My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

நிலவளம் காக்கும் மண்புழு உரம்!

மண்புழு

சாணம், இலை தழை போன்ற மட்கும் பொருள்களை உட்கொண்டு, மண் புழுக்கள் எச்சமாக வெளியேற்றும் சிறு சிறு உருண்டைகளே மண்புழு உரமாகும்.

மண்புழுக்கள் தேர்வு

அங்ககக் கழிவுகளில் அதிகளவில் பெருகும் தன்மை மற்றும் கழிவுகளை அதிகளவில் உட்கொண்டு செரித்து வெளியேற்றும் தன்மையுள்ள மண் புழுக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லாச் சூழ்நிலைகளிலும் வளரும் புழுக்களாக இருக்க வேண்டும். மேற்பரப்பில் வளரும் புழுக்கள்: இந்த மண் புழுக்கள், அனைத்துத் தட்ப வெப்ப நிலைகளிலும் வளரும்.

சற்றுக் கீழே வளரும் புழுக்கள்: இவை, மண்ணின் 30 செ.மீ. ஆழத்தில் வளரும். இவை மண்ணைத் துளைத்துச் செல்லும் தன்மை மிக்கவை. இதனால், மேல் மண்ணும் கீழ் மண்ணும் ஒன்றாகக் கலக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மண்ணின் கீழ்ப்பரப்பில் வளரும் புழுக்கள்: இவை, நிலத்தின் கீழ்ப்பரப்பில் 3 மீட்டர் ஆழத்தில் வளரும் தன்மை மிக்கவை.

மண்புழு உரம் தயாரித்தல்

நிலை – 1: கழிவுகளைச் சிறிய துண்டுகளாக மாற்றுதல். உலோகம், கண்ணாடி, பீங்கான் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களைப் பிரித்தல்.

நிலை – 2: கழிவுகளை மூட்டம் போடுதல். சாணக் கரைசலைத் தெளித்து 20 நாட்களுக்கு மட்க வைத்தல்.

நிலை – 3: மண்புழு உரப்படுக்கை தயாரித்தல். மண் புழுக்கள் துளைக்காத அளவில், தரையைக் கடினமாக அமைத்தல்.

நிலை – 4: மண் புழுக்களைப் பிரித்து எடுத்தல். மண்புழு உரத்தைச் சல்லடையில் சலித்தல். மட்காத கழிவை மீண்டும் மண்புழுப் படுக்கையில் இடுதல்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

நிலை – 5: சேகரித்த மண்புழு உரத்தை, அதிக வெய்யில் படாத மற்றும் காற்றோட்டம் உள்ள இடத்தில் சேமித்தல்.

மண்புழு உர உற்பத்திக்கான இடத்தேர்வு

மண்புழு உர உற்பத்திக்கான இடம், நிழல், அதிக ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சிமிகு இடமாக இருக்க வேண்டும்.

பயன்பாட்டில் இல்லாத மாட்டுத் தொழுவம், கோழிப்பண்ணை மற்றும் வேறு பண்ணைக் கட்டடங்களைப் பயன்படுத்தலாம்.

மண்புழு உரப்படுக்கையை, வெய்யில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்க, தென்னங் கீற்றுக் கூரையைப் பயன்படுத்தலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்புகள்

இரண்டடி உயரம் மூன்றடி அகலம் மற்றும் தேவையான நீளத்தில் சிமெண்ட் தொட்டியை அமைக்க வேண்டும்.

தொட்டியின் அடிப்பகுதி நீர் வடியும் வகையில் சாய்வாகவும், நீரைச் சேமிக்க உதவும் சிறு குழியுடனும் இருக்க வேண்டும்.

மண்புழு உர உற்பத்திப் படுக்கை

நெல் உமி, தென்னைநார்க் கழிவு, கரும்புத்தோகை போன்றவற்றில் ஒன்றை தொட்டியின் அடியில் 3 செ.மீ. உயரம் பரப்ப வேண்டும்.

அடுத்து, ஆற்று மணலை 3 செ.மீ. உயரம் பரப்ப வேண்டும்.

அடுத்து, தோட்டக்கால் மண்ணை 3 செ.மீ. உயரம் பரப்ப வேண்டும்.

பிறகு, இதன் மேல் நீரைத் தெளிக்க வேண்டும்.

கழிவுகளைப் படுக்கையில் இடுதல்

பாதியளவில் மட்கிய கழிவுகளை, 30 சதவீதக் கால்நடைக் கழிவுடன் கலக்க வேண்டும்.

இவற்றை, மண்புழு உரத்தொட்டியின் விளிம்பு வரை நிரப்ப வேண்டும்.

அடுத்து, உர உற்பத்திக்கான மண் புழுக்களைப் படுக்கையில் சமமாகப் பரப்பி விட வேண்டும்.

ஒரு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், அரை மீட்டர் உயரமுள்ள தொட்டிக்கு 2 கிலோ மண் புழுக்கள், அதாவது 2,000 மண் புழுக்கள் தேவைப்படும்.

நீரைத் தெளிக்கும் முறை

கழிவில் எப்போதும் 60 சதம் ஈரப்பதம் இருக்க வேண்டும்.

