My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

சோனாலிகா டைகர் எலக்ட்ரிக் 2WD டிராக்டர் – முழு விவரங்கள்!

ந்திய வேளாண்மையில் ஒரு புதிய மாற்றத்தை வழங்கும் வகையில், சோனாலிகா நிறுவனம், தனது எலக்ட்ரிக் 2WD டிகர் என்ற, பேட்டரியில் இயங்கக் கூடிய டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது.

15 ஹார்ஸ் பவர் (HP) வகையில் வரையறுக்கப்பட்டுள்ள இந்த டிராக்டர், 9.46 PTO HP சக்தியுடன் இயங்கக் கூடியது. இது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பண்ணைகளுக்கு ஏற்றது.

என்ஜின் மற்றும் செயல்திறன்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

சோனாலிகா டைகர் எலக்ட்ரிக் 2WD டிராக்டர், 25.5 KW கொண்ட, தானாகவே கூலிங் செய்துகொள்ளக் கூடிய பேட்டரியைக் கொண்டிருக்கிறது. மணிக்கு 24.93 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் இயங்கும். ஜெர்மன் தொழில்நுட்பத்திலான இ-டிராக் மோட்டார், உயர் செயல்திறனை வழங்குகிறது. அதிக மணிநேரம் இயங்கினாலும் அவ்வளவு எளிதில் இயந்திரம் சூடாகாது. மேலும் டீசல், பெட்ரோல் டிராக்டர்களுக்கு ஆகும் செலவில், 75 சதவீதத்தை இந்த பேட்டரி டிராக்டர் மிச்சப்படுத்துகிறது.

ஹைடிராலிக்ஸ் மற்றும் லிஃப்டிங்

  • 500 கிலோ எடை வரை தூக்கி, இறக்கும் திறன் கொண்டது.
  • 2 லிவர்கள், PCDC அம்சத்துடன் கூடிய 3 பாயிண்ட் லிங்க்கேஜ் வசதி.
  • மிகவும் சீராகச் செயல்படக் கூடிய ஹைடிராலிக்ஸ் வசதி.
  • ஹைடிராலிக்ஸில் பராமரிப்புச் செலவுகள் மிகமிகக் குறைவு.

சுலபமான சார்ஜிங்

சோனாலிகா டைகர் எலக்ட்ரிக் டிராக்டரை, வீடுகளில் வைத்து சார்ஜ் செய்தால் 10 மணி நேரத்தில் முழு சார்ஜ் ஆகிவிடும். 4 மணிநேர ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருப்பதால் பயன்பாட்டுக்கு எளிதாக இருக்கும்.

பராமரிப்பு மற்றும் நம்பகத்தன்மை

சோனாலிகா டைகர் எலக்ட்ரிக் 2WD டிராக்டரின் எடை 820 கிலோ. 1,420 mm வீல் பேஸ் கொண்டது. இந்த டிராக்டருக்கு 5,000 மணிநேரம் அல்லது 5 ஆண்டுகள் வரை, அந்நிறுவனம் வாரண்டி வழங்குகிறது. 

ஏன் சோனாலிகா டைகர் எலக்ட்ரிக் 2WD?

  • சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காது. எரிபொருள் செலவு மிச்சமாகிறது.

  • மின்சாரம் மூலம் உயர் செயல் திறனில் இயங்கக் கூடியது.

  • விவசாயிகளுக்கான நம்பகத் தன்மை மற்றும் திருப்தியை அளிக்கிறது.

  • 4 மணிநேர விரைவு சார்ஜிங் மற்றும் 10 மணிநேரம் சாதாரண சார்ஜிங் வசதி கொண்டது.

  • பண்ணைச் செயல்பாடுகளுக்குச் சக்திவாய்ந்த PTO HP மற்றும் உயர்திறன் அம்சம்.

விலை மற்றும் EMI 

சோனாலிகா டைகர் எலக்ட்ரிக் 2WD டிராக்டர் விலை: ₹6,14,120 – ₹6,53,100*.

மாதாந்திர EMI ₹13,149 முதல் தொடங்குகிறது. 12 முதல் 84 மாதங்கள் வரையிலான வட்டி விகிதம் 13% – 22% வரை மாறும்.

சோனாலிகா டைகர் எலக்ட்ரிக் 2WD டிராக்டர், நவீன விவசாயத்திற்கான சிறந்த தீர்வாகும். சக்தி, செயல்திறன், பொருத்தம் மற்றும் குறைந்த பராமரிப்பு ஆகிய அனைத்தையும் ஒரே நுட்பத்தில் கொண்டிருக்கும் இது, இந்திய விவசாயிகளின் செயல்திறன் மற்றும் உற்பத்தியை மேம்படுத்தும் என்று நம்பலாம்.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!