My page - topic 1, topic 2, topic 3

ஜல்லிக்கட்டும் காளைகள் வளர்ப்பு!

ஜல்லிக்கட்டும் காளைகள் வளர்ப்பு!

ல்லிக்கட்டு என்பது, பொங்கல் விழாவுடன் இணைந்தது. ஏறு தழுவுதல் என்பது, காலப்போக்கில் ஜல்லிக்கட்டாக மருவியதாகக் கூறப்படுகிறது. இந்த வீர விளையாட்டு, திண்டுக்கல், திருச்சி, கோவை, புதுக்கோட்டை, மதுரை என்று நடந்தாலும், அலங்கா நல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு தான் பிரபலமானது.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்தே, ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அவர்கள் பயன்படுத்திய நாணயங்களைக் காளையின் கொம்பில் கட்டி விடுவர். காளையை அடக்குவோர், அந்தக் கொம்பில் கட்டியிருக்கும் நாணயங்களை எடுத்துக் கொள்ளலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பழந்தமிழ் இலக்கியங்களிலும், சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறு தழுவுதல் நடந்ததற்கான சான்றுகள் உள்ளன. புதுதில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பதுகாக்கப்படும் சிந்துவெளி நாகரிகம் சார்ந்த திரையொன்றில், ஒரு காளை உருவமும், அதை அடக்க முயலும் வீரரை அந்தக் காளைத் தூக்கி எறிவதும், உயிரோட்டமாகச் சித்திரிக்கப்பட்டு உள்ளன.

ஏறு தழுவுதலை, விலங்குகளைத் துன்புறுத்துவதாகக் கருதுவோரும், தேவையற்ற உயிரிழப்பும் காயங்களும் ஏற்படுவதாகக் கருதுவோரும், வழக்குகளைத் தொடுத்து வருகின்றனர். விலங்குகள் நல ஆர்வலர்கள், இந்திய நல வாரியம், பீட்டா (PETA), இந்திய நீலச்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளும் இதில் அடக்கம்.

ஜல்லிக்கட்டின் சிறப்பு

உலகெங்கும் தமிழர்களால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை என்றாலே, நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு தான். அந்த ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப்பது தனிக் கலையாகும். போருக்கு ஆட்களைத் தயார் செய்வதைப் போல, ஜல்லிக்கட்டுக் காளைகளைப் பார்த்து பார்த்து வளர்க்கிறார்கள். சில மாடுகள், சீண்டியதும் பாய்ந்து விடும். சில மாடுகள் சலனமே இல்லாமல் பார்த்தபடியே நிற்கும், மாடுபிடி வீரர்கள் நெருங்கி வரும் போது சீற்றம் கொள்ளும். சில மாடுகள் பயங்கரமாகத் துள்ளிக் குதிக்கும். ஆனால், பிடிபட்டதும் அடங்கி விடும்.

ஜல்லிக்கட்டில் இருவகை உண்டு. ஒன்று, வாடிவாசல் அமைத்து ஒவ்வொரு காளையாக விரட்டுவது. மற்றது, வெளிவிரட்டு என்னும் திறந்த வெளியில் மாடுகளை அவிழ்த்து விடுவது. வாடிவாசல் என்பது, ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடமாகும். இவ்வாசலைத் தாண்டுவதற்கு முன், காளைகளின் மூக்குக்கயிறு உள்ளிட்ட அனைத்துப் பிணைப்புகளையும் அகற்றி விடுவர்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஜல்லிக்கட்டின் வகைகள்

வாடி மஞ்சு விரட்டு: இவ்வகை மஞ்சு விரட்டு, மதுரை, புதுக்கோட்டை, தேனி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இதில், வாடிவாசல் வழியே காளை விடப்படும். அப்போது, ஒருவர் மட்டும் தாவி அதன் திமிலைப் பிடித்துக் கொண்டு, குறிப்பிட்ட தூரம் செல்ல வேண்டும். அப்படிச் சென்று விட்டால், அந்த வீரர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். காளையை ஒருவர் மட்டுமே அடக்க வேண்டும்.

வேலி மஞ்சு விரட்டு: இவ்வகை மஞ்சு விரட்டு, மதுரை, மானாமதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. காளையின் மூக்குக் கயிற்றை அவிழ்த்து விடுவார்கள். காளை எந்தத் திசையில் வேண்டுமானாலும் ஓடலாம். வீரர்கள் அதனை அடக்க வேண்டும்.