இதற்கு ஏற்ற வகையில் நீரைத் தெளிக்க வேண்டுமே தவிர ஊற்றக் கூடாது.

மண்புழு உரத்தைச் சேகரிப்பதற்கு முன் நீர்த்தெளிப்பை நிறுத்தி விட வேண்டும்.

மண்புழு உரத்தை ஊட்டமேற்றுதல்

மண்புழு உரத்தை, உயிர் உரங்கள் மூலம் ஊற்றமேட்டலாம்.

இதன் மூலம் நன்மை செய்யும் உயிரினங்கள் பெருகும்.

மண்புழுப் படுக்கையில் 20 நாட்களுக்கு ஒருமுறை, ஒரு டன் கழிவுக்கு ஒரு கிலோ அசோபாஸ் வீதம் சேர்க்கலாம்.

மண்புழு அறுவடை

மண்புழு உரப்படுக்கை மீதுள்ள மண்புழுக் கழிவை மட்டும், மண்புழுக்கள் தெரியும் இடம் வரை அறுவடை செய்ய வேண்டும்.

இப்படி வாரம் ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும்.

மண்புழுக்கள் அறுவடை

சிறிய மாட்டுச்சாணப் பந்துகளை, உரப்படுக்கையில் பல இடங்களில் வைக்க வேண்டும்.

பிறகு, சாணப் பந்துகளால் கவரப்படும் மண் புழுக்களை, அந்தப் பந்துகளை நீரில் கரைத்துப் பிரித்தெடுக்கலாம்.

மண்புழு உரத்திலுள்ள சத்துகள்

கரிமச்சத்து 9.5-11.98 சதம்,

தழைச்சத்து 0.5-1.5 சதம்,

மணிச்சத்து 0.1-0.3 சதம்,

சாம்பல் சத்து 0.15-0.56 சதம்,

சோடியம் 0.06-0.30 சதம்,

கால்சியம் + மெக்னீசியம் 22.67-47.6 மி.கி./100 கிராம்,

தாமிரச்சத்து 2-9.5 மி.கி./கிலோ,

இரும்புச்சத்து 2-9.3 மி.கி./கிலோ,

துத்தநாகம் 5.7-11.55 மி.கி./கிலோ,

கந்தகச்சத்து 128-5485 மி.கி./கிலோ.

மண்புழு உரச்சேமிப்பு

மண்புழு உரத்தை இருட்டறையில், 40 சதவீத ஈரப்பதத்தில், வெய்யில் படாத வகையில் பரப்பி வைக்க வேண்டும்.

விற்கும் சமயத்தில் மட்டும் பைகளில் நிரப்ப வேண்டும்.

மண்புழு உரத்தின் நன்மைகள்

மற்ற மட்கு உரங்களை விட மண்புழு உரத்தில் சத்துகள் அதிகமாக இருக்கும்.

நன்மை தரும் நுண்ணுயிரிகள் அதிகமாக இருக்கும்.

இந்த உயிரிகள் காற்றிலுள்ள தழைச்சத்தை ஈர்த்து, மண்புழு உரத்தில் நிலை நிறுத்தும்.

மேலும், பயிர்களுக்கு வேண்டிய வளர்ச்சி ஊக்கிகளையும் சுரந்து, மண்புழு உரத்தில் நிலை நிறுத்தும்.

கரையாமல் இருக்கும் மணிச்சத்தைக் கரைத்துக் கொடுக்கும்.

திடக்கழிவுகளில் உள்ள நச்சுப் பொருள்களின் தன்மைகள் மாற்றப்படும்.

மண்புழு உரப் பயன்பாடு

எக்டருக்கு 5 டன் மண்புழு உரத்தை இட வேண்டும்.

வளர்ந்த மரத்துக்கு 5 கிலோ மண்புழு உரத்தை இட வேண்டும்.

மண்புழு உரத்தை மண்ணுக்கு உள்ளே விழும் வகையில் இட வேண்டும்.

மண்ணுக்கு மேலாக இட்டால், அந்த உரத்திலுள்ள நன்மை தரும் நுண்ணுயிர்கள் வெய்யில் பட்டு இறந்து விடும்.

மண்புழு உரத் தயாரிப்பில் கவனிக்க வேண்டியவை

சரியான மண் புழுக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மண் புழுக்கள் வளர்வதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தேவைக்கு மேல் உள்ள புழுக்களை அகற்ற வேண்டும்.


வேளாண்மைத் துறை, தமிழ்நாடு அரசு.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • ஆண்டு முழுவதும் பயன் தரும் தீவனப் பயிர்கள்!

  • மானாவாரிக்கு ஏற்ற புதிய வீரிய ஒட்டு மக்காச்சோளம்!

  • தர்ப்பூசணியில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

  • நெற்பயிரைத் தாக்கும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்!

  • குறைந்த நீரில் கை கொடுக்கும் சிறுதானியங்கள்!

  • மா சாகுபடி சிறக்க உதவும் உயிர் உரங்கள்!

  • பாரம்பரிய நெல் இரகங்களுக்கு ஏற்ற பட்டங்கள்!

  • மலர் சாகுபடியில் மனம் போல் காசு பார்க்கலாம்!

  • மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்!