My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

மனித முகம் போல பிறந்த ஆட்டுக்குட்டி – ஊர்வாசிகள் அதிர்ச்சி!

உளுந்தூர்பேட்டை:

ள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் (38) என்ற விவசாயி, தனது வீட்டில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று, இவரது ஆடுகளில் ஒன்று, 2 குட்டிகளை ஈன்றது. அதில் ஒன்று சாதாரணமாகவும், அடுத்து பிறந்த குட்டி, மனிதனைப் போன்றும் பிறந்ததால், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆட்டுக்குட்டியின் தோற்றம்

  • மனித முக அமைப்பைப் போல கண்கள், மூக்கு, வாய்.

  • உடல் அமைப்பும் மனிதனைப் போலவே இருந்தது. 

  • ஒரு குழந்தை குப்புறப் படுத்தால் எவ்வாறு இருக்குமோ அப்படியொரு தோற்றம்.
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

ஆனால் அந்த அதிசய ஆட்டுக்குட்டி பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டது.

மக்கள் எதிர்வினை

இதுபோன்ற பிறப்புகள் புதிதல்ல

  • அண்மையில் மேற்கு வங்கத்தில் உள்ள பர்தாமன் மாவட்டத்தில், இதுபோல விகாரமாக ஒரு கன்றுக்குட்டிப் பிறந்து, 4 மாதங்களில் இறந்தது.

  • அந்தக் கன்றை உள்ளூர்வாசிகள் தெய்வமாகவே வணங்கினர்.

  • உலகில் பல இடங்களில் ஆடு, மாடு, குதிரை போன்றவை, இப்படி வினோதமாகப் பிறப்பது புதிதல்ல.

விநோதமாகப் பிறக்க என்ன காரணம்?

1. சைக்ளோபியா (Cyclopia)

  • அரியப் பிறவிக் குறைபாடு.

  • முக அமைப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் செயலிழந்ததால் ஏற்பட்ட விளைவு.

  • சுமார் 16,000 விலங்குகளில் ஒன்று இப்படி பிறப்பது எதார்த்தம்!

2. கருவில் நீர்ச்சேமிப்பு நோய் (Fetal Anasarca)

  • கருவில் அதிகப்படியான நீர் சேர்வதால் முகம், கால்கள் உள்பட உடல் வீங்கி விகாரமாகத் தோற்றம் பெறும்.

  • உயிர்ப் பிழைப்பதுக் கடினம்.

மூட நம்பிக்கைகள்

  • இவ்வாறான பிறப்புக்கு மனிதன் காரணமாக இருக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

  • மனிதனும் ஆடு, மாடும் முற்றிலும் வேறுபட்ட ஜீவராசிகள் என்பதால், மூட எண்ணங்கள் வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அறிவியல் ரீதியாக இதுவொரு மரபணு அல்லது கருவில் ஏற்படும் குறைபாடே ஆகும். ஆனால், அந்தக் கிராம மக்களுக்கு என்னவோ, இது கடவுளின் சாபம்  என்று அச்சம் உள்ளது.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

உங்கள் கருத்து?