வடம் மஞ்சு விரட்டு: வடம் என்றால் தமிழில் கயிறு என்று பொருள்படும். 15 மீட்டர் சுற்றளவில் கயிற்றைக் கட்டி, அந்த வட்டத்துக்குள் நடைபெறுவது வடம் மஞ்சு விரட்டு. 7-8 பேர் கொண்ட குழுவினர், ஒரு காளையை முப்பது நிமிடங்களில் கட்டுப்படுத்த வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஜல்லிக்கட்டின் விதிமுறைகள்

போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்கள் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுவர். காளைகளை, வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விட வேண்டும். திமிலை மட்டுமே வீரர்கள் பிடிக்க வேண்டும். கொம்பு, கழுத்து, வால் ஆகியவற்றைப் பிடிக்கும் வீரர்கள் ஆட்டத்தை விட்டு நீக்கப்படுவர்.

எல்லைக்கோட்டை மாடு தாண்டும் வரை, அந்த மாட்டின் திமிலைப் பிடித்திருக்கும் வீரரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். காளையை ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும். எல்லோரும் பிடித்தால், காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். காளையை அடிக்கவோ, எவ்விதத்திலும் துன்புறுத்தவோ கூடாது.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு என, காளைகளுக்கும் வீரர்களுக்கும், தனித்தனியே தேர்வு நடைபெறும். அதில், தகுதி பெற்றால் மட்டுமே, ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியும்.

காளை வளர்ப்பும் தேர்வு முறையும்

பெரும்பாலும், புலிக்குளம், காங்கேயம், மயிலைக்காளை, கூளைக்கொம்பன், ஆலம்பாடி, உம்பளாச்சேரி, பர்கூர் மலைமாடு காளைகள் தான் ஜல்லிக்கட்டில் பங்கு பெறுகின்றன. காளைகளின் தரம், நெற்றிச்சுழி, உடல் மற்றும் முதுகுச்சுழி, வாலமைப்பு, முக அமைப்பு, முதுகு அமைப்பு மற்றும் தோலமைப்பை வைத்து, காளைகள் தேர்வு செய்யப்படுகின்றன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சுழியைப் பார்த்தே கன்றுகளை வாங்குகின்றனர். இது, நம் முன்னோர் வழியில் பெறப்பட்ட அறிவாகும். அதிலும், நெற்றி மற்றும் நடு முதுகில் சுழியுள்ள மாடுகளையே அதிகம் வாங்குகின்றனர். ஆறு மாதம் முதல் ஓராண்டுக்கு உட்பட்ட கன்றுகளைத் தான் பெரும்பாலும் வாங்குகின்றனர். ஏனெனில், கன்றுகளுக்குப் பயிற்சி அளிக்கச் சரியான வயது ஆறு மாதமாகக் கருதப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக் காளையின் உணவு முறை

ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு, ஆற்றல், வலிமை, செயல் திறன் ஆகியன மிகவும் முக்கியம். அதற்கு, தரமான, சரியான, சமநிலை உணவுகளை அளிக்க வேண்டும். ஏனெனில், உணவின் மூலம் தான், அவற்றின் உடல் வலிமை மற்றும் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க முடியும். காளைகள் வலிமையுடன் இருப்பதற்கான உணவு முறைகளைப் பார்க்கலாம்.

பசுந்தழை (Green Fodder): பசுந்தழை, காளைகளின் முக்கியமான உணவாகும். பசுந்தழையில் மெல்லின கார்போஹைட்ரேட், நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இவற்றின் மூலம், காளைகளுக்குச் சீரான எரிசக்திக் கிடைக்கிறது. இதற்காக, காளைகளுக்கு, கோரைக்கிழங்கு, நேப்பியர் புல், கம்பு, சோளம் ஆகியன தரப்படுகின்றன.

உயர் சத்துத் தீவனம் (Concentrated Feeds): காளைகள் வலிமையுடன் இருக்க, புரதச்சத்து நிறைந்த தீவனங்கள் முக்கியம். இவ்வகையில், கடலை, கொள்ளு, காராமணி, எண்ணெய்க் கொட்டைகள், சோளமாவு ஆகியன இடப்படுகின்றன. இவை, எரிசக்தி மற்றும் புரதச்சத்தை வழங்குகின்றன.

மினரல் மற்றும் வைட்டமின் சத்து: காளைகளின் ஒட்டு மொத்த நலத்துக்கு, மினரல் மற்றும் வைட்டமின்கள் குறைவின்றிக் கிடைக்க வேண்டும். கார்பனேற்றச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் A, D போன்றவை, காளைகளின் எலும்புகள் மற்றும் தசைகள் சீராக வளர்ந்து வலிமையுடன் இருக்க உதவுகின்றன.

