தேவையான பொருள்கள்
பசுவின் சாணம் 5 கிலோ, பசுவின் கோமியம் 5 லிட்டர், பசும்பால் 1 லிட்டர், சுண்ணாம்பு 50 கிராம், நீர் 20 லிட்டர், நல்ல மண் 50 கிராம்.
பீஜாமிர்தம் தயாரிப்பு முறை
+ ஐந்து கிலோ சாணத்தைக் கைகளால் நன்றாகப் பிசைந்து, ஒரு துணியில் வைத்து மூட்டையாகக் கட்ட வேண்டும்.
+ இதை 20 லிட்டர் நீரில் வைத்து இரவு முழுவதும், அதாவது 12 மணி நேரம் ஊறவிட வேண்டும்.
+ அடுத்து, இதில் ஒரு லிட்டர் நீரை எடுத்து அதில் 50 கிராம் சுண்ணாம்பைச் சேர்த்து ஓர் இரவு முழுவதும் வைக்க வேண்டும்.
+ அடுத்து, அடுத்த நாள் காலையில் இந்த நீரில் பசுவின் சாணத்தை மூன்று முறை தொடர்ந்து பிழிந்து விட வேண்டும்.
+ பிறகு, இந்தக் கரைசலில் ஒரு கைப்பிடி மண்ணைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
+ அடுத்து, சுண்ணாம்புக் கரைசல் கலந்த நீரில் 5 லிட்டர் கோமியத்தைச் சேர்க்க வேண்டும்.
பிறகு, இந்தக் கரைசலில் ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து நொதிக்க விட்டால், பீஜாமிர்தக் கரைசல் தயாராகி விடும்.
+ மேலும் விவரங்களுக்கு, திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களை 04147 – 250001 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், திண்டிவனம் – 604 002.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



