ஆத்தூர் கிச்சலி சம்பா வயது 135-145 நாட்கள். 164 செ.மீ. உயரம் வளரும். சம்பா பட்டத்தில், நாற்று விட்டு நடுவதற்கு ஏற்ற இரகம். 25-30 நாள் நாற்றுகளை நடலாம்.
நெல், இள மஞ்சள் நிறத்தில் நீளமாகவும், சன்னமாகவும் இருக்கும். அரிசி வெள்ளையாக இருக்கும். எக்டருக்குப் பத்து டன் மகசூல் கிடைக்கும்.
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
சாப்பாடு, இட்லி, தோசை மற்றும் பலகாரங்களுக்கு ஏற்றது. மிதமான பூச்சி, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பழைய சாதம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
குழந்தை பெற்ற பெண்களுக்குத் தாய்ப்பால் சுரக்க, உடல் நலம் காக்க, இந்த அரிசியைச் சமைத்துக் கொடுக்கலாம்.