நீர் பிரம்மி இலையைக் கொஞ்சமாக எடுத்து, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கிக்கொள்ள வேண்டும். இதை, உடலில் வீக்கமுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். பின்பு, வீக்கமுள்ள இடத்தில் துணியால் இறுக்கிக் கட்டிக்கொள்ள வேண்டும். இதனால் விரைவில் வீக்கம் குணமாகும்.
உடல் வலி, வீக்கம் உள்ளவர்கள் தொடர்ந்து நீர் பிரம்மி இலைகளை வதக்கிக் கட்ட வேண்டும்.
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
நீர்பிரம்மி இலையின் சாற்றைச் சாப்பிட்டு வந்தால், தொண்டைக் கரகரப்பு ஏற்படாது. தொண்டைக் கரகரப்பு உள்ளவர்கள், தொடர்ந்து நீர் பிரம்மிச் சாற்றைக் குடிக்க வேண்டும்.
நீர் பிரம்மி இலைகளைச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் தொடர்ந்து இந்த இலையைச் சாப்பிட்டு வந்தால் சரியாகி விடும்.