My page - topic 1, topic 2, topic 3

மீன் வளர்ப்பில் தாதுகளின் அவசியம்!

தாதுகள்

தாதுகள் அவற்றின் கனிம இயல்புகளால் வகைப்படுத்தப்பட்ட சேர்மங்களில் தனித்துவமான குழுவைக் கொண்டுள்ளன. எலும்பு, செதில், பற்கள், புறக்கூடு உருவாக்கம் மற்றும் உடலியக்கத்தில் பயன்படும் இவை, மீன் மற்றும் இறால் வளர்ச்சிக்கு மிகக் குறைவாகத் தேவைப்படுகின்றன.

மீன்கள் தமக்குத் தேவையான தாதுப் பொருள்களில் சிலவற்றை, நீரிலிருந்து செவிள்கள் மூலம் உறிஞ்சிக் கொள்கின்றன. நீரின் வெப்பநிலை, அமில காரத் தன்மை, நீரிலுள்ள தாதுகளின் அளவைப் பொறுத்து, இவற்றின் உறிஞ்சும் தன்மை வேறுபடும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தாதுகள், பெரிய தாதுகள் மற்றும் நுண் தாதுகள் என இரு வகைப்படும். கால்சியம், குளோரைடு, பாஸ்பரஸ், மக்னீசியம், சல்ஃபர், சோடியம், பொட்டாசியம் ஆகியன பெருந்தாதுகள்.

ஜிங்க், மாங்கனீசு, நிக்கல், காப்பர், இரும்பு, கோபால்ட், அயோடின், வனேடியம், மாலிப்டினம், குரோமியம், ஆர்செனிக், ப்ளூரைன், டின், சிலிக்கான், செலேனியம் ஆகியன நுண் தாதுகள். இவற்றில் முக்கியத் தாதுகளைப் பற்றிக் காண்போம்.

கால்சியம்

இது, மீன்களின் புறக்கூடு, செதில்கள், பற்கள் உருவாக்கம், இரத்தம் உறைதல், தசைகளின் இயக்கம், நரம்புகளில் செய்திப் பரிமாற்றம், சவ்வூடு பரவல் போன்ற உடலியல் செயல்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மீன் ணவில் 0.5 சதம், இறால் உணவில் 0.5-1.25 சதம் தேவை.

பாஸ்பரஸ்

இது, மீன்களின் எலும்பு, குருத்தெலும்பு, இறால்களின் புறக்கூட்டை உருவாக்கும் முக்கியத் தாதுவாகும். மேலும், பாஸ்ப்போ புரதங்கள், நியூக்ளிக் அமிலம், பாஸ்ப்போ லிப்பிடுகள், ஹெக்சோஸ் பாஸ்பேட்ஸ் ஆகியவற்றின் அவசிய மூலக்கூறாகும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

செல் வளர் சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் போன்ற செயல்களில் முக்கிய உயிரியல் பொருளாக உள்ளது. மீன்களின் உடல் திரவத்தின் அமில காரத் தொகுப்புச் சமநிலையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது மீனுக்கு 0.7 சதம், இறாலுக்கு 1-2 சதம் தேவை.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மெக்னீசியம்

இது, நொதிகளின் செயலை ஊக்குவித்தல், தசை மற்றும் நரம்புச் சுருக்கத்தைத் தூண்டுதல், கொழுப்பு, புரதம், கார்போ ஹைட்டின் வளர்சிதை மாற்றச் செயல்களுக்குத் தேவை. இது மீனுக்கு 0.05 சதம், இறாலுக்கு 0.1-0.3 சதம் தேவை.

சோடியம், குளோரைடு, பொட்டாசியம்

இவை, மீன்களின் உடல் திரவம் மற்றும் உடலின் மென் திசுக்களில் இருக்கும். உடலில் சவ்வூடு அழுத்தம் மற்றும் அமில காரச் சமநிலையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மீனுக்கு 0.1-0.3 சதம் சோடியம், 0.1-0.3 சதம் பொட்டாசியம், 0.1-0.5 சதம் குளோரைடு தேவை. இறாலுக்கு 0.2-0.6 சதம் சோடியம், 0.7-0.9 சதம் பொட்டாசியம் தேவை.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சல்ஃபர்

இது, சிஸ்டைன் மற்றும் மீத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்களில் அவசிய மூலக்கூறாகும். அதைப் போல, நறுமணச் சேர்மங்களின் நச்சு நீக்கலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மீனுக்கு 0.3-0.5 சதம் தேவை.

இரும்பு

இது, ஹீமோகுளோபின், மையோ குளோபின், சைட்டோ குரோம்களை உருவாக்கும் நொதிகளின் இயக்கம் மற்றும் கொழுப்பு ஆக்ஸிஜ னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, மீனுக்கு 50-100 மி.கி./கி.கி., இறாலுக்கு 70-300 மி.கி./கி.கி. தேவை.

