My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

பவானி சம்பா!

வானி சம்பா நெல்லின் வயது 130-140 நாட்கள். 138 செ.மீ. உயரம் வளரும். சம்பா பட்டத்தில் நடவு முறையில் சாகுபடி செய்ய ஏற்றது. நெல் இள மஞ்சள் நிறத்தில் பெரிதாக இருக்கும். அரிசி, அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். தண்டுத் துளைப்பான் தாக்கும். நீர் அதிகமாகத் தேவைப்படும். எக்டருக்கு 4.95 டன் மகசூல் கிடைக்கும்.

இந்த அரிசியில், இட்லி, தோசை மற்றும் பலகாரங்கள், சாப்பாடு, பிரியாணி, கலவை சாதங்கள் செய்யலாம். நன்கு செரித்து உடலுக்குப் புத்துணர்வைத் தரும். சர்க்கரை மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைக்கும். இரும்புச்சத்து மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்தது.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!