் கரைசலையும் பயன்படுத்தலாம். இது, பயிர் வளர்ச்சியை மேம்படுத்தவும், வறட்சியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் உதவும்.


நெற்பயிருக்குத் துணையாகும் மெத்திலோ பாக்டீரியம்! ARIPUTHIRAN e1769341128950 https://pachaiboomi.net/7995006-2/

கா.அரிபுத்திரன்,

வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.

Advertisement: (+91) 90430 82900

Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • நெற்பயிரைத் தாக்கும் செம்பேன்கள்!

  • திரவநிலை உயிர் உரங்களும் அவற்றின் பயன்களும்!

  • பயிர்களைப் பாதுகாக்கும் இயற்கைக் காவலர்கள்!

  • சமச்சீர் உரமே மண்வளம் காத்து மகசூல் பெருக்கும்!

  • மண்வளம் காக்கும் ஆறு வழிமுறைகள்!

  • மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் பூச்சிகளும் நோய்களும்!

  • பயறு வகைகளில் மகசூலைப் பெருக்கும் பயறு ஒண்டர், டிஏபி கரைசல் தெளிப்பு!

  • நன்மை செய்யும் ஒட்டுண்ணிகள்!

  • தென்னையில் ஊடுபயிர்கள்!