ஜிங்க்

இது, கொழுப்பு, புரதம் மற்றும் கார்போ ஹைட்ரேட் வளர்சிதை மாற்றம், ஆர்.என்.ஏ மற்றும் புரத உருவாக்கம், காயங்களை ஆற்றுதல், வைரஸ் தடுப்பு, நோயெதிர்ப்பை அதிகரித்தல் போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, மீனுக்கு 30-100 மி.கி./கி.கி., இறாலுக்கு 90-110 மி.கி./கி.கி. தேவை.

மாங்கனீசு

இது, நொதிகளைத் தூண்ட, எலும்பு உருவாக, இரத்தச் சிவப்பு அணுக்களைப் புதுப்பிக்க, கார்போ ஹைட்ரேட் வளர்சிதை மாற்றம், இனப்பெருக்கச் சுழற்சிக்கு, எபிதீலியல் திசுக்களைச் சரி செய்ய, அமினோ அமில வளர்சிதை மாற்றம் மற்றும் குளுக்கோஸ் ஆக்ஸிஜ னேற்றம் ஆக உதவுகிறது. இது, மீனுக்கு 20-50 மி.கி./கி.கி., இறாலுக்கு 20-45 மி.கி./கி.கி. தேவை.

கோபால்ட்

இது, இரத்தச் சிவப்பு அணுக்கள், வைட்டமின் பி12 உருவாக, நரம்புத் திசுக்களைப் பராமரிக்க, பல்வேறு நொதிகள் உருவாவதை ஊக்குவிக்க உதவுகிறது. இது, மீனுக்கு 5-10 மி.கி./கி.கி., இறாலுக்கு 5-10 மி.கி./கி.கி. தேவை.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

காப்பர்

இது, குருதியாக்கம், இரும்பு வளர்சிதை மாற்றம், மெலெனின் மற்றும் தோல் நிறமி உருவாக்கம், எலும்பு மற்றும் நரம்புநார் உருவாவதில் பயன்படுகிறது. இது, மீனுக்கு 1000-4000 மி.கி./கி.கி., இறாலுக்கு 10-35 மி.கி./கி.கி. தேவை.

அயோடின்

இது, தைராய்டு சுரப்பிகளின் செயல்களில் முக்கியக் கூறாக உள்ளது. ஒட்டு மொத்த உடலியக்க வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. இனப் பெருக்கம், வளர்ச்சி, குருதியாக்கம் மற்றும் சுழற்சி, நரம்புத்தசை இயக்கம், வெப்பக் கட்டுப்பாடு ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, மீனுக்கு 100-300 மி.கி./கி.கி., இறாலுக்கு 30 மி.கி./கி.கி. தேவை.

செலினியம்

இது, மீன்கள் அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. பெராக்சைடுகளின் விளைவுகளில் இருந்து செல்களைப் பாதுகாக்கிறது. வைட்டமின் ஈ-யுடன் சேர்ந்து, உயிரியல் எதிர் ஆக்ஸிஜன் ஏற்றியாக இயங்கி, செல் மற்றும் துணைச் செல்களில் உள்ள பல்நிறைவுறா பாஸ்ப்போ புரதங்களைப் பாதுகாக்கிறது. பல்வேறு நொதிகளின் இணைக் காரணியாகச் செயல்படுகிறது. இது, மீனுக்கு 0.1-0.2 மி.கி./கி.கி. தேவை.


மீன் வளர்ப்பில் தாதுகளின் அவசியம்!

சு.பாரதி, டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி, பொன்னேரி. செரில் ஆண்டனி, மீன்வளக் கல்லூரி, தூத்துக்குடி. ர.சோமு சுந்தரலிங்கம், வளங்குன்றா மீன் வளர்ப்பு நிலையம், பாரூர்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • செர்ரிபார்ப் மீன் வளர்ப்பு!

  • தொட்டியிலும் மீன் வளர்த்து வருமானம் பார்க்கலாம்!

  • உயிர்க் கூழ்ம முறையில் மீன் வளர்ப்பு!

  • பனையேறிக் கெண்டை மீன் வளர்ப்பு!

  • விரால் மீன் வளர்ப்பு!

  • நல்ல வருமானத்தைத் தரும் நெல்வயல் மீன் வளர்ப்பு!

  • கூண்டுகளில் திலேப்பியா மீன் வளர்ப்பு!

  • உவர்நீர் மீன் வளர்ப்பு!

  • அலங்கார மீன் தொட்டிக்குத் தேவையான காற்றுப் புகுத்திகள்!