My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

சீரகச் சம்பா!

சீரகச் சம்பாவின் வயது 125-135 நாட்கள். 134 செ.மீ. உயரம் வளரும். சம்பா பட்டத்தில், நாற்று விட்டு நடலாம். வெப்ப மண்டலத்தில் பயிரிட ஏற்றது. நீர்த் தேங்கிய பகுதிகளில் நன்கு விளையும். மிதமான நோயெதிர்ப்புத் தன்மை மிக்கது. எக்டருக்கு ஆறு டன் மகசூல் கிடைக்கும்.

நெல், குட்டையாக, மிகச் சன்னமாக இருக்கும். அரிசி, வைக்கோல் நிறத்தில், நல்ல வாசம் மற்றும் சுவையுடன் இருக்கும். பிரியாணிக்கு மிகவும் உகந்தது. பச்சை அரிசியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், புற்றுநோய்த் தடுப்பாக விளங்கும். இதய இயக்கம் சீராகவும், கெட்ட கொழுப்பை நீக்கவும், மலச்சிக்கலைப் போக்கவும், செரிமானம் சிறக்கவும் உதவும்.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!