கீரைகள் மற்றும் மூலிகைகள் (Herbs and Greens): சில மூலிகைகள் மற்றும் கீரைகள், ஜல்லிக்கட்டுக் காளைகளின் உடல் சூட்டையும் ஆற்றலையும் அதிகரிக்க உதவுகின்றன. முருங்கைக்கீரை, செம்பருத்தி இலை, புதினா போன்றவை, நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் செயல் திறன் மேம்பட உதவுகின்றன.

குடிநீர் (Water): குடிநீர், மிக முக்கிய உணவுக்கூறாகும். காளைகளுக்குத் தினமும் போதியளவில் குடிநீர் வழங்கப்பட வேண்டும். இது, உடல் வெப்ப நிலை மற்றும் செரிமானம் சீராக இருக்க உதவுகிறது.

சிறப்பு உணவுகள்: சில பேர், காளைகளின் ஆற்றலுக்காக, சிறப்பு உணவுகள், மாத்திரைகள் மற்றும் தானியங்களைக் கொடுப்பார்கள். கருப்பட்டி, உளுந்து மூலம் பலவிதச் சத்துகள் கிடைக்கும். ஒரு காளைக்கு, கடலைப்பொட்டு 500 கிராம், பருத்தி விதை, துவரை மாவு 250-500 கிராம், உளுந்தங் குருணை 500 கிராம் வீதம் தரலாம்.

சிலர், ஜல்லிக்கட்டுக் காலத்தில் முத்துச் சோளத்தைக் காளைகளுக்குத் தருகின்றனர். இதில், கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதால், வாழ்நாள் முழுவதும் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. சிலர், காளைகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.

ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள்

நீச்சல் பயிற்சி, மண் மற்றும் மரக்கட்டையைக் குத்துதல் பயிற்சி, வாடி அமைத்தல் பயிற்சி, வடம் போடுதல் பயிற்சி, நடைப்பயிற்சி.

உடற்பயிற்சி: ஜல்லிக்கட்டுக் காளைகளுக்குத் தினமும் கடும் பயிற்சிகள் தரப்படுகின்றன. இவற்றில், ஓட்டம், குதித்தல், தாக்குதல் போன்றவை அடங்கும். இவை, காளைகளின் தசை வளர்ச்சியை அதிகரிக்க, உடல் திறனை மேம்படுத்த உதவுகின்றன.

வலிமைப் பயிற்சி: காளைகளுக்கு, கயிறு இழுத்தல், தரையில் முட்டி, மண்ணைக் குத்துதல் போன்ற பயிற்சிகளும் தரப்படுகின்றன. இவை, காளைகளின் வலிமையைக் கூட்ட, தாக்குதல் திறனை மேம்படுத்த உதவுகின்றன.

உணவு: ஜல்லிக்கட்டுக் காளைகளுக்குச் சத்தான உணவு அளிக்கப்படுகிறது. இதில், தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகள் அடங்கும். இவை, காளைகளின் உடல் நலம் மேம்படவும், உடல் திறன் கூடவும் உதவுகின்றன.

பராமரிப்பு: ஜல்லிக்கட்டுக் காளைகள் நன்கு பராமரிக்கப்படுகின்றன. இதில், குளித்தல், உடலை நீவி விடுதல், மருத்துவப் பரிசோதனை போன்றவை அடங்கும். இவை, காளைகளின் உடல் நலம் மேம்பட, காயங்கள் ஏற்படாமல் இருக்க உதவுகின்றன.

குறிப்பு: ஜல்லிக்கட்டுக் காளைகளின் பயிற்சி மற்றும் பராமரிப்பு முறைகள் மாறுபடலாம். மேலும், காளைகளின் வயது, உடல்நிலை மற்றும் திறன் ஆகியவற்றைப் பொறுத்து, பயிற்சிகள் தனித்தனியாகத் திட்டமிடப்படுகின்றன.


PB_Dr.Usha Kattuppakkam

முனைவர் சு.உஷா, கே.கிருத்திகா, கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை, சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை – 600 007.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • பழ ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

  • சங்க இலக்கியத்தில் காட்டப்படும் யாடும் ஆடும்!

  • தேனீக்கள் மூலம் கிடைக்கும் பொருள்கள்!

  • ரேபிஸ் என்னும் வெறிநோயும் தடுப்பு முறையும்!

  • மூங்கில் குருத்தின் மருத்துவக் குணங்கள்!

  • சுகாதாரமாகப் பால் கறக்கும் முறை!

  • சத்துகள் செறிவூட்டப்பட்ட பயிர் வகைகள்!

  • துரியன் பழத்தின் மருத்துவக் குணங்கள்!

  • வருக மஞ்சளின் சிறப்புகள்!