My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இந்தியாவின் முக்கிய நாயினங்கள்!

இந்தியாவின் முக்கிய நாயினங்கள்! rajapalayam dog 1 e1787316483238 https://pachaiboomi.net/6795066e/

இந்தியாவில் பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நாயினங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றில், இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட நாய்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இராஜபாளையம்: தமிழ்நாட்டின் இராஜபாளையத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த நாய்கள், கம்பீரமான தோற்றம் மற்றும் விசுவாசத்துக்குப் பெயர் பெற்றவை. இவை, வாட்டசாட்டமான உடலுடன், வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்.

கோம்பை: இது, தமிழ்நாட்டில் காணப்படும் வலுவான மற்றும் உறுதியான இந்திய இனமாகும். இந்த நாய்கள், கச்சிதமான உடலமைப்பு மற்றும் குட்டையான முடியுடன் இருக்கும். பாதுகாப்புத் திறனுள்ள இந்நாய்கள், காவல் நாய்களாக விளங்கி வருகின்றன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சிப்பிப்பாறை: தமிழ்நாட்டின் சிப்பிப்பாறைப் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த நாயினம், வேட்டையாடவும், காவல் காக்கவும் பயன்படும் சைட் ஹவுன்ட் இனமாகும். இந்த நாய்கள் மெலிந்தும் தடகள உடல் கட்டமைப்பிலும் இருக்கும். மேலும், பழுப்பு நிறத்தில், குறுகிய முடியுடன் இருக்கும்.

முதோல் ஹவுன்ட்: இந்த நாய், கேரவன் ஹவுன்ட், மராத்தா ஹவுன்ட் என்றும் அழைக்கப்படும். இது, தக்காணப் பீடபூமிப் பகுதியில் வாழும் இந்திய சைட் ஹவுன்ட் இனமாகும். இந்த நாய்கள் விதிவிலக்கான வேகம், சுறுசுறுப்பு மற்றும் வேட்டையாடும் திறனால் பிரபலமாக உள்ளன.

இந்திய பரியா நாய்: இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட இந்த நாய்கள், சிறிய உடல் அமைப்பிலும், பல்வேறு நிறங்களிலும் இருக்கும்.

புல்லிக்குட்டா: இந்திய மஸ்திஃப், பாகிஸ்தானி மஸ்திஃப் என்றும் அழைக்கப்படும் இந்த நாயினம், பெரிய உருவம், தசையமைப்பு மற்றும் சக்தி வாய்ந்த தோற்றமிக்கது. அதனால், இந்த நாய்கள் காவல் நாய்களாக விளங்கி வருகின்றன. இவை, விசுவாசம் மற்றும் பாதுகாப்பு உணர்வால் பிரபலமாக உள்ளன.

காடிக்குட்டா: இமயமலைப் பகுதியில், குறிப்பாக, இமாச்சலப் பிரதேசத்தில் காணப்படும் இந்த நாயினம், கால்நடைகளை மேய்க்கப் பயன்படுகிறது. இந்த நாய்களின் தோல், குளிரைத் தாங்கும் வகையில் தடிமனாக இருக்கும்.

இந்தியன் ஸ்பிட்ஸ்: இந்த இனம் பொமரேனியனை ஒத்திருந்தாலும், அளவில் சற்றுப் பெரிதாக இருக்கும். தடித்த முடியைக் கொண்ட இந்த நாய்கள், நரியைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். வளர்ப்போரிடம் நட்பாகவும் பாசமாகவும் இருக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ராம்பூர் கிரே ஹவுன்ட்: இது, டெல்லிக்கும் பரேலிக்கும் இடையில் உள்ள ராம்பூர் பகுதியைச் சேர்ந்த பார்வை வேட்டை நாயினம். இந்த நாய்கள், ஆப்கானிஸ்தான் ஹவுன்ட்ஸிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. ராம்பூர் கிரே ஹவுன்ட் குட்டை முடியைக் கொண்ட, சக்திமிக்க பார்வை வேட்டை நாய்களான இவை, தோற்றத்தில் ஸ்லோகியைப் போல இருக்கும். இவை, தமது பிறப்பிடத்துக்கு வெளியே அரிதாகவே உள்ளன.

பகர்வால் நாய்: இது, லடாக் மற்றும் இந்தியாவின் பிர்பஞ்சால் மலைத்தொடரில் வாழும் பழங்கால இந்திய நாயினம். பகர்வால் குஜ்ஜார் நாடோடிப் பழங்குடி மக்கள், தங்களின் கால்நடைகளைப் பாதுகாக்கும் நோக்கில் பல நூற்றாண்டுகளாக இந்த நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்த நாய்கள் இந்தியாவில் இருந்தாலும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் குறைந்தளவில் உள்ளன.

ஜோனாங்கி: இது, ஜோனாங்கி ஜாகிலம் அல்லது கொள்ளேட்டி ஜாகிலம் என்றும் அழைக்கப்படும் இந்திய நாயினம். இந்த நாய்கள், பிரிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேசம், கர்நாடகத்தின் சில பகுதிகள் மற்றும் மேற்கு வங்கம் முதல் தமிழ்நாடு வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதியில் பரவலாக உள்ளன.

ஒரு காலத்தில் மேற்குக் கோதாவரி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கொல்லேரு ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக இருந்தன. மிகவும் குறுகிய மற்றும் மெல்லிய முடியுள்ள இந்த நாய்கள், வேட்டையாட, கால்நடைகளை மேய்க்க உதவுகின்றன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

கைக்காடி: இது, இந்தியாவில் வாழும் சைட் ஹவுன்ட் இனம். இந்த நாய்கள், மராட்டியம் மற்றும் குஜராத்தின் சில பகுதிகளில் உள்ள நாடோடிப் பழங்குடி மக்களால் வளர்க்கப்படுகின்றன. 38-46 செ.மீ. உயரம், 20 கிலோ எடையில் இருக்கும். நீண்டு மெலிந்த கால்கள், சக்திமிக்க தொடைகள், நீண்டு குறுகிய வால், நீண்டு மெலிந்த தலை, கண்கள் மற்றும் நிமிர்ந்த காதுகளுடன் இந்த நாய்கள், வெள்ளை, பழுப்பு, கறுப்பு நிறங்களில் இருக்கும்.

இந்த இந்திய நாய்களைத் தவிர, Labrador Retrievers, Golden Retrievers, German Shepherds, Beagles, Pugs, Boxers போன்ற, பிரபலமான சர்வதேச நாய் இனங்களும், இந்தியாவில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.


மரு.ஆர்.இராஜ்குமார்,

மரு.எம்.முத்துலட்சுமி, கால்நடை உற்பத்திப் பொருள்கள் தொழில் நுட்பத்துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • வீட்டுப் பூனைக்கு உணவளிக்கும் முறை!

  • கன்னி நாய் வளர்ப்பு!

  • நாய்க்குட்டிக்குக் கற்பிக்க வேண்டிய பத்து மந்திரங்கள்!

  • நாய்களில் உண்டாகும் உடல் பருமன்!

  • வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்ற சிறிய நாய்கள்!

  • நாய்க் குட்டிகள் பராமரிப்பு!

  • பூனைகளில் இனப்பெருக்க மேலாண்மை!

  • உங்க நாய்க்குட்டியை இப்படி வளர்த்துப் பாருங்களேன்!

  • நாய்களின் கல்லீரலைத் தாக்கும் நோய்கள்!