My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

துரியன் பழத்தின் மருத்துவக் குணங்கள்!

துரியன் பழம்

துரியன் பழம், மருத்துவத் தன்மை மிக்க பழங்களில் ஒன்று. இதன் வாசம் வெறுக்கும் வகையில் இருக்கும். ஆனால், சாப்பிடத் தொடங்கி விட்டால் இது தெரியாது. இந்தத் துரியன் பழம் மற்றும் இலையில் மருத்துவக் குணங்கள் உள்ளன.

துரியன் பழத்தின் சத்துகள்

துரியன் பழத்தில், கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்பு, ரிபோஃப்ளேவின், கார்போ ஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உள்பட பல சத்துகள் உள்ளன.

இதில், வாழைப் பழத்தில் இருப்பதை விட, பத்து மடங்கு கூடுதலாக, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் உள்ளன.

நூறு கிராம் பழத்தில் உள்ள சத்துகள்

நீர்ச்சத்து: 69.99 கிராம்

ஆற்றல்: 147 கிலோ/ கலோரி

புரதச்சத்து: 1.47 கிராம்

கொழுப்புச்சத்து: 5.33 கிராம்

சாம்பல் சத்து: 1.22 கிராம்

ரிபோஃப்ளேவின்: 0.200 மி.கி.

மாங்கனீசு: 0.325 மி.கி.

கரோட்டின்: 24 மை.கி.

கால்சியம்: 6.000 மி.கி.

நியாசின்: 1.074 மி.கி.

துத்தநாகம்: 0.280 மி.கி.

மக்னிசியம்: 30.00 மி.கி.

போலிக் ஆசிட்: 36 மை.கி.

துரியன் பழம்: நன்மைகள்

துரியன் பழத்தைச் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.

நகங்களில் ஏற்படும் நோய்த் தொற்றை, துரியன் வேர் கட்டுப்படுத்தும்.

துரியன் பழத்தில் உள்ள மாங்கனீசு, நீரிழிவைக் கட்டுக்குள் வைக்கும்.

துரியன் வேர் மற்றும் இலைகளைக் கொதிக்க வைத்துக் குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

துரியன் பழத்தில் உள்ள வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் கால்சியம், மூட்டுகள், எலும்புகள் நலமாக இருக்க உதவும்.

துரியன் பழத்தில் உள்ள இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம், இரத்தச் சோகை குணமாக உதவும்.

துரியன் பழத்தில் உள்ள ஃபைரிடாசின், மன இறுக்கம் அகல உதவும்.

துரியன் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், குறைந்த இரத்த அழுத்தம் சரியாகும். தைராய்டு சுரப்பி சீராக இயங்கும்.

துரியன் பழத்தில் ரிபோஃப்ளேவின் இருப்பதால், ஒற்றை தலைவலிக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

துரியன் பழத்தில் பாஸ்பரஸ் இருப்பதால், பற்கள் வலுவாக இருக்கும்.

துரியன் பழத்தில் நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் சரியாகும்.

துரியன் பழத்தைப் பெண்கள் சாப்பிட்டு வந்தால் கருப்பை வலுவாகும்.

துரியன் பழத்தை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், விந்தணுக்கள் பெருகும்.

துரியன் பழத்தில் தயமின், நியாசின் இருப்பதால் நன்றாகப் பசி எடுக்கும்.

துரியன் பழத்தோலை அரைத்துத் தடவினால், சொறி, சிரங்கு குணமாகும்.


துரியன் பழத்தின் மருத்துவக் குணங்கள்! DR.A.RAJKUMAR https://pachaiboomi.net/5646-32/

ஆ.இராஜ்குமார்,

கோ.மதன்குமார், தோட்டக்கலைத் துறை, மதர் தெரசா வேளாண்மைக் கல்லூரி, இலுப்பூர், புதுக்கோட்டை மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • தமிழ்நாட்டின் முக்கியமான அணைகள்!

  • தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள்!

  • நம்பிக்கையும் அறிவியலும் சந்திக்கும் ஆடிப்பட்டம்!

  • மண்ணின் அணுவுயிர் மாயங்கள்!

  • அழகுக்கு அழகு சேர்க்கும் போதோஸ் செடிகள்!

  • சரியான உத்திகளைக் கடைப்பிடித்தால் இலாபம் பார்க்கலாம்!

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • உணவுப் பொருள்களில் மறைந்திருக்கும் அஃப்ளாடாக்சின் நச்சு!

  • உலக மருத்துவ ஆய்வுகளில் கவனம் பெறும் பிரண்டை!