My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

உங்கள் நிலங்களில் இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்ய விருப்பமா?

ங்கள் நிலங்களில் இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட வனத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சை வன விரிவாக்கச் சகரக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சை மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில், வனத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

அந்த வரிசையில், 2022-23 ஆம் நிதியாண்டில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்கள் இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்ய விரும்பினால், கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டோ, வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சலில் தகவல் அனுப்பியோ முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யும்போது, தேவையான மர வகைகள் மற்றும் கன்றுகளின் எண்ணிக்கையுடன், ஆதார் எண், சர்வே எண் ஆகியவற்றையும் குறிப்பிட்டு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புக்கு:

வனச்சரக அலுவலர்,

வனவிரிவாக்கச் சரகம்,

தஞ்சாவூர்.

தொலைபேசி எண்: 97510 04588

மின்னஞ்சல்: thanjavurfedmu@gmail.com

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும். அதேவேளையில், பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், இதேபோல மரக்கன்றுகளை வனத்துறையிடம் இருந்து பெற விரும்பினால் அந்தந்த மாவட்ட வனத்துறை அலுவலகத்தை அணுகலாம் என்று வனத்துறை அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது.


வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

உங்கள் கருத்து?