My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

அக்.,3 முதல் விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான் திட்டம்!

விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான் திட்டம், அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கப்படுவதாக, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.

இந்த பிரசாரம், அக்டோபர் 18 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இதன் நோக்கம் விவசாயிகளுக்கும் வேளாண் விஞ்ஞானிகளுக்கும் நேரடித் தொடர்பை வலுப்படுத்துவதாகும் என்றும் அவர் கூறினார்.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளித்துப் பேசியபோது இவ்வாறு பேசிய செளகான், இந்த முயற்சியின் கீழ் ஆயிரக் கணக்கான வேளாண் விஞ்ஞானிகளும், வேளாண்மைத் துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் கிராமங்களுக்குச் செல்வார்கள் என்றார். அவர்கள் விவசாயிகளுடன் தொடர்புகொண்டு, அறிவைப் பகிர்ந்து, நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் விவசாய முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்  இதன் மூலம் உணவுத் தயாரிப்பு அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தின் பிரச்சாரம், விவசாயிகளை நீடித்த மற்றும் அறிவியல் அடிப்படையிலான சாகுபடி முறைகளை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் நீண்டகால வேளாண் வளர்ச்சி உறுதி செய்யப்படும் என்றார்.

மேலும், கடந்த மே மாதத்தில் நடைபெற்ற முந்தையப் பிரசாரத்தின் வெற்றியை நினைவு கூர்ந்த செளகான், அதில் 1.33 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் நிபுணர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பயனடைந்தாகக் கூறினார்.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!