விருது விவரம்
தேசிய கோபால் ரத்னா விருது 2025 சான்றிதழ், ரொக்கப் பரிசு, நினைவுப் பரிசு.
விருது வழங்கும் துறைகள்
மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் (Department of Animal Husbandry & Dairying)
விருதின் நோக்கம்
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
பால் உற்பத்தியில் சிறப்பான சாதனைகளைச் செய்த விவசாயிகள், பால் கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண் உற்பத்தி அமைப்புகள் மற்றும் செயற்கைக் கருவூட்டல் வல்லுநர்களை ஊக்குவிப்பது. குறிப்பாக, உள்நாட்டுக் கால்நடை இனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது.
விண்ணப்பிக்கும் முறை
- 2025 செப்டம்பர் 15 – ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- awards.gov.in என்னும் இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
- தேசியப் பால் தினமான நவம்பர் 26 – ஆம் தேதி விருது வழங்கப்படும்.
ரொக்கப் பரிசு
- முதல் இடம்: ரூ.5 இலட்சம்.
- இரண்டாம் இடம்: ரூ.3 இலட்சம்.
- மூன்றாம் இடம்: ரூ.2 இலட்சம்.
- வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கான சிறப்புத் தொகை: ரூ.2 இலட்சம்.
மேற்கூறிய விருதுக்குத் தகுதியுடைய விவசாயிகள் மற்றும் அமைப்புகள் விண்ணப்பித்துப் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தகவல்: மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம்.