My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உயிரியல் நுண்ணறிவுடன் கூடிய அறிவுசார் வேளாண்மை!

உயிரியல் நுண்ணறிவுடன் கூடிய அறிவுசார் வேளாண்மை!

விவசாயத்தில் உற்பத்தியைக் கூட்டுவதுடன், நீர், உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைத்து, விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாயைக் கிடைக்கச் செய்யும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI), உயிரியல் நுண்ணறிவு மற்றும் அறிவுசார் (smart) வேளாண்மைத் தொழில் நுட்பங்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள், தங்களின் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து அதற்கேற்ப இயங்கி வருகின்றன. இயற்கையில் காணப்படும் இந்த நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் தொழில் நுட்பங்கள்; தற்போது செயற்கை நுண்ணறிவு, IoT சென்சார்கள், ட்ரோன்கள், ரோபோட்கள் மற்றும் தரவுப் பகுப்பாய்வுடன் இணைக்கப்பட்டு விவசாயத்தில் பயன்படுத்தப் படுகின்றன.

நோய்களை முன்கூட்டியே கண்டறியும் செ.நு.தொ.நு.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பயிர்களின் இலைகள் மற்றும் தாவரங்களின் படங்களை, கேமராக்கள் மூலம் பதிவு செய்து, செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் உதவியுடன், நோய் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். இதன் மூலம், நோய் பரவுவதற்கு முன்பே, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

நீரைச் சேமிக்கும் ஸ்மார்ட் பாசனம்

மண்ணின் ஈரப்பதத்தை அளவிடும் சென்சார்கள்; வெப்பநிலை மற்றும் வானிலைத் தரவுகளுடன் இணைக்கப்பட்டு செயல்படுகின்றன. பயிருக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை, AI மூலம் கணித்து, அதற்கேற்ப தானியங்கி நீர்ப்பாசனத்தை மேற்கொள்ள முடியும். இதனால், நீர் வீணாவது குறைந்து, நீரின் பயன்பாட்டுத் திறன் கூடும்.

பூச்சிக் கட்டுப்பாட்டிலும் தொழில் நுட்பம்

பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம், பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். இதன் மூலம், தேவையற்ற பூச்சிக்கொல்லி பயன்பாட்டைத் தவிர்த்து, விவசாயச் செலவையும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் கட்டுப்படுத்தலாம்.

சந்தை விலையை முன்கூட்டியே அறிய உதவும் செ.நு.தொ.நு.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

விவசாயிகளுக்கு ஏற்படும் மிக முக்கியமான சவால்களில் ஒன்று, எப்போது விற்பனை செய்தால் அதிக விலை கிடைக்கும் என்பதாகும். இந்தப் பிரச்சினைக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் உதவக்கூடும்.

கடந்த காலச் சந்தை விலைகள், தற்போதைய சந்தை வரத்து, பொருளின் தேவை, பருவநிலை, வானிலை, உற்பத்தி அளவு மற்றும் பல்வேறு சந்தைகளின் விலை நிலவரம் போன்ற, மிகப்பெரிய அளவிலான தரவுகளை AI மூலம் பகுப்பாய்வு செய்ய முடியும். இதன் மூலம், குறிப்பிட்ட விளைபொருளின் விலை உயருமா, குறையுமா அல்லது நிலையாக இருக்குமா என்பதற்கான சந்தைப் போக்கை முன்கூட்டியே கணிக்க முடியும்.

உதாரணமாக, ஒரு விவசாயி தக்காளியை சாகுபடி செய்திருந்தால், AI மூலம், கடந்த கால விலை விவரம், தற்போதைய வரத்து, தேவை மற்றும் வானிலை உள்ளிட்ட தகவல்களை ஆய்வு செய்து, அடுத்த சில வாரங்களில் விலை உயரக்கூடிய வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதைத் தெரிவிக்க முடியும்.

இதன் அடிப்படையில் விவசாயிகள், எப்போது அறுவடை செய்வது, எந்தச் சந்தையில் விற்பது, உடனடியாக விற்பதா அல்லது சில நாட்கள் சேமித்து வைப்பதா என்பன போன்ற முடிவுகளை, தரவு அடிப்படையில் எடுக்க முடியும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

எதிர்காலச் சந்தை வாய்ப்புகளை அறிய உதவும் புதிய வாய்ப்பு

எதிர்காலத்தில், AI விவசாயச் சந்தை ஆலோசனை போன்ற அமைப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஒரு விவசாயி, தனது பயிர், சாகுபடிப் பரப்பு, அறுவடைக் காலம் போன்ற தகவல்களைப் பதிவு செய்தால், AI அமைப்பு மூலம், பல்வேறு சந்தைத் தரவுகளை ஆய்வு செய்து, சாத்தியமான விலைப் போக்கையும், சந்தை வாய்ப்புகளையும் அறிய முடியும்.

