My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

ஆனைக் கொம்பன்!

னைக் கொம்பன் நெல் வயது 140-150 நாட்கள். 156 செ.மீ. உயரம் வளரும். நெல்லின் நுனியில் யானைக் கொம்பைப் போல் மேல் நோக்கி வளைந்த முள் இருப்பதால், ஆனைக் கொம்பன் எனப்படுகிறது.

நெல், இள மஞ்சள் நிறத்தில் நீளமாகவும் சன்னமாகவும், அரிசி, பாசுமதி அரிசியைப் போலவும் இருக்கும். சாப்பாட்டுக்கு மிகவும் ஏற்றது.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

எக்டருக்குப் பத்து டன் மகசூலைத் தரும். சம்பா பட்டத்தில் நடவு செய்ய ஏற்றது. மிதமான வறட்சியைத் தாங்கி வளரும். நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மகசூலைத் தரும். பூச்சி மற்றும் நோயெதிர்ப்பு சக்தி மிக்கது.

இந்தச் சோறு, நன்கு செரிக்கும். மலச்சிக்கல் நீங்கும். உடல் துர்நீர் வெளியேற, நரம்புகள் பலம் பெற உதவும். சாதம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருப்பதால், பயணக் காலங்களில் கட்டுச் சோறாகப் பயன்படுத்தலாம்.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!