My page - topic 1, topic 2, topic 3

மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

(Agrivoltaics)

லக மக்கள் தொகை வேகமாக உயர்ந்து வருவது, உணவின் தேவை அதிகரிப்பது, நமது வாழ்க்கை முறை மின்சாரத்தைப் பெருமளவில் சார்ந்து இருப்பது போன்றவை, மனித குலத்தின் முக்கியச் சவால்களாக உள்ளன. குறிப்பாக, விவசாய நிலங்கள் நாளுக்கு நாள் குறைந்து வரும் சூழலில், ஒரே நிலத்தைப் பல நோக்கங்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சவால்களுக்குப் புதுமையான, நிலையான தீர்வாக, அக்ரி வோல்டாயிக்ஸ் (Agrivoltaics) என்னும் முறை உருவாகியுள்ளது.

Agrivoltaics – அக்ரி வோல்டாயிக்ஸ் என்றால் என்ன?

விவசாயம் மற்றும் சூரிய மின்சாரம் ஆகிய இரண்டு துறைகளின் இணைப்பே, அக்ரி வோல்டாயிக்ஸ் (Agrivoltaics) ஆகும். நிலத்தின் மேல் சற்று உயரத்தில் சூரிய ஒளி படும் வகையில், பலகை வடிவிலான மின்னுற்பத்தித் தகடுகளைப் பொருத்தி, மின்சாரத்தைத் தயாரிப்பதும், அவற்றின் கீழ் பயிர்களை வளர்ப்பதும் அக்ரி வோல்டாயிக்ஸ் ஆகும். இந்தத் தொழில் நுட்பம் மூலம்,  ஒரு நிலத்தில், மின்சார உற்பத்தி மற்றும் விவசாயத்தை, ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியும்.

அக்ரி வோல்டாயிக்ஸ் (Agrivoltaics) அமைப்பை நிறுவுதல்

இதை நிறுவுவதற்குச் சூரிய ஒளி நன்றாகக் கிடைக்கக் கூடிய, சமமான அல்லது சற்றுச் சரிவான நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த நிலம், நீர் வசதியுடன் விவசாயத்திற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து, சூரிய கதிர் வீச்சை மதிப்பீடு செய்து, நிலத்தின் பரப்பளவைக் கணக்கிட்டு, எவ்வகைப் பயிர்களை வளர்க்கலாம் என்பதை முடிவு செய்து, சூரிய மின்சக்திப் பலகைகளின் அமைப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.

சூரிய மின்சக்திப் (Agrivoltaics) பலகைகளை 2 முதல் 4 மீட்டர் உயரத்தில் அமைத்து, அவற்றுக்கிடையில் போதுமான இடைவெளி விட்டு, 30-50 சதவீதச் சூரிய ஒளி பயிர்களுக்குக் கிடைக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும்.

அதற்குப் பிறகு, இரும்பு அல்லது அலுமினியக் கட்டமைப்புகளை நிறுவி, காற்று மற்றும் மழையைத் தாங்கக்கூடிய வலுவான அடித்தளத்தை அமைக்க வேண்டும்.

சூரிய மின்சக்திப் பலகைகளைச் சரியான கோணத்தில் பொருத்தி, அதிக சூரிய ஒளி கிடைக்கும் திசையில் அமைத்து, மின்சார இணைப்புகளைக் கொடுக்க வேண்டும்.

நிழலில் வளரக்கூடிய பயிர்களைத் தேர்வு செய்து பயிரிட வேண்டும்.

நீர் வீணாவதைத் தவிர்க்க, சொட்டுநீர்ப்பாசன முறையைப் பயன்படுத்த வேண்டும்.

சூரிய மின்சக்திப் (Agrivoltaics) பலகைகள், மின்சார இணைப்புகள் மற்றும் பயிர்களின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

மின்சார உற்பத்தி மற்றும் பயிரின் விளைச்சலை மதிப்பீடு செய்தால் இலாபம் கிடைக்கும்.

பயன்கள்

கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவுகிறது.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நிலவளத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

சவால்கள்

ஆரம்ப முதலீடு அதிகமாக இருப்பதால் எல்லா விவசாயிகளும் உடனடியாகச் செயல்படுத்துவது சிரமமாக இருக்கும்.

அனைத்துப் பயிர்களுக்கும் இந்த முறை ஏற்றதாக இருக்காது. சில பயிர்களின் வளர்ச்சிப் பாதிக்கப்படலாம்.

பராமரிப்பும், தொழில் நுட்ப நுண்ணறிவும் அவசியம்.

அக்ரி வோல்டாயிக்ஸ் என்பது விவசாயத்திற்கும், மின்சக்தி உற்பத்திக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுகிறது. நிலத்தை வீணாக்காமல், அதிகபட்சப் பயனைப் பெற உதவுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாய வளர்ச்சி, மின்சாரத் தன்னிறைவு ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் அடைய உதவும் பயன்மிகு முறையாகும்.


ச.மோனிகாஸ்ரீ,

நான்காம் ஆண்டு மாணவி, இளங்கலை வேளாண்மை, ர.ராஜபிரியா, உதவிப் பேராசிரியர், உழவியல் துறை, ரோவர் வேளாண்மைக் கல்லூரி, வாலிகண்டபுரம், பெரம்பலூர்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • பழங்களைப் பாதுகாக்கும் ஓசோன் தொழில் நுட்பம்!

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • உணவுப் பொருள்களில் மறைந்திருக்கும் அஃப்ளாடாக்சின் நச்சு!

  • உலக மருத்துவ ஆய்வுகளில் கவனம் பெறும் பிரண்டை!

  • தானியங்களைக் காக்கும் ரேடியோ அலைத் தொழில் நுட்பம்!

  • உயிர்ம வேளாண்மைச் சான்றைப் பெறுவது எப்படி?

  • நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

  • சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

  • ஜப்பானிய காடை வளர்ப்பு – 1