My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

ரூ.2 இலட்சம் பரிசுடன் நம்மாழ்வார் விருது!

யிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை, நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கி ஊக்குவித்து வருகிறது தமிழ்நாடு அரசு. 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில், ஆண்டுதோறும் மூன்று விவசாயிகள் தேர்வு செய்யப்படுவர்.

2025 – 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டும் மாநில அளவில், மூன்று உயிர்ம விவசாயிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு, தலா ரூ.2 இலட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம், சான்றிதழ் மற்றும் பதக்கம் கிடைக்கும்.

நம்மாழ்வார் விருது பெறத் தகுதிகள்

  • குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் உயிர்ம வேளாண்மையைச் செய்பவராக இருக்க வேண்டும்.
  • முழுநேரமும் உயிர்ம விவசாயத்தைக் கையாண்டு வர வேண்டும்.
  • குறைந்தது 3 ஆண்டுகள் உயிர்ம வேளாண்மையில் இருப்பவராக இருக்க வேண்டும்.
  • மேலும், உயிர்ம விவசாயம் செய்ததற்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

  • www.tnagrisnet.tn.gov.in/ என்னும் இணையதளத்திற்குள் சென்று விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 15.09.2025
  • பதிவுக் கட்டணம்: ரூ.100
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

மேலும் தகவல்களுக்கு, அருகிலுள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையம் (Agricultural Extension Centre) அல்லது மாவட்ட வேளாண் அலுவலகத்திற்குச் சென்று கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

உயிர்ம வேளாண்மை செய்வோர், தங்களின் உழைப்பையும், சாதனைகளையும் மாநில அளவில் கொண்டு சேர்க்க இதுவொரு சிறந்த வாய்ப்பாகும்.


தகவல்: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

உங்கள் கருத்து?