My page - topic 1, topic 2, topic 3

பார்த்தீனியக் களை மேலாண்மை!

பார்த்தீனியக் களை மேலாண்மை!

பார்த்தீனிய நச்சுக் களை 1955-ஆம் ஆண்டு வெளிநாட்டுத் தானியங்களில் கலந்து, இந்தியாவுக்குள் வந்து இறங்கியது. எல்லா வகையான சூழ்நிலையிலும் வளரும் திறனுள்ள இச்செடி, தற்போது இந்தியா முழுவதும் பரவி, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவித்து வருகிறது. இந்தக் களைச்செடி, தமிழகத்தின் அனைத்துப் பொது இடங்கள் மற்றும் நிலப்பரப்புகளில் அதிகமாகப் பரவி வளர்ந்து கிடக்கிறது.

ஒருமுறை பார்த்தீனியச் செடி உற்பத்தியாகி விட்டால், ஏழு பருவங்களுக்கு, மழை, வறட்சி என, எதையும் தாங்கி வளரும். ஒரு செடி 624 மில்லியன் மகரந்தங்களை உற்பத்தி செய்யும். இச்செடி ஆண்டுக்கு மூன்று முறை வளரும். இதன் விதைகள், காற்றின் மூலம் எளிதாகப் பரவும். ஒரு செடியிலிருந்து 10,000 விதைகள் உருவாகும். விதைகள் நீண்ட காலம் வரை, நூறு சத முளைப்புத் திறனில் இருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் முளைத்து வளரும்.

பார்த்தீனியக் களை மேலாண்மை

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பார்த்தீனிய விதைகள் முளைக்கு முன்பும், முளைத்த செடிகள் பூப்பூத்து விதைகள் உருவாகு முன்பும் கட்டுப்படுத்த வேண்டும். இதனால், விதைகள் முற்றி மேலும் பரவாமல் தடுக்கலாம்.

விதைகள் முளைக்கு முன் கட்டுப்படுத்துதல்

பார்த்தீனிய விதைகள் முளைப்பதைத் தடுக்க, மழைக்காலத்தில் மண்ணில் போதுமான ஈரம் இருக்கும் போது, எக்டருக்கு 2.5 கிலோ அட்ரசின் களைக்கொல்லி வீதம் எடுத்து, 625 லிட்டர் நீரில் கலந்து, கைத்தெளிப்பான் மூலம், நிலத்தில் சீராகத் தெளிக்க வேண்டும்.

செடிகள் பூக்குமுன் கட்டுப்படுத்துதல்

செடிகளை அகற்றி எரித்தல்: பார்த்தீனியச் செடிகள் பூப்பதற்கு முன், கையுறை அணிந்து அல்லது ஏதாவது கருவி மூலம் வேருடன் செடிகளை அகற்றி எரித்தால், விதைகள் உண்டாகிப் பரவுவதைத் தடுக்கலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

களைக்கொல்லித் தெளிப்பு: ஒரு லிட்டர் நீருக்கு 200 கிராம் சமையல் உப்பு மற்றும் 2 மி.லி. டீப்பால் அல்லது சோப்புத் திரவம் வீதம் கலந்து, நல்ல வெய்யில் நேரத்தில், செடிகள் முழுவதும் நனையும்படி, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஒரு லிட்டர் நீருக்கு 2,4-டி (பெர்னாக்சோன்) 10 கிராம் அல்லது கிளைப்போசேட் 15 மில்லியுடன், அம்மோனியம் சல்பேட் 20 கிராம் + சோப்புத் திரவம் 2 மி.லி. அல்லது மெட்ரிபுசின 4 கிராம் வீதம் கலந்து, வளர்ந்த பார்த்தீனியச் செடிகள் முழுவதும் நனையும்படி, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

உயிரியல் முறைக் கட்டுப்பாடு: தரிசு நிலங்களில் அடர் ஆவாரை மற்றும் துத்தி வகைச் செடிகளைப் போட்டிச் செடிகளாக வளர்ப்பதன் மூலம், பார்த்தீனியத்தின் வளர்ச்சியைக் குறைக்கலாம்.

வண்டுகள் மூலம் அழிக்கும் முறை: பார்த்தீனியச் செடியைத் தின்று அழிக்கக் கூடிய சைக்கோகிரம்மா பைக்கல்ரேட்டா என்னும் வண்டுகளைப் பெருமளவில் வளர்த்து, பார்த்தீனியச் செடிகள் வளரும் இடங்களில் விட்டு, அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பார்த்தீனியச் செடிகள் பூத்தபின் கட்டுப்படுத்துதல்

செடிகள் பூத்த பின்பும் களைக்கொல்லிகளைத் தெளிக்கலாம். ஆனால், செடிகள் முற்றிலும் அழியாது. இந்நிலையில் விதைகள் காற்றில் பறப்பதற்கு முன், பூத்த செடிகளைக் கையுறை மூலம் அகற்றி எரிக்க வேண்டும்.


பார்த்தீனியக் களை மேலாண்மை!

முனைவர் ந.சதீஸ்குமார், முனைவர் இரா.ஜெயஸ்ரீனிவாஸ், முனைவர் ப.துக்கையண்ணன், முனைவர் ஆ.அழகேசன்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • பழ ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

  • சங்க இலக்கியத்தில் காட்டப்படும் யாடும் ஆடும்!

  • தேனீக்கள் மூலம் கிடைக்கும் பொருள்கள்!

  • ரேபிஸ் என்னும் வெறிநோயும் தடுப்பு முறையும்!

  • மூங்கில் குருத்தின் மருத்துவக் குணங்கள்!

  • சுகாதாரமாகப் பால் கறக்கும் முறை!

  • சத்துகள் செறிவூட்டப்பட்ட பயிர் வகைகள்!

  • துரியன் பழத்தின் மருத்துவக் குணங்கள்!

  • வருக மஞ்சளின் சிறப்புகள்!