கைவரச் சம்பா நெல்லின் வயது 140-150 நாட்கள். 158 செ.மீ. உயரம் வளரும்.
எல்லாக் காலத்திலும், வறட்சி, வெள்ளத்தைத் தாங்கி வளரும். பூச்சி மற்றும் நோய்கள் தாக்காது. நெல், மஞ்சள் நிறத்தில், குறைந்த நீளத்தில் மோட்டாவாக இருக்கும். அரிசி, சிவப்பு நிறத்தில் இருக்கும். இட்லி, தோசை, அவல், இடியாப்பம், பலகாரங்கள் செய்ய உகந்தது. எக்டருக்கு 5.40 டன் மகசூல் கிடைக்கும்.
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
சுண்ணாம்பு, மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம், இரும்பு உள்ளிட்ட தாதுகள் நிறைந்தது. கரு வளர்ச்சிக்குத் தேவையான போலிக் அமிலம் மற்றும் எதிர்வினை ஆற்றிகள் நிறைந்த அரிசி. நரம்பு சார்ந்த நோய்களை நீக்கும்.