My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தேசிய விவசாயிகள் தினம் 2025!

தேசிய விவசாயிகள் தினம் 2025 (Farmers Day 2025)

வ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 ஆம் தேதி, இந்தியாவில் தேசிய விவசாயிகள் தினம் கடைபிடிக்கப் படுகிறது. இந்நாள், கிசான் திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

தேசிய விவசாயிகள் தினம் (Farmers Day2025

டிசம்பர் 23 ஆம் தேதியை விவசாயிகள் தினமாக அறிவித்ததற்கு காரணமே, நாட்டின் ஐந்தாவது பிரதமராக இருந்த செளத்ரி சரண் சிங்கின் பிறந்தநாள் என்பதே ஆகும். அவர், தனது ஆட்சிக் காலத்தில் கிராமப்புற பிரச்சினைகள் மற்றும் விவசாயிகளின் நலன்களில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார். அதற்காக உறுதியுடன் குரல் கொடுத்தவரும் ஆவார்.

அவரை கெளரவிக்கும் வகையிலும், நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மையில் விவசாயிகள் ஆற்றும் பெரும்பங்கை போற்றும் வகையிலும், 2001 ஆம் ஆண்டு முதல், டிசம்பர் 23 ஆம் தேதி, தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஆனால் மறைந்த செளத்ரி சரண் சிங்கிற்கு, கடந்த ஆண்டுதான் மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்து, அதை அவரது பேரனும், தற்போது மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவருமான ஜெயந்த் சிங் பெற்றார்.

இந்த நிலையில், தேசிய விவசாயிகள் தினத்தை பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் தள பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார். அதில், ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலன் விரும்பியாக இருந்தவர் பாரத ரத்னா விருது பெற்ற செளத்ரி சரண் சிங் என்று குறிப்பிட்டுள்ளார். ஏழைகள், விவசாயிகளின் நலன் விரும்பி என்றும் அவருக்கு எனது பணிவான அஞ்சலி என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, ”வளமான நாட்டிற்கான அன்னதாதாக்களுக்கு அதிகாரமளித்தல்” என்னும் தலைப்பில், தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் அன்னதாதா என்பது உணவு அளிப்பவர் என்னும் பொருளுடையது; அதாவது விவசாயி என்பதாகும்.

ஆண்டுதோறும் தேசிய விவசாயிகள் தினத்தில் மானியங்கள், பயிர்க் காப்பீடு, கடனுதவிகள் மற்றும் விவசாயிகளை ஊக்குவிக்கும் அரசு திட்டங்கள் நினைவுகூரப் படுகின்றன. அத்துடன், விளைபொருள்களுக்கு நியாயமான விலை, நிலைத்த – நீடித்த வேளாண்மைக்கான நடவடிக்கை, காலநிலை மாற்றம் மற்றும் வேளாண்மையில் ஏற்படும் பல்வேறு தாக்கங்கள் பற்றியும் சிந்தித்து தீர்வு காண வேண்டும் என்பதும் இந்நாளில் அரசுக்கு விவசாயிகள் வைக்கும் கோரிக்கையாக உள்ளது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145


farmers day | kisan diwas 2025 | farmers day 2025 | farmer day | kisan diwas | chaudhary charan singh | national farmers day 2025 | kisan divas | national farmer day | farmers day 2025 in india


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • மகசூல் உற்பத்தியில் தேனீக்களின் பங்கு!

  • பெரோமோன் மற்றும் ஒட்டும் பொறிகள் மூலம் பூச்சி மேலாண்மை!

  • வெற்றியைத் தரும் வெட்டிவேர் சாகுபடி!   

  • பால் தந்தால் தான் தரமான தீவனம் தருவீர்களா?

  • இயற்கை வேளாண்மை என்றால் என்ன?

  • விவசாயத்தில், திட்டமிடல், முதலீடு, உழைப்பு அவசியம்!

  • பயிர்களுக்குப் பயன்படும் மண்புழுக் குளியல் நீர்!

  • புண்ணாக்கு வகைகளில் உள்ள சத்துகள்!

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!