My page - topic 1, topic 2, topic 3

மீன் குளத்தில் அசோலா வளர்ப்பு!

மீன் குளத்தில் அசோலா வளர்ப்பு!

சோலா என்பது, நீரின் மேற்பரப்பில் மிதந்து வளரும் பச்சை நிற நீர்த்தாவரம் ஆகும். இது, வேகமாக வளரக் கூடியது. இதில், 25-35 சதவீத அளவில் புரதம் இருப்பதால், இதை மீன்களுக்குத் துணைத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.

மீன் குளத்தில் அசோலாவை வளர்ப்பதன் பயன்கள்

  • மீன்களுக்கு இயற்கையான துணைத் தீவனமாகப் பயன்படும்.
  • வணிக நோக்கிலான தீவனச் செலவைக் குறைக்க உதவும்.
  • குறைந்த செலவில் குளத்திலேயே உற்பத்தி செய்யலாம்.
  • குளத்தில் கிடைக்கும் சத்துகளைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
  • அசோலா வேகமாகப் பெருகுவதால், தொடர்ந்து அறுவடை செய்யலாம்.
  • உபரி அசோலாவை, கோழி, வாத்து மற்றும் கால்நடைகளுக்குத் தீவனமாக இடலாம்.

அசோலா வளர்ப்புக்குத் தேவையானவை: குளம்

  • சுத்தமான நீருள்ள குளமாக இருக்க வேண்டும்.
  • குளத்தில் நீரோட்டம் மிதமாக இருக்க வேண்டும்.
  • அதிக அலை மற்றும் பலத்த நீரோட்டம் உள்ள பகுதிகளைத் தவிர்க்க வேண்டும்.
  • குளத்தின் ஓரத்தில் நீர் அதிகமாக அசையாத பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும்.

அசோலா வளர்ப்பு

  • அசோலா வளர்ப்புக்கு, தரமான, புதிய அசோலாவைப் பயன்படுத்த வேண்டும்.
  • அதிகளவில் நீர் அசையாமல் இருக்கும், குளத்தின் ஓரப்பகுதியில் அசோலா வளர்ப்பைத் தொடங்க வேண்டும்.
  • இதற்கு, புதிய அசோலாவை நீரின் மேற்பரப்பில் சமமாகப் பரப்பி விட வேண்டும்.

பகுதி நிழல்

  • அசோலாவின் நல்ல வளர்ச்சிக்கு, மிதமான சூரிய ஒளி மற்றும் பகுதி நிழல் அவசியமாகும்.
  • வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில், நிழலை ஏற்பாடு செய்வது நல்லது.

வளர்ச்சியைக் கண்காணித்தல்

  • அசோலா மிதந்து பரவி வளர்வதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
  • மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் உள்ள அசோலாவை மற்றும் அழுகிய அசோலாவை அகற்ற வேண்டும்.

நீரின் தரம் பராமரித்தல்

  • குளத்தில் அசோலா அதிகமாகத் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
  • நீரின் மேற்பரப்பு முழுவதும் அசோலா மூடாத வகையில், அவ்வப்போது அறுவடை செய்ய வேண்டும்.
  • நீரின் நிறம், நாற்றம் மற்றும் மீன்களின் செயலைக் கண்காணிக்க வேண்டும்.

அசோலா அறுவடை

  • அசோலா அதிகமாகப் பெருகியதும், கைகளால் அல்லது வலை மூலம் அறுவடை செய்யலாம்.
  • தொடர்ந்து வளர்வதற்கு ஏதுவாக, அசோலாவின் ஒரு பகுதியைக் குளத்தில் விட்டு விட்டு அறுவடை செய்ய வேண்டும்.

மீன்களுக்கு அசோலாவை இடும் முறை

  • புதிய அசோலாவை மீன்களுக்கு உணவாக இட வேண்டும்.
  • இந்த அசோலாவை அப்படியே குளத்தில் விடாமல், சுத்தமான நீரில் கழுவி, நறுக்கி, அளவாக இட வேண்டும்.
  • அசோலாவை நறுக்கி, வழக்கமான மீன் தீவனத்தில் கலந்து இடலாம்.
  • அசோலாவை உலர்த்திப் பொடியாக்கி, மீன் தீவனத்தில் சேர்த்து இடலாம்.
  • அசோலாவை, மீன்களுக்கான துணைத் தீவனமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சிறப்பான அசோலா வளர்ப்பு உத்திகள்

  • அசோலா வளர்ப்பை, மீன் வளர்ப்புக் குளத்தின் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு பகுதியில் தொடங்க வேண்டும்.
  • அதிகப்படியான அசோலாவைத் தொடர்ந்து அறுவடை செய்ய வேண்டும்.
  • குளத்து நீரின் தரத்தை முறையாகக் கண்காணிக்க வேண்டும்.
  • அழுகிய மற்றும் மஞ்சள், பழுப்பு, கருநிற அசோலாவை நீக்கிவிட வேண்டும்.
  • கூடுதலாக உள்ள அசோலாவை, உலர்த்திச் சேமித்து வைத்து, தீவனமாக இடலாம்.

முக்கியக் குறிப்புகள்

  • அசோலாவை அதிகமாக வளர விடக்கூடாது. ஏனெனில், நீரின் மேற்பரப்பு முழுவதையும் மூடினால், ஒளி மற்றும் வாயுப் பரிமாற்றம் பாதிக்கப்படும்.
  • எனவே, அதிகமாக இருக்கும் அசோலாவை, தொடர்ந்து அறுவடை செய்ய வேண்டும்.
  • உரத்தை அதிகமாக இடக்கூடாது. ஏனெனில், மாட்டுச்சாணம் அல்லது பிற கரிமப் பொருள்களை அதிகமாக இட்டால், குளத்து நீரின் தரம் பாதிக்கப்படும்.
  • மீன்களைத் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். மீன்கள் நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றைச் சுவாசிப்பது, சோர்வு அல்லது வழக்கத்துக்கு மாறான செயலில் இருப்பது தெரிந்தால், அசோலாவின் அளவு மற்றும் நீரின் தரத்தை உடனே சோதிக்க வேண்டும்.

இந்த அசோலா வளர்ப்புக் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, 88830 02428 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


ஷே.தாவூத் இப்ராஹிம்,

பெ.மங்கலதேவி, வேளாண்மை அறிவியல் நிலையம், விழுப்புரம்-II, காளசமுத்திரம், கள்ளக்குறிச்சி – 606 301.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • வன்னாமி இறாலைத் தாக்கும் வெள்ளை மலநோய்!

  • உவர்நீர் மீன் வளர்ப்பில் நோய்த்தடுப்பு முறைகள்!

  • செர்ரிபார்ப் மீன் வளர்ப்பு!

  • தொட்டியிலும் மீன் வளர்த்து வருமானம் பார்க்கலாம்!

  • உயிர்க் கூழ்ம முறையில் மீன் வளர்ப்பு!

  • பனையேறிக் கெண்டை மீன் வளர்ப்பு!

  • விரால் மீன் வளர்ப்பு!

  • மீன் வளர்ப்பில் தாதுகளின் அவசியம்!

  • நல்ல வருமானத்தைத் தரும் நெல்வயல் மீன் வளர்ப்பு!