எவ்வளவு அழுத்தம் வந்தாலும் விவசாயிகளுக்குத் தீங்கு ஏற்பட விட மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பின் செயல்களை மனதில் வைத்து அவர் இவ்வாறு பேசினார்.
ஆமதாபாத் மண்ணில் வைத்துச் சொல்கிறேன்; அழுத்தங்களைத் தாங்கும் அளவிற்கு, தமது அரசு வலிமையைத் தொடர்ந்து அதிகரிக்கும் என்றார்.
நாட்டு மக்கள் நலன்களே தனக்கு முக்கியம் என்ற மோடி, சிறுதொழில் முனைவோர், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் என்று யாரும், எதற்கும் அஞ்ச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக, விவசாயிகளுக்குத் தீங்கு ஏற்படுவதைத் தமது அரசு வேடிக்கைப் பார்க்காது என்று மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், நம் நாட்டைக் குறிவைக்கும் பயங்கரவாதிகளையும் அவர்களின் எஜமானர்களையும், அவர்கள் எங்கு மறைந்திருந்தாலும் இந்தியா விட்டுவைக்காது என்று கூறிய அவர், அதற்கு பயங்கரவாதிகளை வெறும் 22 நிமிடங்களில் அழித்த, பஹல்காம் தாக்குதலே சாட்சி என்றும் பேசினார்.
गुजरात सहित देशभर के अपने लघु उद्यमियों, दुकानदारों और किसान एवं पशुपालक भाई-बहनों को मैं यह आश्वस्त करना चाहता हूं कि मोदी के लिए आपका हित सर्वोपरि है। pic.twitter.com/zMoG8ylyxp
— Narendra Modi (@narendramodi) August 25, 2025