My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

சுவர்ணதாரா கோழிகள்!

ர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், கிரிராஜாக் கோழியை உற்பத்தி செய்தது. கிரிராஜாக் கோழிகள் முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் பயன்படுகிறது.
2005 ஆம் ஆண்டில் முட்டை உற்பத்திக்காக மட்டுமே சுவர்ணதாரா என்னும் கோழியினம் உருவாக்கப்பட்டது. கிரிராஜா இனத்தை விட 15-20 முட்டைகளை அதிகமாக இடும். சுவர்ணதாராக் கோழி உருவத்தில் சிறியது. அதனால் தனது எதிரிகளான நரி, பூனையிடமிருந்து காத்துக் கொள்ளும்.
இந்தக் கோழி 22-23 வாரத்தில் பருவத்திற்கு வரும். கோழி 3 கிலோ, சேவல் 4 கிலோ இருக்கும். ஆண்டுக்கு 180-190 முட்டைகளை இடும். முட்டை பழுப்பு நிறத்தில் 55-60 கிராம் இருக்கும். ஒருநாள் குஞ்சின் எடை 35-40 கிராம். குஞ்சுப் பொரிப்புத்திறன் 80-85% ஆகும். கோடையில், முட்டைகளை 8-10 நாட்களும், குளிர்காலத்தில் 15 நாட்களும் பாதுகாத்து வைக்கலாம். ஆனால், இந்தக் கோழி அடை காக்காது.
அதன் முட்டைகளை நாட்டுக்கோழி அல்லது குஞ்சுப் பொரிப்பான் மூலம் பொரிக்க வைக்கலாம். நாட்டுக்கோழி வளர்ப்பில் 10 பெட்டைக்கு ஒரு சேவல் இருக்க வேண்டும். ஆனால், சுவர்ணதாராக்கோழி வளர்ப்பில் 5 பெட்டைக்கு ஒரு சேவல் இருக்க வேண்டும். இந்தக் கோழி சிவப்பாக இருக்கும்.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!