சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்குக் கால்நடை வளர்ப்பில் 25 நாட்கள் சிறப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியுதவியுடன் நடைபெறும் இப்பயிற்சி, வெற்றி நிச்சயம் என்னும் திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது.
பயிற்சி
வெள்ளாடு வளர்ப்பு
பால் உற்பத்தித் தொழில்
செம்மறியாடு வளர்ப்பு
ஜப்பானியக் காடை வளர்ப்பு
நாட்டுக்கோழி வளர்ப்பு
முக்கிய அம்சங்கள்
பயிற்சி காலம்: 25 நாட்கள்
தினசரி 8 மணிநேரம்
பங்கேற்பாளர்கள்: மாதத்திற்கு 25 பேர்
வயது வரம்பு: 18 முதல் 35 வரை
தகுதி: பள்ளிப் படிப்பு / ஐ.டி.ஐ. / பட்டயப் படிப்பு / பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வருகை பதிவு: தினமும் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்
நலன்கள்:
பயணப் படியாக ரூ.6,000 வழங்கப்படும்
விடுதியில் தங்குபவர்களுக்கு தினசரி ரூ.250 வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை
பதிவு செய்ய: http://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/1481
கடைசி நாள்: இம்மாத இறுதி வாரம்
தொடர்புக்கு
தொலைபேசி: 04286-266345, 266650
மொபைல்: +91 99430 08802
வேல்முருகன், பேராசிரியர் மற்றும் தலைவர், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம்