சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனுமந்தகுடியில் கறுப்புக்கவுனி விளைகிறது. மகசூல் காலம் 150-170 நாட்கள். செப்டம்பர்-ஜனவரியில் பயிரிடலாம்.
நேரடி விதைப்பு ஏற்றது. கறுப்புக்கவுனி நெல் 1 செ.மீ. நீளத்தில் கறுப்பாக இருக்கும். பசுந்தாள் உரம், தொழுவுரம் மட்டும் இட்டால் போதும். சாயாமல் விளையும். அதிகளவில் தூர் கட்டும்.
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
தேங்காய்ப் பாலுடன் கலந்து இனிப்புப் பண்டங்கள் செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது; சாப்பாடு செய்வதற்கு ஏற்றதல்ல. அதிகளவில் தூர் கட்டுவதால், மற்ற நெல் வகைகளை விட இதில் வைக்கோல் 150% அதிகமாகக் கிடைக்கும்.