மேலும், அருகிலுள்ள சந்தைகள் மட்டுமின்றி, பிற மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் ஏற்றுமதிச் சந்தைகளிலும் எந்தப் பொருளுக்கான தேவை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்பதைக் கண்டறிய உதவும் தொழில் நுட்பமாகவும் இது உருவெடுக்கலாம்.

இதன் மூலம், விளைந்த பிறகு விலை என்ன என்னும் நிலையிலிருந்து, எந்தப் பயிரை எப்போது சாகுபடி செய்தால், நல்ல சந்தை வாய்ப்புக் கிடைக்கும் என்னும் முன்கூட்டிய திட்டமிடலுக்கு விவசாயம் நகர முடியும்.

இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்ளும் செ.நு.தொ.நு.

எறும்புகள், தேனீக்கள் போன்ற உயிரினங்கள் கூட்டமாக இயங்கி, சிக்கலான பிரச்சினைகளில் தீர்வு காணும் முறையை அடிப்படையாகக் கொண்ட, கூட்ட நுண்ணறிவுத் (Swarm Intelligence) தொழில் நுட்பமும், விவசாயத்தில் பயன்படும் என்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

பயிர்த் திட்டமிடல், நீர் மற்றும் உரத்தைச் சரியான முறையில் அளித்தல், விவசாயப் பணிகளை மேம்படுத்தல் போன்றவற்றில், இந்த அணுகுமுறை எதிர்காலத்தில் பயன்படக் கூடும்.

ட்ரோன்கள், ரோபோக்கள் மூலம் தானியங்கி விவசாயம்

விவசாய நிலங்களைக் கண்காணித்தல், பயிர்களின் வளர்ச்சியை மதிப்பிடுதல், உரம் மற்றும் மருந்துகளைத் தெளித்தல் போன்ற பணிகளில், ட்ரோன்கள் ஏற்கெனவே பயன்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில், களையெடுத்தல், அறுவடை உள்ளிட்ட பணிகளிலும், தானியங்கி ரோபோக்களின் பயன்பாடு அதிகரிக்கக் கூடும்.

விவசாயியின் முடிவெடுப்புக்குத் துணை

செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம், எதிர்காலச் சந்தை விலையை 100 சதவீதம் உறுதியாகக் கணிக்காது. ஏனெனில், எதிர்பாராத வானிலை, திடீர் உற்பத்தி மாற்றம், சந்தை வரத்து, அரசின் கொள்கை மாற்றம், ஏற்றுமதி அல்லது இறக்குமதி கட்டுப்பாடுகள் போன்றவை விலையை மாற்றக்கூடும்.

எனவே, செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் வழங்கும் தகவலை, உறுதியான விலை அறிவிப்பாகக் கருதாமல், விவசாயியின் முடிவெடுப்புக்கு உதவும், தரவு சார்ந்த ஆலோசனையாகக் கொள்ளலாம்.

உயிரியல் நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவு மற்றும் IoT தொழில் நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், குறைந்த வளங்களைப் பயன்படுத்தி, அதிக உற்பத்தி மற்றும் அதிக வருவாயைத் தரும், அறிவுசார் வேளாண்மை உருவாகும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, நீர்ப் பற்றாக்குறை, காலநிலை மாற்றம், தொழிலாளர் பற்றாக்குறை, சந்தை விலை ஏற்ற இறக்கம் போன்ற சவால்களை எதிர்கொள்ள, விதைப்பதற்கு முன்பே சந்தையை அறிந்து செயல்படும் விவசாயம் என்னும் புதிய அணுகுமுறைக்கு, செயற்கை நுண்ணறிவு, முக்கிய அடித்தளமாக அமையக்கூடும்.


உயிரியல் நுண்ணறிவுடன் கூடிய அறிவுசார் வேளாண்மை! ARIPUTHIRAN e1769341128950 https://pachaiboomi.net/79490460-2/

கா.அரிபுத்திரன்,

வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • நன்மை செய்யும் ஒட்டுண்ணிகள்!

  • நெல் தன் வரலாறு கூறுதல்!

  • தென்னையில் ஊடுபயிர்கள்!

  • குறைந்த செலவிலான கால்நடைத் தீவனம் அசோலா!

  • நம்பிக்கையும் அறிவியலும் சந்திக்கும் ஆடிப்பட்டம்!

  • பசுந்தீவன உற்பத்திக்கு உதவும் மழைத் துப்பாக்கிப் பாசனம்!

  • பயிர் வளர்ச்சி மற்றும் கூடுதல் மகசூலுக்கு உதவும் இலைவழி உரமிடல்!

  • தென்னை சாகுபடியில் உர மேலாண்மை!

  • ஆண்டு முழுவதும் பயன் தரும் தீவனப் பயிர்கள்!