My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


விளைபொருள் மதிப்புக்கூட்டல்; இயந்திரங்கள் வாங்க மானியம்!

இயந்திரங்கள் வாங்க மானியம்

விவசாயிகள், தங்களது விளை பொருள்களை அவர்களே மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்த பயன்படும் இயந்திரங்கள் வாங்க அரசு மானியம் வழங்குகிறது.

இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசு 40 சதவீதமும் பங்களிக்கின்றன.

விளம்பரம்:


இந்த நிலையில், மதிப்புக்கூட்டல் இயந்திரங்களை வாங்குவதற்கு ஆகும் செலவில் 40 சதவீதம், அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகப்பட்ச மானியத் தொகை, இவற்றில் எது குறைவோ அதுதான் மானியாகக் கிடைக்கும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின சிறு-குறு விவசாயிகளுக்கு மட்டும் 20 சதவீதம் கூடுதலாக கிடைக்கும்.

இந்த திட்டத்துக்கு சென்னையைத் தவிர பிற மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்க முடியும். அறுவடை முடிந்ததில் இருந்து சந்தைப்படுத்தும் வரை, விளை பொருள்களை விவசாயிகள் பதனப்படுத்த உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

மேலும் விவசாயிகள் மட்டுமின்றி, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள், விவசாய பண்பாட்டுக் குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர்களும் இந்த மானியம் பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

எவற்றுக்கெல்லாம் மானியம்?

★ சிறியப் பருப்பு உடைக்கும் இயந்திரம்

★ சிறுதானியங்களில் உமி நீக்கும் இயந்திரம்

★ எண்ணெய்ப் பிழியும் செக்குகள்

★ பொருள்களை பாக்கெட் செய்ய உதவும் இயந்திரம்

★ நிலக்கடலை உடைக்கும் இயந்திரம்

★ தோல் நீக்கும் இயந்திரங்கள்

★ கதிரடிக்கும் இயந்திரங்கள்

★ பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கழுவும் இயந்திரங்கள்

★ அரவை இயந்திரங்கள்

★ மெருகூட்டும் இயந்திரங்கள்

★ சுத்தப்படுத்தி தரம் பிரிக்கும் இயந்திரங்கள்

அணுக வேண்டிய அலுவலர்

சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியல்:

இணைப்பு: https://aed.tn.gov.in/ta/phtmapproval/

விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்ய

இணைப்பு: phtm_application


தமிழக வேளாண்மைப் பொறியியல் துறை

இதர அரசு திட்டங்கள்…

பச்சை பூமி – ஆங்கிலப் பதிப்பு

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!