காட்டுயானம் என்னும் கட்டுடை ஓணான் நெல்லின் வயது 130-140 நாட்கள். 169 செ.மீ. உயரம் வளரும்.
ஏழடி உயரம் வளர்ந்து யானையையும் மறைக்கும் என்பதால், இதற்கு இப்பெயர் வந்துள்ளது. சம்பா பட்டத்தில் நடவு மற்றும் நேரடி விதைப்புக்கு ஏற்றது. பள்ளக்காடுகளில் நன்கு வளரும். பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மை மிக்கது. களையைக் கட்டுப்படுத்தும். நெல், மஞ்சள் நிறத்தில் மோட்டாவாக இருக்கும். அரிசி, அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். எக்டருக்கு 5.40 டன் மகசூல் கிடைக்கும்.
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
மண் பானையில் சமைத்து, பழைய சோறாக வைத்து, மறுநாள் காலையில் நீராகாரத்தையும் சாதத்தையும் தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு குணமாகும். இதன் பச்சரிசிக் கஞ்சியில் கறிவேப்பிலையைப் சேர்த்து, மறுநாள் காலை உண்டால் புற்றுக் கட்டிகள் ஆறும்.