My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


இன்னும் 10 ஆண்டுகளில் அசைக்க முடியாத சக்தியாக மாறும் வேளாண் தொழில்நுட்பம்!

ர்வதேச அளவில் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில், இன்னும் பத்து ஆண்டுகளில் வேளாண் தொழில்நுட்பமும் உபகரணங்களும் அசைக்க முடியாத சக்திகளாக மாறிவிடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அதன்படி தற்போதுள்ள சந்தை மதிப்பான, 128.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள், 2035 ஆம் ஆண்டுக்குள் 186.2 மில்லியனாக வளரும் என்பது அவர்களின் நம்பிக்கை. அதன்படி, இனி ஆண்டுக்கு சுமார் 3.8 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்கள்

  • உலகளவில் மக்கள் தொகை, நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், அதற்கேற்ப உணவுத் தேவையும் கூடுகிறது. இதனால், குறைந்த உழைப்பில் அதிகப்படியான உணவுப் பொருளை உற்பத்தி செய்ய நவீன இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.

  • கூலி ஆள் தட்டுப்பாடு, தண்ணீர்ப் பற்றாக்குறை, பண்ணைப் பராமரிப்புச் செலவு அதிகரிப்புப் போன்ற காரணங்களால் விவசாயிகள், துல்லிய சாகுபடி முறைக்கு மாறி வருகிறார்கள். அதனால் உபகரணங்களின் தேவையும் கூடுகிறது.

  • இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் வேளாண்மையை ஊக்குவிக்கும் திட்டங்கள் பெருகி வருகின்றன. கடனுதவிகள், மானிய உதவிகள் அதிகளவில் இருப்பதால் உபகரணங்களை வாங்குவதில், விவசாயிகளுக்குப் பெரிய சிரமம் ஒன்றுமில்லை.

2025 நிலவரப்படி பிராந்திய அடிப்படையிலான வளர்ச்சி

சந்தையில் முன்னணி நிறுவனங்கள்

விளம்பரம்:


ஜான் டீர் (John Deere), மகிந்திரா & மகிந்திரா, குபோட்டா (Kubota), CLAAS, CNH Industrial, AGCO Corporation, ISEKI, TAFE, Mitsubishi Mahindra, Bucher Industries, SDF, LEMKEN போன்றவை முன்னிலையில் உள்ள நிறுவனங்கள் ஆகும்.

என்னென்ன உபகரணங்கள் அதிகரிக்கும்?

  • டிராக்டர்கள், பவர் டில்லர்கள், ரோட்டாவேட்டர்கள், விதைப்பு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள், பிளவுகள், பாலர்கள்.

  • சொந்தமாக வாங்குவோரும் உண்டு. வாடகைக்கு விட்டு தொழில் நடத்துவோரும் அதிகரிப்பர். 

  • வடஅமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்கு ஆசியா, தென் ஆசியா & பசிபிக், மத்தியக் கிழக்கு & ஆப்பிரிக்கா நாடுகளில் விற்பனை கூடும்.

வேளாண் தொழில்நுட்பம் மற்றும் உபகரணச் சந்தையின் எதிர்காலம் வலுவாக இருக்கிறது என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். புதியத் தொழில்நுட்பங்களை வரவேற்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் உபகரணங்களைப் பயன்படுத்துவது, அரசின் ஊக்கத் திட்டங்கள் ஆகியவை, விவசாயிகளை நவீன வேளாண்மைக்கு நகர்த்தும் முக்கியக் காரணிகள்.

எனவே, 2035 ஆம் ஆண்டுக்குள் உலக வேளாண் தொழில்நுட்பம் மற்றும் உபகரணச் சந்தை, உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அசைக்க முடியாத சக்தியாக மாறும் என்பதில் ஐயமில்லை.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


மேலும் படிக்கலாம்:

  • ஜப்பானிய காடைகள்!

  • வறட்சிக்கு ஏற்ற வளமான நெல்லி!

  • கரிசல் நிலம்!

  • கத்தரி விதை உற்பத்தி!

  • பால் கறவையை முடக்கும் மடிவீக்க நோய்!

  • நெற்பயிரைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்கள்!

  • வறட்சியில் கை கொடுக்கும் சூபாபுல் தீவன மரம்!

  • மாடு வளர்க்க மலைப்பாக இருக்கிறதா?

  • நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை!